நினைவு 10

286 15 13
                                    

காலை பொழுது யாருக்கும் காத்திராமல் அழகாக விடிந்தது.. பறவைகளின் சத்தத்தில் புத்துணர்ச்சியாய் கண்விழித்தாள் இனியா.. ஏனோ இன்றைக்கு தன்னவனை பார்க்க வேண்டும் என்ற ஆசையிலே துரிதமாக அதே நேரத்தில் அழகாகவும் கல்லூரிக்கு தயாரானாள் ... தன் பிள்ளைகளையும் ஆயத்தமாக்கினாள்..

தன்னவனுக்கு பிடித்த அரிசி தேங்காய் பால் பாயசம் செய்தவள் தன்  பிள்ளைகளுக்கும் கொடுக்க ..
" ஐய்ய் ஜாலி பாயாசம்" என குதூகலித்தப்படியே சாப்பிட்ட குழந்தைகள் தன் அம்மாவிற்கும் ஊட்ட தவறவில்லை ..

இனியாவின் முகப்பொலிவை கண்ட அவள் அம்மா " இனிக்குட்டி .. இன்னைக்கு உன் முகம் ரொம்ப அழகா இருக்கு.. என் பொண்ணு எப்பவும் இதே சந்தோசத்தோட இருக்கனும் " என்ற அவள் அம்மாவை கட்டிக்கொண்டாள்

" என் கண்ணே பட்டுறும்" என்று திருஷ்டி முறித்தார் இனியாவிற்கு

உடனே சங்கிக்குட்டி அம்மம்மா "எனக்கும் எனக்கும் நெட்டி பண்ணுங்க" ( அதான்ங்க நெட்டி முறிச்சு திருஷ்டி கழிப்பாங்களே ) என்றதும் என் ராசாத்தி என்று அவளுக்கும் அகிலுக்கும் செய்தார்
அதை பார்த்த சிரித்தவள் .

"சரி அம்மா நான் கிளம்புறேன்.. சாப்பிட்டு மாத்திரை போட்டுகோங்க"

"சரி இனிக்குட்டி பார்த்து போமா .. மறக்காம அந்த மாத்திரையை வாங்கிட்டு வாமா .. பாய் குட்டிமா .. குட்டிப்பா " என்க

" சரி மா.. " என்று அவள் ஸ்கூட்டியை ஸ்டார்ட் செய்ய " டாடா அம்மம்மா" என்று முத்தம் கொடுத்தனர் குட்டீஸ்

கல்லூரியை அடைந்தவள் அவனுக்காய் செய்த பாயாசத்தோடு உள்ஙழைந்தவளுக்கு அப்போது தான் அவனிடம் எப்படி கொடுப்பது என்ற எண்ணம் பிறந்தது

அவன் தன்னவன் என்பது தனக்கு மட்டுமே தெரியும் .‌ ..அவனுக்கும்  தான் புதியவள்.. மற்றவர்களுக்கும் தங்களது உறவு தெரியாது .. அப்படி இருக்கும் போது தான் இதை கொடுத்தால் பார்ப்பவர் தப்பாக பேச வாய்ப்பு இருக்கிறதே.. ஏன் உற்றவரே என்ன நினைப்பார் என்று யோசித்தவாறே கல்லூரியில் கையொப்பம் இட உள்ளே சென்றாள்

நினைவே நனவாகிவிடுவாயாWhere stories live. Discover now