பகுதி 43

6.7K 230 96
                                    

பகுதி 43

மரங்கள், நடைபாதையில் செல்லும் மனிதர்கள் கட்டிடங்கள் விலங்குகள் எல்லாம் வேகமாக கடக்கும் காட்சிகளை பார்த்து கைகொட்டி சிரித்து ஆரவாரம் செய்தபடி வந்தான் சத்தியன்.  60 கிலோமீட்டர் வேகத்தில் சாலையில் சீறிபாய்ந்தது  வாகனம்  பெங்களுர் நகரின் நடுநாயகமாக இருந்த அருணாச்சலத்தின் மாளிகையின் முன் நின்றது .

ஆபிஸ் பைல்களுடன் ஹாலில் அமர்ந்திருந்த அருணாச்சலத்திடம் காபியை கொடுத்த லலிதா வண்டியின் சத்தம் கேட்க "என்னங்க சிவா நீலா எல்லாம் வந்துட்டாச்சுபோல" என்றபடி  வாயில் படியில் வந்து நின்றார்.

வாசல் பக்கம் பார்வையை  பதித்தவர்  காரில் இருந்து இறங்கிய குழந்தையை கொஞ்சிய லலிதாவின் முத்தங்களை பெற்றுக்கொண்ட சத்தியன் தாத்தவிடம்  ஓடி அவரின் கழுத்தை கட்டிக்கொண்டு மடியில் அமர்ந்து கொண்டான். "வா நீலா வா உஷா"என்றவர் "முனியா இந்த லக்கேஜ் எல்லாம் எடுத்து ரும்ல வைங்க" என்று லலிதா கூறி அவர்களை நலம் விசாரித்து உள்ளே அழைத்து வந்தார். கையில் வைத்திருந்த பைல்களை ஓரம் கட்டியவர் பேரனின் செயலில் அவனை கொஞ்ச ஆரம்பித்திருந்தார் அருணாச்சலம்.

"தாத்தா  தாத்தா நாங்க குல்லு அக்கா அப்புறம் அத்தய பாத்தோமே!"

"அப்படியா!!! செல்லம்  என்னதான் நீ விட்டுட்டு போயிட்டியே  குல்லு அக்கவ பார்க்க!!!, அடுத்த டைம்  நீ போகும்போது என்னை கூப்பிட்டு போறியா செல்லம்?!?".

"ஒகே தாத்தா அங்க வந்து ஊருக்கு போகனமுன்னு அடம்பிடிக்க கூடாது... 
அப்புறம் மம்மி  டேடி திட்டுவாங்க.... நான் அடம்புதிக்க  மாட்டேன் குட் பாயா இருந்தேன்"...  என்றது மழலை

"சரிடா செல்லம் தாத்தா அடம் பிடிக்காம சமத்தா உன்னை போலவே குட் பாயா  வறேன்". என்ற அருணாச்சலத்தை சிவா அவரை நெருங்கி இருக்க "வாடா" என்றார்..

"மல்லி ஸ்டாங் காபி" என்றவன்  சோபாவில் அமர்ந்தான்

"அத்த உங்க முகத்துல கூடுதல் பிரகாசம் தெரியுது!?!...  நாங்க இல்லாம மாமாவும் நீங்களும் ரொம்ப நிம்மதியா இருந்திங்க போல?!?!"....

நின் முகம் கண்டேன். (Completed)Where stories live. Discover now