பகுதி 29

5.8K 175 38
                                    

"இந்தாங்க காபி " என்று தோட்டத்தில் அமர்ந்திருந்த விஜயபாஸ்கரிடம் கொண்டுவந்து காபியை  நீட்டினார் மாதுரி
.

என்ன மாதுரி காலைலேயே டென்சனா இருக்க முகம் வேற சரியில்லை ?

"அது ஒன்னும் இல்லைங்க மனசு கொஞ்சம் சங்கடமா இருக்கு"

அப்படி எதை நினைச்சி சங்கடபடுற ?

"என்னன்னு தெரியல ஏதோ மனசு நெருடலாவே இருக்கு.  ம்... இன்னைக்கு நாள் நல்லபடியா போகனும் கிருஷ்ணா" என்றபடி விழிகளை மூடினார்.

வீட்டின் உள்ளே இருந்து லேன்ட் லைன் அழைக்க அதை எடுத்தாள் பூஜா

"ஹலோ "

"ஹலோ யாரு???? பூஜாவா...."

"ஹா நீங்க"...

"நான் வீணா.... மிஸஸ் வீணா ரத்தன்...மாதுரி இல்லை?"...

"ஹோ இருக்காங்க ஆண்டி....  ஒரு நிமிஷம் வைட் பண்ணுங்க கூப்பிடுறேன்....

"ம்...கூப்பிடு...என்றார் சலித்த குரலில்.

'இவ என்ன சாதாரணமா பேசுறா....? நடந்த நியூசுக்கு காலே அட்டன் பண்ண மாட்டாங்கன்னு நினைச்சா இப்படி மூடி மறைக்கிறீங்களா!!!!!.... வாங்கடி உங்க மானம் சந்தி சிரிக்க போகுது'.என்று நினைத்திருந்தார் வீணா.

தோட்டத்திற்கு வந்த பூஜா மாதுரியிடம்
"அம்மா உங்களுக்கு வீணா ஆண்டிக்கிட்ட இருந்து போன்"என்று கூற

"இருங்க வரேன்"....
என்று கணவரிடத்தில் கூறி எழுந்து சென்றார் மாதுரி.

"அதுவும் அது மூஞ்சும்... இப்போ எதுக்கு போன் பண்ணுது ....யார் குடும்பத்துல இன்னைக்கு போராட்டமோ.... ..ம்..... " என்றவர் அதை விடுத்து "பூஜா குழந்தை என்னம்மா பண்றான்" என்றார்

"இவ்வளவு நேரம் அங்க அப்பாவும் மகனும் தூக்கிட்டு இருந்தாங்க அவன் இன்னும் எந்திரிக்கல உங்க  மகனை இப்போதான் எழுப்பிட்டு வந்தேன் அப்பா...  பூஜா.

"ம் .... சரி மா அவனை பார் நான்   பேப்பர்  படிச்சிட்டு வறேன் மா நீ போ" என்று அனுப்பி வைத்தார்.விஜயபாஸ்கர்.

நின் முகம் கண்டேன். (Completed)Where stories live. Discover now