பகுதி 37

6.4K 232 84
                                    

பகுதி 37

காலிங் பெல்லை அழுத்திக்கொண்டிருந்த வைஷாலிக்கு யாரும் வந்து கதவை  திறக்காததால் "அம்மா..... அம்மா..... எங்க இருக்கிங்க..." என்றபடி மூடியிருந்த வீட்டை திறந்து தாராவை அழைத்துக்கொண்டே உள்ளே  போனாள்  .

மாடி தோட்டதிற்க்கு நீர் பாய்ச்சியபடி இருந்த தாராவிற்க்கு கேக்காததால் எல்லா இடங்களிலும் தேடிய வைஷாலி  கடைசியாக வைபவின் அறையை கடந்து மாடி படிகளில் ஏறப்போகும்போது   காற்றில் ஜன்னல் திறைசீலைகள் பறக்க அதன் வேகத்தால்  லெட்டர்பேடில் இருந்த காகிதம் ஒன்று காற்றில் பறந்து படி அவள் கால் வைக்கபோகும் இடத்தில் வந்து விழுந்தது.

காகிதம் விழுந்ததும் அதன் மேல் கால் வைக்காமல் பின்வாங்கியவள் அதை எடுத்து பிரித்தாள்.

காற்றுக்கு வேலியிட முயன்று தோற்றேன்...
பெண்ணவளின் ஓர விழி பார்வையில் என் மனதை தொலைத்ததால்...

முட்டி மோதிடும் விழிகளின் தேடல்...

தூரத்தில் நின்றாலும் விடாமால் துரத்திடும் இருதயத்தின் துடிப்பு...

காதல் தான் கள்ளத்தனத்தின் அடித்தளமோ அன்பே...

பார்க்காமல் உன் முகம் பார்க்கிறேன்...
நீ அறியா வண்ணம் அதை என்னுள்ளே புதைக்கிறேன்...

காதலுக்கு காதலிக்க கற்று தந்து இருளின் நிழலில் மறைகிறேன்...

எவ்வளவு நேரம் ரசித்தாலோ  அதன் வரிகளில் முழ்கினாள். "காதல் கவிதைகள் !!!!  ரொம்ப ரசிச்சி  எழுதி இருக்கார் நிச்சயமா வைபவ் ஏதோ ஒரு பொண்ண லவ் பண்றார்.   ஏன்?? இன்னும் அவங்கள காட்டம??வச்சி இருக்கார். ஒருவேளை நாம அவர் லவ் பண்றாருன்னு  தப்பா நினச்சிருந்தா!! அம்மா இங்க எங்கயும் இல்லை மாடியிலதான் இருக்கனும்.... வைபவ் மேரேஜ்க்கு நாம  அவங்களுக்கு ஹெல்ப் பண்றதா சொல்லி இருக்கோம்.... இதுதான் சேன்ஸ் .... வைபவ்  லேட்டாதானே வருவாரு . நாம  அந்த பொண்ணபத்தி அவர் ரூம்ல எதாவது கிடைக்காதான்னு தேடி அம்மாகிட்ட கொடுத்தா  அந்த டிட்டெய்ல்ஸ் வைச்சி அவரை கல்யாணத்துக்கு சம்மதிக்க வைப்பாங்கல்ல" என்று நினைத்தவள் அவன் அறைக்குள் செல்ல முன்னேறினாள்....

நின் முகம் கண்டேன். (Completed)Where stories live. Discover now