19.என் சுவாசத்தின் மறுஜென்மம்

428 8 3
                                    

உடனே அவன் அவளுடைய உடம்பை மறைக்க அவளை கட்டியணைக்க முயல அவளோ அப்படியே தரையில் அமர்ந்து விட்டாள். உடனே அவன் உடுத்திருந்த blazer ஐ கழட்டி  அவளுக்கு போர்த்திவிட்டான். அவள் அதனை தன் பற்றுக்கோளாய் இறுக்கி பற்றிக்கொண்டு கேவி கேவி அழ தொடங்கினாள். அவள் அழுவதை பார்க்க விவானுக்கு கோவம் கலந்த  குற்ற உணர்ச்சியாய் இருந்தது.

          அவளுக்கு இன்னமுமே தான் என்ன தவறு செய்தோம்?  எதற்கு அவள் மேல் அவன் கோவம் கொண்டான். எதற்காக போலிசில் மாட்டிவிட்டான் என்று அவள் யோசித்தாள்.

            ஆம் அவள் அவன் வேண்டுமென்றே இவளை மாட்டிவிட்டுவிட்டான் என்றே நினைத்தாள். தான் ஏதோ தவறு செய்ததாக நினைத்து தன்னை பழி  வாங்க நினைத்து இப்படி செய்துவிட்டான் என்றே நினைத்தாள்.

        கிட்ட தட்ட பாதியளவு  உண்மைதானே! இந்த ஆபீஸ் செக்யூரிட்டி விஷயமும் காவல் நிலையமும் மட்டுமே தற்செயலான
சம்பவம். ஆனால் ஒன்று  மட்டும் உண்மை தீக்ஷித் கூறியது நடக்க துவங்கி இருக்கிறது.

          விவான் அவனை அறியாமலே  விஹானாவிடமிருந்து விலகி கொண்டிருக்கிறான்.

       பின்னர் இன்ஸ்பெக்டரிடம் கூறிவிட்டு போர்மலிட்டிஸ் ஐ முடித்துவிட்டு கிளம்பினர். அதுவரை விஹானா விவானை தலை நிமிர்ந்து பார்க்க கூட இல்லை.

       அதன்பிறகு அவளை பார்த்து வா வீட்டிற்கு செல்லலாம் என்று கூறி அழைத்து சென்று காரில் அமரவைக்க காரின் முன்பக்க கதவை திறக்க, அவளோ எதுவும் பேசாமல் பின்பக்க கதவை திறந்து அமர்ந்துக்கொண்டாள். அந்நேரம் அவளின் செயல் அவனுக்கு கோபத்தை மூட்டிருந்தாலும், தன் மீதுள்ள தவறை எண்ணி, அவளுடன் அந்நேரத்தில் வாக்குவாதம் செய்யாமல் காரை எடுத்தான்.
    
        போகும் வழி எங்கும் அவள் அழுதுக் கொண்டே வந்தாள். விவானால் ஆறுதல் கூட சொல்ல முடியவில்லை.

       விவான் காரை ஒட்டியப்படியே முன்பக்க கண்ணாடி வழியாக விஹானாவை பார்த்துக்  கொண்டே வந்தான்.விடாமல் அழுததில் அவளின் முகம் நன்றாக சிவந்து வீங்கி இருந்தது. அவனுக்கே அவளை பார்க்க மிகவும் பாவமாகவும் குற்ற  உணர்ச்சியாகவும்  இருந்தது.

என் சுவாசத்தின் மறுஜென்மம் Where stories live. Discover now