நினைவு 4

641 62 51
                                    

செழியன் கண்இமைக்காமல் பார்த்துக் கொண்டிருந்தது இனியாவை தான்.. தனக்கு உரிமையானவள் என்றதொரு உணர்வு.. தன் வயிற்றிக்குள் ஆயிரம் பட்டாம்பூச்சிகள் பறப்பது போன்று குதூகலம்.. அவளை விட்டு கண் அகன்றால் அவள் சென்று விடுவாளோ என்ற பயத்தில் சுற்றுபுறம் மறந்து பார்த்துக் கொண்டிருந்தான்...

இனியாவும் அதே நிலையில்.. ஆனால் அவள் மனமோ சந்தோசப்படுவதா... பயம் கொள்வதா.. வருத்தப்படுவதா என்று தெரியாமல் கண்ணீர் எப்போது வேண்டும் என்றாலும் வரலாம் என்ற நிலையில் இருக்க...

ஏன் இவர்கள் இப்படி நிற்கிறார்கள் என்று புரியாமல் பார்த்துக் கொண்டிருந்த பரிதா ஒருபுறம்...

இனியாவை இங்கு எதிர்பார்க்காததால் உச்சக்கட்ட ஆச்சரியம் மகிழ்ச்சியோடு நின்றிருந்தான் அருண்..

நல்லவேளையாக இவர்களுடைய உறைநிலையை கலைத்தது.. அக்கல்லூரி முதல்வரின் குரல்.. அதில் நடப்புக்கு வந்தனர் செழியனும் அருணும் அவ்விடத்தை விட்டு நகர ...

மீட்டிங்கில் சில அறிவுரைகளை வழங்கினான் செழியன்.. அவ்வப்போது அவன் கண்கள் இனியாவை தீண்டுவதையும் தடுக்க இயலவில்லை...

அவனின் பார்வை தன் மீது இருப்பது தெரிந்து... இனியா நிமிரவே இல்லை ...அவள் மனம் பல்வேறு குழப்பத்தில் இருந்தது...
தன் தலைவிதியின் விளையாட்டை நினைத்து நொந்து போயிருந்தாள்...

பரிதா நடப்பது புரியாமல் அவள் தோழியின் நிலை கண்டு கவலைக் கொண்டிருந்தாள்

ஒரு வழியாய் மீட்டிங் முடிய அதற்காகவே காத்திருந்த இனியா அவ்விடத்தை விட்டு ஓடி விட்டாள் ..

அவளை தேடி சென்ற பரிதா மறைவான மரத்தின் பின்னால் தன் தோழி அழுதுக் கொண்டிருப்பதை கண்டு.. அருகில் சென்றவள்..

"இனியா" என்றவுடன் தாய் மடி தேடும் சேயாய் அவள் மடியில் சாய்ந்து அழுதவளை தேற்ற வழி தெரியாது முழித்துக் கொண்டிருந்தாள்...

அவள் காரணம் கேட்டும் அவளிடம் இருந்து பதில் வரவில்லை...

அதற்கு மேல் பொறுக்க முடியாதவள் திட்டி பார்த்தும் பதில் இல்லாமல் போக எழிலனுக்கு கால் செய்தால்...

நினைவே நனவாகிவிடுவாயாKde žijí příběhy. Začni objevovat