நினைவு 5

1.3K 44 41
                                    

செழியன் நியாபகம் வந்துவிட்டது என்று கத்தியவுடன் .. அருண் சந்தோசத்தோடு சேர்ந்து ஒரு வித ஆர்வத்துடன் அவனை பார்க்க...

" என் கனவுலகில் மச்சான் அடிக்கடி இவள் தான் வருவாள்....ஆனால் என்ன அதில் இன்னும் கொஞ்சம் ஒல்லியா இருப்பா.. சில நேரங்களில் கருவுற்ற பெண்ணாகவும் அவளை நான் கவனித்துக் கொள்வதும் போலவும் வரும் .. நீயும் இந்த கனவில் அவளோட வருவ மச்சான் ...அவள் உன்னை அண்ணானு சொல்லுவா.. இன்னொருத்தனும் வருவான்.. அவன் அவளிடம் ரொம்ப க்ளோஸ்ஸா இருப்பான்.. அவன் அவளுக்கு ரொம்ப சப்போர்ட் பண்ணுவான்.. நீங்க இரண்டு பேரும் சேர்ந்துட்டு என்னிடம் வம்பு பண்ணுவிங்க.. ஆனால் எதுக்காகவும் என்னை விட்டுக் கொடுக்கவே மாட்டாள்" என கண்ணில் அவன் முகமலர்ச்சி பிரதிபலிக்க சொல்லிக் கொண்டிருந்தவனை பார்த்து அருணுக்கு உண்மையில் கவலையாக இருந்தது...

நினைவுகளை கனவுகளாய் நினைத்துக் கொண்டிருக்கிறானே .. என மனதில் வருந்தியவன்.. பேசாமல் அவனிடம் உண்மையை சொல்லிவிடலாமா என்று யோசித்துக் கொண்டிருந்த போதே அவனுடைய மொபைல் ரிங் ஆனது ...

அதில் யார் என்று பார்த்தவன் .. அதானே பார்த்தேன் இன்னும் என்னடா பாடிகார்ட் போன் பண்ணலயேனு... என்று மனதில் புலம்பியவன்...

"ஹலோ ஹலோ.. யாரு.. காதில் விழலயே.. " என்று செழியனை பார்த்தவன்..

அப்படியே வெளியில் சென்றான் ... " ஹலோ சொல்லுங்க சார்.. இப்ப தான் எங்க நியாபகம் வருதோ.." என்று நக்கலாக கேட்க..

"ஆமா.. உங்களை மறக்க முடியுர காரியத்தையா நீங்க பண்ணிருக்கிங்க.. " என்று குத்தலாக வந்தது எதிர்குரல்..

அய்யோ செம பார்ம்ல இருக்கானே.. சரி சமாளிப்போம் .. " டேய் எதா இருந்தாலும் நேரா கேளு.. சும்மா "

"இங்க பாரு அருண்.. நான் எதுக்கு கால் பண்ணேனு உனக்கு தெரியாதா.. சரி என் வாயாலே கேட்கனும் என்று நீ ஆசைப்படுறியா.. ஏன்டா இனியா காலேஜ்க்கு வந்துருகிங்க.. அவளை நிம்மதியாவே இருக்க விட மாட்டிங்களா.. பாவம் டா அவ..." என உடைந்த குரலில் சொன்னவனின் பாசத்தில் நெகிழ்ந்தவன்...

நினைவே நனவாகிவிடுவாயாOnde histórias criam vida. Descubra agora