நினைவு 7

534 52 35
                                    

இனியாவை ரசித்துக் கொண்டிருந்தவன் அவன் கண்ட காட்சியில் கோபத்தில் வெளிறிய
முகத்தோடு அதை பார்த்துக் கொண்டிருந்தான்

அதை கவனிக்காத இனியா அவனை மனதினுள் அர்சித்துக் கொண்டிருந்தாள்... ஏனெனில் அவனின் ஆண்மையான கம்பீரத்தில் சில பெண்கள் அவனை பார்த்து சைட் அடித்துக் கொண்டிருந்ததே அதற்கு காரணம்...

அவனை வசைப்பாடி முடித்தவள் அருணை முறைக்க அவன் ஏன் இவள் இப்படி லுக் விடுறா என்று புரியாமல் முழித்தவன் அவளிடமே ஏன் என்று கண்களால் வினவ அவள் அதற்கு அந்த பெண்களை சுட்டிக் காட்ட அப்போது தான் காரணம் தெரிந்தது...

சில பெண்கள் இவனையும் ரசித்ததால் அதில் மகிழ்வுற்றவன் "வாவ் என்னையும் சைட் அடிக்க ஆளு இருக்குது.. நீ கலக்குடா அருண்" என தன்னையை மனதில் பாராட்டியவன் அவர்களை பார்க்க

அதில் இன்னும் கோபமுற்ற இனியா அவனை முறைத்துக் கொண்டே அவன் அருகில் வர அதற்குள் செழியன் எழுந்து கோபத்தில் முகம் சிவக்க அவ்விடத்தை விட்டு எழுந்தவன் வெளியில் வேகத்தோடு சென்றான்...

எதற்கு இந்த வேகம் என்று தெரியாமல் அருண் நினைத்தாலும் அவன் பின்னால் செல்ல மறக்கவில்லை ..

ஆனால் தன்னை கடந்தவனின் முகத்தில் இருந்த கோபத்தில் ஒரு நொடி அதிர்ந்தாலும் அவன் பின்னால் செல்ல நினைத்தவள் தான் வகுப்பில் இருப்பதை உணர்ந்து மாணவர்களை நோக்க அவர்களின் தீடீர் வெளியேற்றத்தில் தங்களுக்குள் கேள்வியோடு பேசிக்கொண்டிருந்தனர்...

அதை கண்டவள்..
" ஹே.. சைலண்ட்.. சார்க்கு எதோ எமர்ஜென்சி போல .. சரி.. நம்ம க்ளாஸ்ஸ தொடர்வோம்" என முகத்தில் தன் உணர்ச்சிகளை காட்டாது சிரித்த முகத்தோடு கூறியவளை கண்டு மாணாக்களும் சமாதானம் அடைந்தனர்..

ஆனால் அவள் மனமோ குழப்பத்தோடு சேர்ந்து பயத்தில் ஆட்கொண்டு இருந்தது....அந்த நேரத்தில் அந்த பாட வேளை முடிந்ததற்கான மணி ஒலிக்க ஒரு பெருமூச்சுவிட்டப்படி தன்னவனை தேடி ஓடினாள்...

நினைவே நனவாகிவிடுவாயாWhere stories live. Discover now