பகுதி 45

6.9K 221 136
                                    

பகுதி 45

"சிண்டு அது சூப்பரா இருக்குல்ல!!?"... என்று வானதி மகிழ்ச்சியாக பார்த்துக்கொண்டு இருந்தாள். அவள் கூறியவுடன் கடை சிப்பந்தியை விட்டு அதை எடுக்க சொன்னான் கௌஷிக்.

"வேனா, வேனா சிண்டு இந்த கலர் வேண்டாம். வேற பாக்கலாம்". என்று கூற அடுத்து இருக்கும்  விளையாட்டு பொருட்களை தந்தையின் கையை பிடித்தபடி ஆர்வமுடன் பார்வையை பதித்து நடையிட்டு  கொண்டிருந்தாள்.  மகளை பார்க்கவே குட்டி இளவரசியை போல் உணர்ந்தான். மனதில் கொள்ளை மகிழ்ச்சி. தூரம் இருந்தவரை மனதில் தேக்கிய அன்பினில் மகளை மொத்தமாய் திளைக்க வைக்க ஆசைக்கொண்டான்.

"அப்போது......" அந்த நேரம் பார்த்து கௌஷிக் கைபேசி ஒளி எழுப்ப அதில் ஒளிர்ந்த எண்ணை பார்த்தவன் இந்த நேரம் ஏன் கிர்ஷ் கால் பண்றான் என்று எண்ணம் கொண்டு மகளை பொருட்களை பார்க்க சொல்லிவிட்டு கிரிஷிடம் பேசலானன்.

"சொல்லு கிர்ஷ் எப்படி இருக்க?".

"எனக்கென்ன செமையா நாலு பொண்ணு....."  என்று ஆரம்பித்தவன் எதிர்முனையில் இருப்பவர் அண்ணன் என்பதை நினைவில் கொண்டு தொண்டையை சரிசெய்வது போல் ம்க்கூம்... "நல்லா இருக்கேன் பையா..". அப்புறம் சொல்லுங்க நீங்க  எந்த ஸ்டேஜ்ல இருக்கிங்க ?".

கௌஷிக் யார் அந்த மாயகிருஷ்ணன் நம்ம கிர்ஷ்க்கே அண்ணனாச்சே தம்பியின் வாயடித்தனம் தெரியதாவனா என்ன அவன் தெரியாதது போல் "என்னது ஸ்டேஜா!!!??... புரியலடா!!  என்ன ஸ்டேஜ்"?  என்று கேட்க

"அட பாவம்.... ஒன்னுமே தெரியாத குட்டி பாப்பா... இந்த பச்சபுள்ள ரியாக்ஷன பாபிக்கிட்ட மட்டும் வைச்சிக்குங்க...  என்கிட்ட வேனா.. என்று வாயாடித்தனத்தை காட்ட

"டேய் கடுப்ப ஏத்தாம என்னன்னு புரியராப்போல சொல்லுடா??... நீ எதைபத்தி கேக்குரன்னு தெரியலடா fool??  என்றான் கௌஷிக்.

(நான் fool la  நீங்க சீக்கிரமா ஒன்னுசேர்ந்தாதான் என்னோட லவ்வ சொல்லமுடியும் ஆனா இன்னும் என்னதான் செய்றியோ!!?!@...  என்று கிரிஷ்  உள்ளுக்குள் பேச) "டேய் மங்கி லைன்ல இருக்கியா!!?!.. இல்ல போயட்டியா!?!.. டேய் டேய் எருமை..." என்று கௌஷிக் கத்தியபின் தெளிந்தவன் "அது நீங்க பாபிய சரிபண்ணிட்டாங்களா??". என்றான் குழைந்த குரலில்.

நின் முகம் கண்டேன். (Completed)Where stories live. Discover now