9.என் சுவாசத்தின் மறுஜென்மம்

2K 114 30
                                    

அன்று நடந்த நிகழ்வுக்கு பிறகு அஞ்சலி தானும் டீயுசன் வருவதாக விஹானாவிடம் கூறினாள். அதற்கு விஹானாவும் மகிழ்ச்சியுடன் சிரித்துக்கொண்டே தலையை ஆட்டினாள்.
அன்றைக்கு வழக்கம் போல் பாடம் சொல்லிக்கொடுக்க வந்த தீக்ஷித்திடம், சார்! இனி அஞ்சலியும் என்னுடன் பாடம் படிக்க போகிறாள் என்று கூறினாள்.
அதற்கு தீக்ஷிதோ! நான் உன்னுடைய வேலைக்காரன் அல்ல நான் உனக்கு மட்டும்தான் சொல்லிக்கொடுக்கவந்துள்ளேன்.அதுவும் நான் ஒன்றும் சம்பளம் வாங்கிக்கொண்டு சொல்லிக்கொடுக்கவில்லை, நீ எனக்கு நெருக்கமானவருடைய பெண் அதனால் உனக்கு படிக்க உதவி செய்கிறேன் அவ்வளவே ! என்று கடுமையாக கூறினான்.
அதனை கேட்ட விஹானாவிற்கு கண்களில் கண்ணீர் சுரந்துவிட்டது.
அதனை பார்த்த தீக்ஷித், அய்யோ ! ஒரு நிமிடத்தில் யோசிக்காமல் கடுமையாக பேசிவிட்டோமே என்று தன்னையே நொந்துகொண்டான்.
அவனுக்கு தன்னுடைய இனிய தருணங்களை கலைக்க யாரோ வரப்போகிறார்கள் என்று மட்டுமே தோன்றியது.
             உடனே, விஹானாவிடம் சாரி அப்பு ஆஃபிஸில் டென்ஷன் அதான் அப்படி கூறிவிட்டேன் என்று கூறி அவளின் கண்ணீரை தன் கையால் துடைத்துவிட்டு அணைத்துக்கொண்டான்.
அவளுக்கு அது வித்தியாசமாக நினைக்க ஏனோ தோன்றவில்லை.
உடனே ஏதோ வண்டியின் ஹார்ன் சத்தம் கேட்டதும் அவளை விட்டு விலகி அமர்ந்தான்.
            உடனே ரூமிற்குள் அனுமதியின்றி அஞ்சலி உள்ளே நுழைந்தாள்.
அதனை கண்ட தீக்ஷித்திற்கு கோவம் வந்தது. விஹானாவை பார்த்து தன்னுடைய கோவத்தை கட்டுப்படுத்தியவன், அஞ்சலியை பார்த்து கதவை தட்டிவிட்டு வரவேண்டும் என்ற அடிப்படை அறிவு கூட இல்லையா? என்று கேட்டான்.
          அதற்கு, அஞ்சலியோ விஹானாவின் அறைக்குள் வர நான் எதற்கு கதவை தட்டிவிட்டு வரவேண்டும்? என்று கேட்டாள்.
            விஹானாவிற்கு மட்டும் அல்ல அனைவருக்கும் பிரைவசி என்பது உண்டு என்று கூறி சண்டை போட்டான்.
            விஹானா, சார் முதல் நாளே சண்டை வேண்டாமே என்று கூறிவிட்டு அஞ்சலியை அமர சொன்னாள்.
இத்தனை நாட்களும் விஹானுவும் தீட்சித்தும் எதிரெதிரே அமர்ந்திருப்பர். அஞ்சலி விஹானாவிற்கும் தீக்ஷித்திற்கும் நடுவே அமர்வதுபோல சாரை இழுத்துப்போட்டு தீக்ஷித்திற்கு நெருக்கமாய் அமர்ந்தாள்.
இதனை சரியாய் கவனித்தானோ இல்லை எதேச்சையாய் கோவத்தினால் செய்தானோ? தெரியவில்லை.
நீ என் பக்கத்தில் அமர்ந்தால் அப்புவிற்கு சரிவர சொல்லி கொடுக்க முடியாது என்று கூறிவிட்டு விஹானாவின் அருகில் அமர்ந்தான்.
அஞ்சலி தீக்ஷித்தை தன் அருகில் கொண்டுவர செய்யும் முயற்சிகளெல்லாம் தனக்கு சாதகமாய் பயன்படுத்தி கொள்ள ஆரம்பித்தான்.
இதனால் அஞ்சலிக்கு காரணமே இல்லாமல் விஹானாவின் மீது வெறுப்பும் பொறாமையும் வளர்ந்துகொண்டே போனது.
இது எதுவும் விஹானாவிற்கு தெரியாமலே போனது.
இவன் விஹானாவை வெளியே அழைத்து செல்லலாம் என்று வந்தால் அஞ்சலியும் விஹானாவுடன் அட்டை போல் ஒட்டிக்கொள்வாள்.
அஞ்சலி சற்று வசதியானவள்.          
              அதனால் நேரம் கிடைக்கும் போதெல்லாம் விஹானாவை மட்டம் தட்டி தீக்ஷித் தனக்கே பொருத்தமானவன் என்ற கருத்தை நிலைநாட்ட விரும்பினாள்.
ஒரு நாள் மூவரும் காரில் செல்லும் போது தீக்ஷித் காரில் ac ஐ விஹானாவிற்கு வியர்ப்பதை பார்த்தவன் விஹானாவிடம் உன் சைடு ac கிளோஸ் ஆகியிருக்கும் ஓபன் செய்துகொள்ள சொன்னான். அதனை திருப்ப தெரியாமல் தடுமாறி கொண்டிருந்த விஹானா திணற தீக்ஷித் காரை ஒட்டியபடியே அதனை திருப்ப கையை பின்னால் கொண்டுவந்து திருப்ப, ac திருப்ப வந்த முன்னால் நகந்த விஹானாவின் முகத்தில் உரச , உடனே தீக்ஷித்தின் முகத்தில் ஒரு மென்நகை படர கையை அப்படியே தன் முகத்தருகே கொண்டுசென்று முத்தமிட்டான்.                    
               அதனை பார்த்த அஞ்சலிகோ பற்றிக்கொண்டு வர விஹானாவை பார்த்து உனக்கு ஒரு ac யை kooda திருப்ப தெரியாதா? என்று கேட்டாள். அதற்கு விஹானாவும் நான் எப்பொழுதாவது தொலைதூரம் சென்றால் அப்பா அம்மாவுடன் டாக்ஸியில் சென்றிருக்கிறேன். அவ்வளவுதான் அஞ்சலி !எனக்கு எப்படி இதெல்லாம் தெரியும்என்று வருத்தத்துடன் கூறினாள்.

         இதனை கவனித்த தீக்ஷித்திற்கு அஞ்சலி மேல் கோவம் வந்தது.
அடுத்த முறை வெளியே செல்லும் போது விஹானாவை தன் அருகில் முன்னால் உட்கார சொன்னான். அதற்கு அஞ்சலி ஏன்? என்று கேட்டாள்.
சிறிது சிறிதாய் தீக்ஷித்திற்கு அஞ்சலியின் வெறுப்பு புரிய ஆரம்பித்தது. அஞ்சலி கேட்டதற்கு தீக்ஷிதோ நீதானே அஞ்சலி கூறினாய் அவளுக்கு ஒண்ணுமே தெரியலனு,அதான் அவளை முன்னால உட்கார சொன்னேன் என்று கூறினான்.இப்படி ஒருநாள்  மல்டி குசைன் (multi cuisine) ரெஸ்டூரண்டிற்கு சென்றனர். அங்கே விஹானாவிற்கு பழக்கமில்லாததால் அவள் தடுமாறுவதை கண்டு ஏளனமாக பேசிய அஞ்சலியை பார்த்து முறைத்துவிட்டு விஹானாவிற்கு dining etiquette ஐ சொல்லிக்கொடுத்தான். இப்படியே அஞ்சலி செய்யும் எல்லாவற்றும் விஹானாவையும் தீக்ஷித்தையும் நெருக்கமாக்கியதே தவிர விலக்கவில்லை. அதேநேரம் தீக்ஷித்திற்கு அஞ்சலியின் விஹானாவின் மீதான வெறுப்பு தெரிய ஆரம்பித்தது.
                 ஆனால் அதன் காரணம் தான் அவனுக்கு விளங்கவில்லை. இது எதுவுமே விஹானாவிற்கு புரியவில்லை. அவள் தனக்கு எதுவும் தெரியவில்லை என்ற கோவத்தில் அப்படி பேசுகிறாள் என்றே நினைத்தாள்.
                 ஒருநாள் அஞ்சலியை தனியே சந்தித்து அவளின் விஹானாவின் மீதான வெறுப்பை பற்றிக் கேட்டான்.
               அதற்கு அவள் உங்களுடன் நெருக்கமாக இருப்பது பிடிக்கவில்லை என்று தீக்ஷித்தின் முகத்திற்கு நேரே கூறிவிட்டாள்.
                அவளின் ஒருதலைக் காதலை  புரிந்துகொண்ட தீக்ஷித் இது தவறு என்று அவளுக்கு புரியவைக்கமுற்பட்டான்.
                  ஆனால் அவளோ அதனை புரிந்துகொள்ளாமல், உங்களுக்கும் விஹானாவிற்கும் ஒத்துவராது.
                   அவள் சரியான பயந்தாங்கொள்ளி, அது மட்டுமில்லாமல் வசதியும் இல்லை. நாங்கள் உங்கள் அளவுக்கு இல்லாவிட்டாலும் நாங்களும் சற்று வசதி படைத்தவர்களே என்று அது இதுவென்று விஹானாவை மட்டம் தட்டினாள். 
          இதனை கேட்டவுடன் தீக்ஷித்திற்கு கோவம் வந்து அஞ்சலியை அடிக்க கையை ஓங்கினான்.
            அதனை பார்த்த அஞ்சலி பயத்தில் கண்களை மூடிக்கொண்டாள். இனிமேல் தான் நீங்கள் எதிர்பார்க்கும் மற்றும் எதிர்பாரா  திருப்பங்கள் இவர்கள் வாழ்க்கையில் காத்திருக்கிறது. தவறாமல் படியுங்கள் !!!!!!
               

என் சுவாசத்தின் மறுஜென்மம் Where stories live. Discover now