5.என் சுவாசத்தின் மறுஜென்மம்

2K 76 16
                                    

ஜாம்ஷெட்பூரை வந்தடைந்த தீக்ஷித் நேரே தன் அத்தை மாமாவின் படத்திற்கு சென்று வணங்கினான்.இதனைக் கண்ட அவன் தாய் தான் காண்பது, கனவா? இல்லை நனவா? என்று தன்னையே கிள்ளிப்பார்த்துக்கொண்டார். அதனை பார்த்து சிரித்த அவன் தன் தாயிடம் தன் தந்தையை பற்றி விசாரித்தான். பின்னர் அவரையும் சந்தித்துவிட்டு தன் அறைக்கு திரும்பியவன் அங்கே வேலைக்காரர்களை ஏவிக் கொண்டிருந்தாள். அவன் அதனை கண்டதும் கோபமுற்று, என் அறையில் நீ என்ன செய்துக்கொண்டிருக்கிறாய்? ஊர்மிளா என்றான்.
          அதற்கு அவள் உங்கள் அறையை உங்களுக்காக தயார் செய்துகொண்டிருக்கிறேன் தீக்ஷித் என்றாள்.
            என்னசெய்வது நானும் எவ்வளவுதான் திட்டினாலும் இந்த முட்டாள்கள் ஒழுங்காக கேட்பதில்லையே. நீங்கள் வருவதற்குள் உங்கள் அறையை தயார் செய்யவேண்டும் என்று நினைத்திருந்தேன்.
              தீக்ஷிதோ என் அறையை நீ எதற்கு தயார் செய்கிறாய்? என் வேலைக்காரர்களை நீ ஏன் அதட்டுகிறாய்?  உன் அதட்டல்களையெல்லாம் உன் அம்மா வீட்டில் வைத்துக்கொள் இங்கே உன் அதிகாரத்தை காட்டாதே! என்று கூறினான்.
               உங்கள் அறையை நாந்தானே சுத்தம் செய்ய வேண்டும் ஏனெனில் நான் உங்களின் வருங்கால மனைவி. நான் உங்களின் வருங்கால மனைவியென்றால் இவர்களின் வருங்கால எஜமானி நான்தானே இப்பொழுதே இவர்களை நான் அதட்டி வேலைவாங்கினால் தான் நம் திருமணத்திற்கு பிறகு இவர்கள் ஏன் சொல்லை தட்டமாட்டார்கள் என்று கூறினாள். 
                இதனை கேட்டவுடன் தீக்ஷிதீர்க்கு வந்த கோவத்திற்கு அளவேயில்லை. யார்? கூறினார்கள் நீ என் மனைவி என்று  கேட்டான். யார்கூற வேண்டும் இந்த விஷயம் அனைவர்க்கும் தெரிந்ததுதானே என்று கூறினாள்.
                என் வருங்கால மனைவியை நான் தான் முடிவு செய்யவேண்டும்.ஒருநாளும் நீ என் மனைவியாக முடியாது அந்த கனவை இப்பொழுதே குழிதோண்டி புதைத்துவிட்டு என்று கூறி அவளை தரதரவென்று இழுத்துவந்து நடு ஹாலில் வைத்து அனைவரையும் அழைத்து இவள் தன்னுடைய வருங்காலமனைவி இல்லை என்று கூறினான். அதனை கேட்ட அவன் தாய் கண்ணா கோபத்தில் பேசாதே என்று கூறினார். அவனோ தனக்கு இவள்தான் மனைவி என்றால் இப்பொழுதே தான் இந்த அரண்மனையை விட்டு வெளியேற போவதாக கூறினான். உடனே அவனது தந்தை இந்த விஷயத்தை இதோடு நிறுத்திக்கொள்ளுங்கள் முதலில் நாளை செய்ய வேண்டிய வேலைகளை பாருங்கள் என்று கூறிவிட்டு தன் அறைக்கு சென்றுவிட்டார். இவனும் உடனே அவளை முறைத்துவிட்டு தன் அறைக்கு சென்று விட்டான். அவன் சென்றதும் ஊர்மிளா அவள் தாயிடம் என்ன அம்மா அவன் என்னை இந்த அளவிற்கு அவமானப்படுத்துகிறான் நீங்களும் பார்த்து கொண்டு சும்மா இருக்கிறீர்களே என்று கேட்டாள். உஸ்ஹ்ஹ் இங்கே எதுவும் பேசாதே எங்கள் அறைக்கு சென்று பேசுவோம் வா என்று கூறி அவளை அவர்களின் அறைக்கு அழைத்து சென்றனர்.
           அங்கே சென்றபின் கதவடைத்துவிட்டு என்ன கண்ணா கொஞ்சம் பொறுமையா இருக்கமாட்டாயா ஜான்வி  தான் உங்கள் திருமணத்தை பற்றி நாளை மறுநாள் தீக்ஷித்திடம் பேசப்போவதாக கூறினாளே அதற்குள் உனக்கு என்ன அவசரம் என்று கேட்டாள். அம்மா அவன்தான் என்னை திருமணம் செய்துகொள்ளப்போவதில்லை என்று கூறுகிறானே என்று கேட்டாள்.
           என்னால் அவனும் அவனின் பணமும் இல்லாமல் வாழமுடியாது என்று கூறினாள். எங்களுக்கும் அது தெரியும் கண்ணா நாளை மறுநாள் வரை பொறுத்திரு நாளை மறுநாள் ஜான்வி எப்படியும் அவனிடம் அவன்தந்தையின் உடல் நலத்தை காட்டி கெஞ்சி அனுமதி
பெற்றுவிடுவாள் என்று கூறினாள். அதுவரை அவனை பொறுத்துக்கொள்ள கூறினாள். நீ அவனை திருமணம் செய்துக்கொண்டால் மொத்த சாம்ராஜ்யமும் நமதே என்று கூறி அதன் பிறகு அவனை பார்த்துக்கொள்ளலாம் என்று பொறுமையாக இரு என்று கூறினர்.
              மறுநாள் வழக்கம் போல் சடங்குகள் நடைபெற்று எல்லாம் இனிதாகவே மாலை முடிவுற்றது. என்றும் ரொம்ப வருடம் கழித்து தீக்ஷித் இதில் பங்குகொண்டதில் அவனின் உறவினர் மட்டுமின்றி ஊர்மக்களும் மகிழிச்சியடைந்தனர். எல்லாம் முடிந்ததும் தீக்ஷித் அவன் அறைக்கு ஓய்வெடுக்க சென்றபோது அவனின் கைபேசி அழைத்தது. அவன் யாரென்று பார்க்க அவன் முகத்தில் அப்படி ஒரு பிரகாசம்.உடனே அட்டென்ட் செய்து சொல்லுங்கள் விஹானாவை பற்றி விவரம் கிடைத்ததா என்று கேட்டான். அவர் போனில் கூறிய விவரத்தை கேட்டதும் அவனின் முகம் மலர்ந்தது. உடனே அவரிடம் சென்னைக்கு டிக்கெட் போடா சொல்லிவிட்டு பின்னர் அவன் சென்னைக்கு  கிளம்ப பேக் செய்தான்.பின்னர் தன் பெற்றோரிடம் தான் இன்றிரவே சென்னைக்கு புறப்படுவதாக சொன்னான். அதனை கேட்ட ஜான்வி ஏன் உடனே கிளம்புகிறாய் என்று கேட்டார். அதற்கு அவன் ஒரு முக்கியமான விஷயம் என்று மட்டும் கூறினான். அவன் தாயாரோ நான் உன்னிடம் முக்கியமான விஷயத்தை பற்றி கூறவேண்டும் என்றார். அதை இப்பொழுதே கூறுங்கள் என்றான். அது உன் திருமண விஷயம் தான் கண்ணா என்றார்.  உடனே அவன் என் திருமணமா யாருடன் என்று கேட்டான். உனக்கும் ஊர்மிளாவிற்கும் என்றார்.
             யாரை? கேட்டு முடிவு செய்தீர்கள், அம்மா! என்று கேட்டான்.அவரோ எத்தனை நாள்தான் நீ இப்படி இருப்பாய்? கண்ணா என்றார். உனக்கும் திருமணம் ஆக வேண்டும் அல்லவா என்றார்.
               உடனே அவன் நான் நிச்சயம் திருமணம் செய்து கொள்ளத்தான் போகிறேன் ஆனால் ஊர்மிளாவை அல்ல என்றான்.
             எனக்கு சிறிது அவகாசம் தாருங்கள் நான் உங்கள் விருப்பத்தை நிறைவேற்றுகிறேன் என்றான்.
              எவ்வளவு காலம் அவகாசம் வேண்டும் கேட்டனர். அவன் மூன்றரை வருடங்கள் என்றான். அவ்வளவு காலம் காத்திருக்க முடியாது என்றனர். அதற்கு அவன் சரி ஒரு வருட அவகாசம் தாருங்கள் என்றான். அவர்களும் ஒரு வருடம் தானே என்று அவனுக்கு அவகாசம் அளித்தனர். அதுவரையில் இத்திருமணத்தை பற்றி யாரும் என்னை வற்புறுத்தவேண்டாம் என்று கூறிவிட்டு சென்னைக்கு புறப்பட்டான்.
               அவன் சென்றபின் ஜான்வியிடம் தீக்ஷித்திடம் திருமணத்தை பற்றி பேசினாயா என்று கேட்டார் அவருடைய அண்ணி அதாவது பிரதாப்பின் மனைவி . ஜான்வியும் அவரிடம் நடந்தை கூறினார். அதனை கேட்ட அவரோ இப்படியா பேசுவது உன் அண்ணன் மகளுக்கு எத்தனை வரன்கள் வந்துள்ளது தெரியுமா?  நாங்கள் ஏதோ சொந்தம் விட்டுவிடக்கூடாது என்பதற்காக பேசினால் நீங்களும் இழுத்து கொண்டே போகிறீர்கள் என்று கேட்டவுடன் ஜான்வி கோபமாகி, உங்கள் மகளுக்கு நல்ல வாழ்க்கை அமைகிறது என்றால் எனக்கு மகிழ்ச்சியே உங்களால் காத்திருக்க முடியாவிட்டால், அவளுக்கு வந்துள்ள வரன்களில் ஒன்றை முடித்துவிடுங்கள் என்று கூறிவிட்டார். 
              அதனை கேட்ட அவரோ ஜான்விடம் பதமாக என்ன ஜான்வி நான் அவனுக்கும் ஊர்மிளைக்கும் வயது ஆகிக்கொண்டே போகிறது என்ற அக்கறையில் தானே கேட்டேன்  இதற்கெல்லாம் கோபித்துக்கொள்ளலாமா என்று கேட்டார்.
               இல்லை அண்ணி நான் தவறாக கூறவில்லை நீங்கள் சொல்வதும் மெய்தான் அவளுக்கும் வயதாகிக்கொண்டே போகிறது ஒரு வேளை அவன் திருமணத்திற்கு சம்மதித்தாலும் ஊர்மிளாவை கட்டிக்கொள்ள சம்மதிப்பான் என்று தோன்றவில்லை ஆதலால் அவளுக்கு வேறு இடத்தில் மாப்பிள்ளை பார்க்கலாம் என்று கூறினார்.
             அதனை கேட்டதும் அவரோ அதன் தீக்ஷித் ஒரு வருட அவகாசம் கேட்டிருக்கிறான் அல்லவா அது முடிந்து அவன் ஊர்மிளாவை வேண்டாம் என்று சொன்னால் பின்னால் பார்க்கலாம் என்றார். ஜான்வியும் சரி அண்ணி நான் அவருக்கு மருந்து கொடுக்கவேண்டும் செல்கிறேன் என்று கூறிவிட்டு சென்றுவிட்டாள்.
                 இவ்வளவு நேரம் ஒளிந்திருந்து கேட்ட பிரதாப்பும் அவன்மகளும் அருகில் வந்து என்ன இவர்கள் இப்படி கூறுகிறார்கள் இத்தனை காலம் கஷ்டப்பட்டு செய்த அனைத்தும் வீணாய்போனதே என்றனர். அதற்கு பிரதாப்பின் மனைவி இதனை நாட்கள் திருமணத்திற்கு பிடிக்ககொடுக்காதவன் இன்று அவகாசம் கேட்கும் அளவிற்கு வந்துள்ளான். எல்லாம் அந்த தைரியம் என்று கூறிவிட்டு நாம் உடனே பழையவேலையை ஆரம்பித்தால் தான் சரி வரும் என்று கூறிவிட்டு திட்டம் தீட்ட தொடங்கினர்.
                அவர்கள் கூறியதும் உண்மையே ஜான்வியும் அதைத்தான் மனதில் நினைத்து கோபத்தில் அவரையும் அறியாமல் கூறினார்.
                 இங்கே நமது நாயகன் பிலைட்டில் கனவு கண்டுகொண்டே அவர் செய்யவேண்டியதை யோசிக்கிறார்.
                 இனி அவர் விஹானாவை தன் வாழ்வில் கொண்டுவர என்ன செய்ய போகிறார்.
                  பொறுத்திருந்து பார்ப்போம்..............

என் சுவாசத்தின் மறுஜென்மம் Hikayelerin yaşadığı yer. Şimdi keşfedin