♥○●28●○♥

2.1K 106 17
                                    

       அனைவரும் மகிழ்சியாய் அவளை வரவேற்றனர்.
  எங்க ஈஸ்வர் தம்பிக்கு வரப்போற பொண்ணு எப்படி இருக்குமோனு நினைச்சோம்... உன்னைப் பார்த்தபொழுது உன்னை மாதிரியே ஒரு பொண்ணு கிடைக்கனும்னு நினைச்சோம்மா... நீயே கிடைச்சது நாங்க செஞ்ச பாக்கியம்மம்மா...

     அப்படியெல்லாம் சொல்லாதீங்க, ஈஸ்வர் மாதிரி ஒருத்தரும், உங்களை மாதிரி அன்பான குடும்பமும் கிடைக்க நான்தான் கொடுத்து வைத்திருக்க வேண்டும். சின்ன வயசுல இருந்தே யாருமில்லாம வளர்ந்த எனக்கு இவ்வளவு அன்பான குடும்பமே கிடைக்குதுனா அது ஈஸ்வரால தான். அதற்காக நான் என்ன செஞ்சாலும் ஈடாகாது...

     ம்..ம்....போதும்.. போதும்... எல்லோரும் எல்லோரும் கிடைக்க புண்ணியம் செஞ்சிருக்கோம் தான். ஆனால் இதையே எவ்வளவு நேரம் பேசுவீங்க!!! என்ன சதி நீ வீடு பார்க்க வரியா இல்லையா??

    ம்.. வரேன் வரேன்... போலாம் ஈஸ்வர் என்று இருவரும் கிளம்பினார்கள்.

   அலைந்து திரிந்து ஒரு நல்ல வீட்டினைக் கண்டுபிடித்தனர். வீட்டினைப் பார்த்துக் கொண்டிருங்கள் நான் வந்துவிடுகிறேன் என்று மொபைலில் வேறு ஒரு வீட்டிற்கு ஆட்களைப் பிடிக்கச் சென்றார் புரோக்கர்.

      அழகான பெரிய வீடு.... நிறைய அறைகளும் இருந்தன. உற்பத்திக்கு இந்த அறை, தரம் பார்த்தலுக்கு இந்த அறை, ஏற்றுமதிக்கான பொருள்களை அடுக்கி வைப்பதற்கு இந்த அறை என பார்க்கும் போதே ஒவ்வொன்றாய் பிரித்துக் கூறிவிட்டாள்.

     நமக்கான அறை எதுடி என்றான் அவளைப் பார்த்துச் சிரித்துக் கொண்டே....

    ம்... என்ன.... என்று தன் அழகான விழிகளை அகல விரித்து செல்லமாய் முறைக்க..,

    ஏய்...என்னடி என்னை முறைக்கின்றாய்..? ஆஸ் எ மார்க்கெட்டிங் மேனேஜர் எனக்கு ஒரு ரூம் அன்ட் ஓனர் ஆப் திஸ் பிஸ்னஸ் உனக்கு ஒரு ரூம் வேனாமாடி... அதைத்தான் சுருக்கமாகக் கேட்டேன்.

    ஓஹோ...... உங்களுக்கு வேணும்னா ரூம் கொடுக்கின்றேன். எனக்கு வேண்டாம். நான் எல்லா வேலைகளையும் சிறிது சிறிது நேரம் செய்துவிட்டு வருவேன். ஸோ எனக்கு ரூம் வேண்டாம்.

உன்னைச் சேர்ந்திடவே மீண்டும் பிறந்தேன்.....Where stories live. Discover now