நினைவு 8

568 54 17
                                    

இனியா சொல்லி முடிக்க அருண் உண்மையில் அதிர்ச்சியில் இருந்தான்... செழியன் அடுத்த என்ன செய்யலாம் என திட்டமிட்டவன் ...

"யாழ் .. நீங்க என்ன பண்ணலாம் என்று எதாவது ப்ளான் பண்ணிருங்கிங்களா" என்று கேட்ட செழியனை ஆச்சரியத்தோடும் மகிழ்ச்சியில் கும்மாளமிட்டம் மனதோடும் பார்த்தாள்...

இது அவன் காதலில் உருகி அவளோடு இருந்த காலத்தில் அழைத்த செல்ல பெயர் ... அவளோடு வாழ்ந்ததை மறந்தாலும் அவனின் ஆழ்மனது காதலை இதில் அறிந்துக் கொண்டாள் ...

அதில் அவனை காதலோடு பார்த்தவளை ... அவளின் பார்வை உணர்ந்து மகிழ்ந்தவன் தானும் அவளின் காதல் கண்களில் மயங்கி கண்களால் காதல் மொழி பேசிக் கொண்டிருந்தான்....

அதிர்ச்சியில் இருந்த வெளிவந்த அருண் இவர்களை பார்த்தவன்..." அடப்பாவிங்களா.. இதுங்களுக்கு இந்த ரணக்கலத்துலயும் ஒரு குதூக்கலம் கேக்குது" என மனதில் திட்டியவன் செழியனிடம் சென்று அவனை சுரண்ட கையை தட்டிவிட்டவன் மீண்டும் தன் காதல் மொழியை தொடர அதில் கடுப்பானவன்

" டேய் " என்று கத்த அதில் இருவரும் தன் நிலையை உணர்ந்து அவனை பார்த்தனர்...

செழியனோ இப்படி கரடி மாதிரி என் ரொமேன்ஸ்ஸ கெடுத்துட்டானே என்று முறைக்க இனியாவோ "இப்படியா பார்த்து வைப்ப அவன் என்ன நினைப்பானோ என தன்னையே கடிந்தப்படி வெட்கத்தில் சங்கடமாய் தலை குனிந்து நின்றாள்...

" நீ கலக்கு மச்சான் உம்ம் உம்ம்" என்ற அருணின் கிண்டலில் சிரித்த செழியன் தன்னவளை பார்க்க அவளின் மனதை படித்தவன் போல் அமைதியா இருடா என அருணுக்கு சைகை செய்தான்...

"யாழ் இனியா ... சொல்லுங்க .. " என்று  அவளின் மனத்தை மாற்றும் பொருட்டு வினவ

" என்ன சொல்ல சொல்றான் என்று தெரியலயே" என்று குழப்பத்தில் கண்களை உருட்டி பார்த்தவளை

"அய்யோ முட்டகண்ணி இப்படிலாம் பார்க்காத டி .. க்யூட்டா இருக்கடி யாழ் குட்டி.. அப்பறம் கண்ட்ரோல் மிஸ் ஆகிடும் " மனதுக்குள் கொஞ்சிக்கொண்டிருந்தான்

நினைவே நனவாகிவிடுவாயாWhere stories live. Discover now