பகுதி 8

7.7K 220 23
                                    

Part 8

வைஷூ மும்பைக்கு மாற்றலாகி இன்றோடு ஒரு வாரம் ஆகிறது . 

வானதி இங்கு வந்தது முதல் இரண்டு நாள்  ஒரே சோகமயம் தான் தான்யாவை விட்டு வந்ததில்.

ஹைதராபாதிலிருந்து புறப்படட் சமயம்  ஆரம்பித்த அழுகை ஏர்போர்ட் வரை நீடித்தது . தான்யா வசுதாவின் சமதானமோ அல்லது வைஷூ உஷாவின் சமதானமோ எடுபட வில்லை .  அழுதழுது ஒருகட்டத்தில் உறங்கியே விட்டாள் . உறங்கிய மகளை தூக்கிக்கொண்டு  தான்யாவின் கன்னத்தில் முத்தம் வைத்தவள் தோழியிடம்  வந்தாள்  அவளை அறியாமலே இருநீர் துளிகள் இமைகளை தாண்டியது .

"என்ன வைஷூ இது  நீ எவ்வளவு Bold ஆ இருப்படி ! நீயே கலங்கலாமா" ? தோழியின் கண்ணீரைத் துடைத்தவள்  அணைத்து ஆறுதல் கூறினாள்.

"இல்லை  அங்க போகனும்மான்னு நெருடலா இருக்கு. ஆனாலும் ஒரு வைராக்கியமும் மனசுல இருக்கு.  நான் எதற்கும் கலங்காதவள்னு  எனக்கு நானே வச்சிக்கிற பரிட்சை இது . அதனாலதான் இதுக்கு நான் ஒத்துக்கிட்டேன் " என்றவள்  கலங்கிய கண்களை  துடைத்துக் கொண்டே கூறினாள்.

"வைஷூ உனக்கு நான் சொல்ல வேண்டியது ஒன்னும் இல்லை உனக்கு தெரியாததும் ஒன்னும்  இல்லை உனக்கு சரின்னு படுறத செய்" என்றவள் அவர்களுக்கு பிரியா விடை கொடுத்தாள் .

பரந்து விரிந்த மும்பை மாநகரில் இறங்கியவளின் அழகிய பாதங்கள் ஒரு நிமிடம் தன் நிலை  மறந்தது. நவ நாகரிக உடையை தழுவி இருந்த சற்று பூசிய  அவள் தேகம்  தன் உயிர் தீண்டியது போல் சிலிர்த்தது. அங்கும் இங்கும் அலைபாய்ந்த அகன்ற கருவண்டு விழிகள்  இரண்டும்
இன்று பூத்த புது மலரைக் கண்டது போல் ஒளி நிறைந்து. பட்டுபோன்ற மென்மையான விரல்களின் தன் அணிந்து இருந்த சர்டின் மேல் புறம் காற்றில் பறந்த ஷாலின் நுனியை  சுற்றுவதும் அவிழ்பதுமாக  தன் கைகளின் நடுக்கத்தை குறைத்துக் கொண்டாள்.

"அம்மா வைஷூ என்னடா நின்னுட்ட? "உஷா

சுற்றுபுறத்தை நோக்கி பார்வையை சுழல விட்டவள் "அத்த லக்கேஜ் எடுக்கனும் குல்லுவ பாத்துக்கோங்க நீங்க அங்க  வைட் பண்ணுங்க   நான் இப்போ வந்துடுறேன்" அத்தையின் பார்வையை சந்திப்பதற்கு முன்னாள் தலையில் இருந்த கூலர்சை எடுத்து கண்களில் பொருத்தினாள்.

நின் முகம் கண்டேன். (Completed)Where stories live. Discover now