{♥}33{♥}

6.8K 172 169
                                    

  வாசலில் யாரோ நிற்பதைப் போல உணர திரும்பிப் பார்த்தான் சிவ்னேஷ்.

    நாற்பது வயதினைத் தாண்டிய பெண்மனி கண்களில் நீர் ததும்ப நின்றிருந்தார்.

    அவரைப் பார்த்ததும் அவனுள் ஏதோ ஒரு உணர்வு நெருட, யாரென்று புரியாமல் அங்கில் யாரோ வந்திருக்கிறார்கள் என்றான்.

   வாம்மா என்று சதியின் தந்தை அவரை உள்ளே அழைக்க, அவரோ சிலைபோல் நடந்தார்.

   இது சிவ்னேஷ் என்று அறிமுகப் படுத்தினார்.

    அண்ணா.... என்று சிவ்னேஷைப் பார்த்து அழ ஆரம்பித்தார் அந்த வயதான பெண்மனி.

  சிவ்னேஷிற்கும், மட்சியாவிற்கும் யாரென்று புரிந்துவிட அவர்கள் கண்களும் அருவியாகின.

    மூவரும் ஒருவரை ஒருவர் கட்டித் தழுவினர். பிறகு அனைவரும் ஈஸ்வரின் குடும்பத்தைக் காணச் சென்றனர்.

   வயதான ஒருசிலர் மட்டும் போட்டோக்களில் சிரித்திருந்தனர். மற்ற அனைவரும் சிவ்வையும், மட்சியாவையும் பார்த்து ஆனந்தமாகினர். ஈஸ்வரும், சதியும் திரும்ப வந்துவிட்டதை எண்ணி எண்ணி அகம் மகிழ்ந்தனர். மறுபடியும் அவர்கள் வீடு பல ஆண்டுகளுக்குப் பிறகு விழாக்கோலம் பூண்டது.அவர்கள் குடும்பத்தில் புதிதாய் வந்திருந்த உறவுகள் கூட ஈஸ்வர், சதியினைப் பற்றி நன்கு தெரிந்து வைத்திருந்தார்கள்.

    இவர்கள் ஈஸ்வரையும் சதியையும் மறக்கவும் இல்லை, அவர்கள் இறந்து விட்டார்கள் என்று எண்ணவும் இல்லை.அவர்களுடன் இருப்பதாகவே எண்ணி வாழ்ந்து வந்தனர். அதற்கான பலனாகத் தான் இன்று அவர்கள் சிவ்னேஷையும், மட்சியாவையும் பார்த்தது. இவர்களின் அன்பும் அவர்களின் மறுஜென்மத்திற்கு காரணம் தான். உண்மையான அன்பு எங்கிருந்தாலும் அது எத்துனை துயரம் வந்தாலும் வென்றுவிடும் என்பதை உணர்த்தி விட்டார்கள் என்று சதியின் தந்தை மட்சியாவின் தந்தையிடம் கூறி கண் கலங்கினார்.

    அட என்னங்க... சிறு பிள்ளை போல் கண் கலங்கிக் கொண்டு.... இனி ஆக வேண்டியதைப் பார்போம்.

   மதனாவிற்கும் விசயம் தெரிந்து மட்சியாவை காண ஓடோடி வந்தாள். அனைத்து உண்மைகளையும் தெரிந்து வாயடைத்துப் போனாள்.

   ஏய் மட்சியா ... செம்மடி.... லவ் பன்றவங்க ஒரே ஜென்மத்திலயே ஒன்னா சேர்ந்து வாழ மாட்றாங்க. கல்யாணம்ளு ஒன்னு ஆனாதுமே சண்டை, மிஸ் அண்டர் ஸ்டேண்டிங்னு பிரியற இந்த காலத்தில அடுத்த ஜென்மமே எடுத்து ஒன்னா சேர்ந்திருங்கீங்கன்னா...! அப்பப்பா... உங்க காதல்....  எப்பவும் நீயும் சிவ்னேஷும் சந்தோஷமா இருக்கனும்... என்று அவள் பேசிக் கொண்டே போனாள்.
   சிவ்னேஷையும் விடாமல் அவள் பங்கிற்கு கிண்டல் செய்து ஒருவழி பண்ணிவிட்டாள்.

     ஒரு நல்ல நாளில் கூடியிருந்த பெரியவர்களின் ஆசியோடும்,ஜென்ம பந்தத்தை உருவாக்கிய அன்போடும், அதற்கு வரம் தந்த கடவுளின் துணையோடும் மட்சியாவை ஏழேழு ஜென்மத்திற்கு சொந்தமாக்கினான்.

     ஒரு வழியாய் என் உயிர் என்னிடமே வந்து சேர்ந்து விட்டது...என்றான் சிவ்னேஷ்.

    ம்...ம்... அப்படியா??

    ம்... இப்போ.... நாம ஈஸ்வர் சதியா மாறலாமா??

   என்ன...?

  நீ எனக்கு பண்ண அதே சத்தியம் உனக்காக நான் இப்போ...

  நீ எனக்கு பண்ண அதே சத்தியம் உனக்காக நான் இப்போ

Oops! This image does not follow our content guidelines. To continue publishing, please remove it or upload a different image.

     ஒன்று மட்டும் மாற்றம்.... உன் கணவனாய் மட்டும் இல்லாமல் உன் தாயாகவும் இருப்பேன்... ஏழு அல்ல... எத்துனை ஜென்மங்கள் எடுத்தாலும்.

    உங்களுக்கு எல்லாமே நினைவிருக்கிறதா??

    ம் எல்லாம் இருக்கிறது.... இன்னும் ஒன்றுகூட...

    அது என்ன?? என்றவளை அருகே இழுத்து நெற்றியில் முத்தமிட்டு.... இதுதான்.... என்று சிரித்தான்.

    அந்த ஜென்மத்தில் முடியாமல் முடிந்து போன வாழ்க்கையை இப்போது முடிவில்லாத ஆரம்பமாய் தொடர்ந்தனர் சிவ்னேஷ்♥மட்சியா என்கின்ற ஈஸ்வரும் ♥ சதியும்....

     உண்மையாய் காதலித்துப் பாருங்கள் இயற்கையும் உங்கள் காதலுக்கு உதவி செய்யும்.... ♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥
       நன்றி......♡♡♡

🎉 You've finished reading உன்னைச் சேர்ந்திடவே மீண்டும் பிறந்தேன்..... 🎉
உன்னைச் சேர்ந்திடவே மீண்டும் பிறந்தேன்.....Where stories live. Discover now