நினைவு 3

684 63 41
                                    

காலையில் எழுந்த இனியாவிற்கு எதோ ஒன்று நடக்க இருப்பதாய் மனது உணர்த்தியது .. அது நல்ல நிகழ்வா கெட்ட நிகழ்வா என்பதை அவளால் அறிய இயலவில்லை.. இந்த மனக்குழப்பத்துடனே இருந்தவள் குழந்தைகளை பள்ளிக்கு ஆயத்தப்படுத்த...

அவளின் சோர்ந்த முகத்தை பார்த்த சங்கி அகிலிடம் தன் கண்ணை காட்டி ஏன் என்று கேட்டாள் .. அதற்கு அகில் உதட்டை பிதுக்கி தெரியவில்லை என்று விடையளிக்க .. இவர்களது சம்பாஷனைகளை கண்ட இனியா.. சிரித்துக்கொண்டே

"என்ன தெரியனும் என் பட்டூஸ்க்கு" என புருவம் உயர்த்தி புன்சிரிப்போடு  கேட்டவுடன்...

"அம்மா .. இப்படி நீங்க சிரிச்சுட்டே இருந்தா தான் அழகா இருக்கிங்க மா" என்றவாறு அகில் அம்மாவை கட்டிக்கொண்டான்..

"ஆமா மா.. இதுக்கு முன்னாடி இருந்த அழுகாச்சி மூஞ்சி பார்க்க சகிக்கல மா...உவ்வே" சங்கி சொல்லிக் கொண்டே நாக்கை துருத்தி ஓட...

"ஏய் கொழுப்பா.. நில்லுடி" இனியா விரட்ட அகிலும் அம்மாவிற்கு ஆதரவாய் அவளை பிடிக்க முற்பட்டான்... ஆனால் சங்கி குட்டியோ அவள் அம்மம்மாவிடம் தஞ்சம் புகுந்தாள்...

அவளிடம் சிறுபிள்ளையாய் இனியா சண்டையிட பின்பு கெஞ்சி கொஞ்சி அவர்களை பள்ளியில் விட்டவள் தன் கல்லூரிக்குள் நுழைந்தாள்...

அங்கு அவளுக்காகவே காத்துக் கொண்டிருந்த பரிதாவும் இணைந்துக் கொண்டாள்..

"என்னடி பரி இன்னைக்கு பரப்பரப்பா இருக்காங்க எல்லாம் .. என்னவாம் இன்னைக்கு" கேள்வியாய் நோக்க ..

பரிதா அவளை ஆச்சரியமாய் பார்க்க

"ஏன்டி இப்படி பாத்துட்டு இருக்க... கேட்டா  பதில் சொல்லனும் இப்படி‌ முறைக்கப்பிடாது " என்றதும் ..

" இன்னைக்கு புதுசா தாளாளர் வரப்போகிறார் .. அதான் இந்த பரப்பரப்பு .. உனக்கு இதெல்லாம் நியாபகம் இருக்காதே" என்று நக்கலாய்‌ சிரித்தவள்‌ தொடர்ந்து

" ஆமா இன்னைக்கு அழகா வந்துருக்கியே இனியா .. ஓஓ.. சேர்மேன் வராங்க என்று தானே " சிரித்துக் கொண்டே கேட்டாள்

நினைவே நனவாகிவிடுவாயாWhere stories live. Discover now