°•°•♥19♥°•°•

2.7K 111 19
                                    

       அவன் உறங்குவதையே சிறிது நேரம் பார்த்துக் கொண்டிருந்தாள். எவ்வளவு அன்பானவன் இவன்... இவனுக்கு ஏன் அந்தக் கடவுள் உறவுகளைக் கொடுக்கவில்லை?? இவன் முகத்தைப் பார்த்தால் பகை கூட மறந்துவிடும் போல் இருக்கின்றதே?? அவ்வாறிருக்க இவன் தாய், தந்தை எப்படிதான் இப்படி இவனைத் தனியே தவிக்க வைக்கின்றனரோ? என யோசித்துக் கொண்டிருந்தாள்.

    திடீரென்று அவளது தொலைபேசி ஒலிக்க.... அவளது கவனம் சிதறியது. மதனா தான் அழைத்திருக்கிறாள். அப்பொழுதுதான் மணியைப் பார்ததாள். சிவ்விற்கு சமைக்க வேண்டுமே... மதிய உணவு வேலை வந்துவிட்டதே என்று எண்ணியவாறே போனை எடுத்தாள்.

    சொல்லு மதனா...

   என்னடி சொல்லு... நீ முதலில் எங்கு போகிறாய் என்று சொல்லிவிட்டா சென்றாய்?? நான் ஹலோ ஹலோ என்று கத்திக் கொண்டிருக்கிறேன்.. நீயோ பேசாமல் வைத்துவிட்டாயே...

    ஏய்... சாரி டி மதனா. சிவ்விற்கு உடல்நிலை சரியில்லை. அவனை அப்படி பார்த்ததும் மனது தாங்கவில்லை. அதான், வெளியில் செல்கிறேன் என்று வைத்துவிட்டு மருத்துவமனைக்குச் சென்றுவிட்டேன்.

    என்ன..! சிவ்விற்கு உடல்நிலை சரியில்லையா?? என்னவாகிற்று?உனக்கு எப்படி தெரியும்?

    அது.... அவன் அலுவலகம் வந்திருந்தான்.

    என்ன!!!! எதற்காக? அவன் இன்று விடுப்பு எடுத்திருந்தானே?

    ம்... ஆனால் காலையில் நான் பார்க்க வேண்டும் என்று கூறிவிட்டதால் அவன் உடனடியாக கிளம்பி வந்துவிட்டான். அவனைப் பார்த்தப் பிறகுதான் தெரிந்தது, அவனுக்கு உடல்நிலை சரியில்லை என்று... அதான்...

     அதுசரி... ரெண்டு பேரும் பர்பெக்ட் பேர் தான்... அவன் ஒரு லூசு.. நீ அவனுக்கேற்ற லூசு... இரண்டு லூசும் இப்போ எங்க இருக்கீங்க?

    அது...அது... அவன் வீட்டில்...

   ம்..சரி.. சரி... இப்போ எப்படி இருக்கின்றான்?

    ம்.. பரவாயில்லை.. மருந்து கொடுத்திருக்கின்றேன்.. தூங்கிக் கொண்டிருக்கிறான்.

உன்னைச் சேர்ந்திடவே மீண்டும் பிறந்தேன்.....Where stories live. Discover now