நினைவு 11

744 14 9
                                    

போனில் பேசி முடித்த செழியன் திரும்பும் போது வேகமாய் உள்ளே நுழைந்த அருணை கண்டதும் சந்தேகத்தோடு அவ்வறையை நோக்கி செல்ல அப்போது தான் பாயாசத்தோடு வந்த அருண் மோதி நின்றான்

யார் மீதோ மோதிவிட்டோம் என்று ஒரு நிமிட அதிர்ச்சியில் நின்றவன் பின்பு அது செழியன் என்பதை அறிந்ததும் ஆசுவாசமானான்

"டேய்.. லேடீஸ் ஸ்டாஃப் ரூம்மில் உனக்கு என்னடா வேலை.. அதும் திருட்டுதனமா ஓடி வர"

"ஹி ஹி‌.. அது வந்து ..மச்சான் .. பாயாசம் டா  " என்று கையை காட்டி  கண்ணை  விரித்து அதை நினைக்கும் போதே நாக்கில் ஊறிய உமிழ்நீரோடு சொன்னவனை வெட்டவா குத்தவா என்று பார்த்தான் செழியன்

"அதுக்கு எதுக்கு டா இப்படி ஜொள்ளு ஊத்துற.. சரி  இங்க இருந்து வருவதற்க்கும் பாயாசத்துக்கும் என்ன சம்பந்தம்" என்று சந்தேகமாய் பார்க்க

"உம்ம்.. இங்க தான் டா கொடுத்தாங்க " என அருண் சொல்லிக் கொண்டிருக்கும் போதே அவனை கடந்து சென்ற ப்யூன் வணக்கம் தெரிவிக்க பதில் அளித்து இவர்கள் தங்கள் பேச்சை தொடர போக அவர்களையும் ஸ்டாப் ரூம்மையும்  பார்த்துக் கொண்டே சென்றார் ..

அப்போது தான் தாங்கள் இருக்கும் இடம் உணர்ந்து தங்கள் அறையினுள் சென்றனர்

உடனே தன் கையில் இருந்த டப்பாவை திறந்த அருணை முறைத்த செழியனை சிறிதும் கண்டு கொள்ளாமல் " வாவ் .. தங்கச்சி செஞ்ச பாயாசம் .. உம்ம்ம் .. ஸ்மெல்லே சூப்பரா இருக்கு" ராகமாய் பேசியவன் வாயின் அருகில் ஸ்பூனை எடுத்து செல்ல  கொண்டு போக அவன் கையை பிடித்தான் செழியன்

எவன் அவன் என்று பார்த்தவன்
" என்னடா உனக்கு பிரச்சினை .. பாயாசம் திங்க விடாம இப்படி பாடாப்படுத்துற " என்று கத்தியவனை சிறிது கண்டுக்கொள்ளாமல்

"ஆமா .. எனக்கு தெரியாம எந்த தங்கச்சி .. உன் தங்கச்சி இங்கயா இருக்காள்"  நக்கலாய் கேட்டதும்

"டேய்.. அய்யோ.. நிம்மதியா திங்க விட மாட்டியா டா.. கேள்விக்கு பொறந்த கேடுக்கெட்டவனே‌.‌. இனியா தான் டா கொடுத்தா இப்போவாது சாப்பிட விடுடா" என்றதும்  அந்த டப்பாவை எடுத்து  சாப்பிட ஆரம்பித்தான் செழியன்

You've reached the end of published parts.

⏰ Last updated: Apr 10, 2020 ⏰

Add this story to your Library to get notified about new parts!

நினைவே நனவாகிவிடுவாயாWhere stories live. Discover now