நினைவு 9

564 38 26
                                    

அருண் இனியாவை அழைத்துக் கொண்டு சென்றுக் கொண்டிருக்க ..அண்ணா என்ற அவள் அழைப்பை கேட்டவுடன் சொல்லு மா என்றவுடன்

" நீங்க என்னை வீட்டுக்கு வெளியிலே விட்டுட்டு கிளம்புங்க .."என்றவள் அதற்கு மேல் பேசுவதற்கு திணரினால்..
( உண்மையில் இவள் இருக்கும் இடமறிந்தால் மீண்டும் தன் பிள்ளைகளுக்கு ஆபத்து ஏற்படுமோ என்று பயந்தால்.. அருணின் மீது அளவு கடந்த நம்பிக்கை இருந்தாலும் பிள்ளைகளின் முன் அது ஆட்டம் கண்டது)

இதை கேட்டவுடன் அருணுக்கு வருத்தத்தோடு சேர்ந்து சிறிது கோபம் எட்டி பார்த்தாலும் அவளின் நிலை உணர்ந்து
" ஏன்மா வீட்டுக்கு வந்தா உன் சாப்பாட்ட பிடிங்கி சாப்பிட்டு விடுவேனு பயப்படுறியா.. நான் இப்ப ஸ்டிக்ட் டையட்டில் இருக்கேனாக்கும் " என அவன் பேச்சை மாற்ற சீரியஸாக சொல்வதை கேட்டு சிரித்து விட்டாள்...

அவள் சிரிப்பதை கண்டவன்..
" ஏன் இனியா சிரிக்கிற.. உண்மையில தான் நம்புமா நம்பு"
என்று அவள் மனநிலையை மாற்ற விரும்பி சீரியஸாக சொல்ல இன்னும் சிரித்தாள் .. பின்பு அவன் முறைப்பதை கண்டவள் சிரிப்பதை நிறுத்திவிட்டு அதுனால தான் மதியம் கம்மியா சாப்பிட்டிங்களா என நக்கலாக சிரிக்க ஆரம்பித்தவுடன் வண்டியை நிறுத்தினான்..

ஏன்டா அண்ணா நிப்பாட்டிட்ட என்று கேள்வியாய் நோக்க உன் வீடு என்று கண்ணாலே சுட்டிக்காட்டினான்..

அதை கண்டவள் பதற்றமாக.. "நீங்க வர வேணாமே .. ப்ளீஸ் .. குட்டீஸ்க்கு யாருனு சொல்லனு தெரியல.. அதும் இல்லாமல் இத்தனை நாள் இல்லாத புது உறவு அவர்களுக்கு தேவை இல்லை" என்று நினைக்கிறேன் என்று சற்று காட்டமாக பேச

அதை கேட்ட அருணின் முகத்தில் எள்ளும் கொள்ளும் வெடிக்க... அதை கண்ட இனியா ஏதோ பேச வாய் எடுக்க..

"நாங்கள் ஒன்னும் உறவு வேணாம் என்று ஒதுங்கவில்லை...நீதான் எங்களை ஒதுக்கிவிட்டாய்.. நான் யார் தடுத்தாலும் வீட்டுக்கு வர தான் போறேன் .".என்று அழுத்தமாக கூற அதில் அவன் உறுதி அப்பட்டமாக தெரிந்தது..

நினைவே நனவாகிவிடுவாயாWhere stories live. Discover now