நினைவு 6

654 59 84
                                    

இரவில் தாமதமாக தூங்கினாலும் தெளிவான முடிவோடு தூங்கியதால் காலையில் ஒரு வித புத்துணர்ச்சியோடே எழுந்தாள் இனியா

எழுந்தவள் சமைப்பது குழந்தைகளை பள்ளிக்கு ஆயத்தப்படுத்தவது என அவளின் ஒவ்வொரு வேலையிலும் ஒருவித மகிழ்ச்சி தெரிந்தது...

அவளும் ஸ்கை ப்ளூ நிறச் சேலையில் காதில் ஜிமிக்கி சிறிது ஒப்பனையோடு கிளம்பி வர அவளை பார்த்த அவள் பட்டூஸ்..

" மா.. வாவ்.. இன்னைக்கு அழகா இருக்கிங்க மா..." என தன் அம்மாவை அணைத்துக் கொள்ள அவளும் தன் பிள்ளைகளுக்கு முத்தமிட்டவள்

"அப்போ  .. இத்தனை நாள் அம்மா அழகா இல்லையா" என புருவம் உயர்த்த.

"என் அம்மா எப்போவும் அழகு தான்.. ஆனால் இன்னைக்கு இவ்வளவு அழகா இருக்கிங்க" என அகில் கை விரித்து சொன்னதில் மெய்மறந்தவள் அவனை அணைத்துக் கண்ணத்தில் தன் இதழ் பதித்தாள்... அகில் குட்டியின் இந்த செயல் தன்னவனையே நியாபகப்படுத்தியது... அவன் இவ்வாறு கைவிரித்துச் சொன்னாள் அதில் மயங்கி அவனிடம் சரணடைந்துவிடுவாள்

அப்போது வாலு சங்கி..
" அம்மா.. அவன் ஓவரா ஐஸ் வைக்கிறான் மா நம்பாதிங்க...
நீங்க அழகுதான்.. ஆனால் என்னை மாதிரி அழகு இல்லை.. அப்படிதானே அம்மம்மா" என கண்சிமிட்ட

"ஹா ஹா.. ஆமா ஆமா" அவள் மேலும் கீழுமாய் தலை ஆட்ட

இனியா " அம்மா.. எனக்கு தான் சப்போர்ட் பண்ணனும' என அவளுடன் சண்டையிட்டாள்

அப்போது இனியா போன் வந்தது.. அதில் யார் என்று பார்க்க.. எழில் தான்..

உடனே அவன் வீடியோ காலை இயக்க.. அவள் பட்டூஸ் இரண்டும் " நாணா" என்று ஒருசேர கத்தினர்..

"ஹாய் செல்லம்ஸ்.. என்ன செம ஹேப்பியா இருக்கிங்க .. இவ்வளவு சீக்கிரம் ரெடி ஆகிட்டிங்க" என குழந்தைகளிடம் கேட்டாலும் பார்வையோ அவன் பெட்டர் ஹாப் விடமே இருந்தது..

அதற்கு சமத்து அகில் " நாணா இன்னைக்கு அம்மா ஹேப்பி.. அதான் பட்டூஸ் ஹேப்பி "என கண்ணக் குழியோடு அழகாய் சிரித்தான்...

நினைவே நனவாகிவிடுவாயாWhere stories live. Discover now