பகுதி 35

6.2K 227 58
                                    

பகுதி 35

டேய் என்னடா நீ ...... நீ போய் அவகிட்ட பேசுவியா என்னை என்னை தள்ளிவிடுறியே"தாரா

"அம்மா,அம்மா... பீளிஸ் அவ கண்ண பாத்தாலே எல்லாம் ஆப் ஆகிடுது. நீ கொஞ்சம் ஹெல்ப் பண்ணுமா" என்றான் வைபவ்

"என்னடா பேசுற....?? நீ என்னமோ 16 வயசு பையன போல இப்படி பயப்புடுற...!!? அம்மாகிட்ட லவ்வ சொன்னா பரவாயில்லை ஆனா அந்த பொண்ணுகிட்டயே அம்மாவ லவ்வ சொல்ல போக சொல்றபாரு அதாண்டா ஓவரா இருக்கு ... ஊர்ல அவனவன் ஒன்னுத்துக்கு மூனு நாலுன்னு பொண்ண லவ் பண்ணி போயிட்டே இருக்கானுங்க ஆனா உனக்கு ஒரு பொண்ணுகிட்ட லவ்வ சொல்ல வரல!! ம்.... எங்க போய் முட்டிக்க" என்று அலுத்துக் கொள்ள...

"அம்மா பீளிஸ் மா" என்று பழைய பல்லவியே வைபவ் பாட சரி சரி போனா போகுதேன்னு செய்றேன். சரி நாளைக்கு வெள்ளிக்கிழமை அவ ஈவினிங் சாமுண்டேஸ்வரி அம்மன் கோவில் போவா கோவில்ல வைச்சி பேசுறேன்". தாரா.

"என் தாரான்னா தாராதான்.... என்று கன்னத்தில் முத்தம் வைக்க "ச்ச்சீ போடா எரும கன்னத்தை எச்சி பண்ணிக்கிட்டு என்று அடிக்க தார கை ஓங்கினார். அவர் அடியிலிருந்து தப்பித்த வைபவ் "தாரா ஐ லவ் யூ" என்று கூறி அவர் கன்னத்தை கிள்ளிவிட்டு தாயின் அடியிலிருந்து தப்பித்து காரை எடுத்துக்கொண்டு மருத்துவமனை சென்றான்.

"அந்த பொண்ணுகிட்ட ஐ லவ் யூ சொல்லுடான்னா என்கிட்ட சொல்லிட்டு இருக்கான் நல்ல பையன்" என்று தனக்குள்ளேயே பேசியவர் மற்ற வேலைகளை கவனிக்க சென்றார்.

"தோழிகள் இருவருக்கும் நடந்த அந்த விபத்திற்க்கு பிறகு மருத்துவமனையில் இருந்த வைஷ்ணவி கௌஷிக்கின் பிரிவிற்கு தான் தான் காரணம் என்று நினைத்தவள் வைஷ்ணவியிடம் எவ்வளவு பேசியும் அவள் கௌஷிக்குடன் சேர சம்மதிக்கவில்லை "நீ ஏதாவது முயற்சி எடுத்தால் உன்னைவிட்டு போகவும் தயங்கமாட்டேன்" என்று வைஷ்ணவி கூறியதற்கு அடுத்து அந்த முயற்சியை கைவிட்ட வைஷாலி காஞ்சிபுரத்தில் இருந்த வீட்டிற்கு செல்லாமல் சென்னையில் தான் தங்கி இருந்த வீட்டிற்கே செல்ல முடிவு எடுத்து வைஷாலி கூறியபோது மறுத்த வைஷ்ணவி தன்னுடன் வருமாறு அழைக்க நடந்த சம்பவங்களை மறக்க தனக்கு தனிமை தேவைபடுவதாகவும் தான் இனி யாரையும் சார்ந்து வாழாமல் தைரியமாக இருக்க தனக்கு இந்த தனிமை வேண்டும் என்று கூறியபிறகு வைஷ்ணவியால் மறுக்கமுடியவில்லை. இதன்பிறகு ஆபத்தில் உதவியவர் என்ற முறையில் அறிமுகமான வைபவ் வைஷாலியின் வாழ்வில் நடந்த சம்பவங்களை கேட்டதில் மனதளவில் அவளுக்காக வேதனைபட்டான். அவளுக்கு நல்ல நண்பனாக இருக்க முடிவு செய்து அவளுடனான நட்பை வளர்த்த்துக்கொண்டான் தன் தாயாரையும் அறிமுகபடுத்தி வைக்க தாராவும் அன்பாய் பழகினார். இந்த ஆறு வருட பழக்கத்தில் வைபவின் மனதிலிருந்த நட்பு சிறிது சிறிதாக காதலாக மாற அதை கல்யாணமாக நடத்த அன்னையின் உதவியை நாடினான்.

நின் முகம் கண்டேன். (Completed)Where stories live. Discover now