4.என் சுவாசத்தின் மறுஜென்மம்

2.1K 81 12
                                    

விஹானாவிற்கு நேரமாகிட்டவிட்டதென்று அவள் அப்பாவை வர சொல்லிருந்தாள் அவள் அப்பா வெளியே வருவதை பார்த்தவள் அவர் உள்ளே வருவதற்குள் இவள் வெளியே கிளம்பிவிட்டாள். தீட்சித்தும் அவள் தனியே வெளியே செல்வதை பார்த்தவன் தான் பேசியபிறகு தனக்கு முக்கிய வேலை இருப்பதாக கூறிவிட்டு வந்து அவளை சுற்றும்முற்றும் தேடினான். அவள் தான் வீட்டிற்கு சென்றுவிட்டாளே.
அவனால் அவனை கட்டுப்படுத்த முடியவில்லை. அவள் தனியாக வீட்டிற்கு சென்றிருக்க மாட்டாள் என்று நினைத்து பள்ளிமுழுக்க தேடினான்.
அவள் கிடைக்கவில்லை என்று தெரிந்ததும் வெறி பிடித்தவன் போல அபூர்வா என்று கத்தி பிதற்றிக்கொண்டிருந்தான். அவனை அழைத்து போக வந்த அவனுடைய டிரைவர் அவனின் நிலை கண்டு கொஞ்சம் அல்ல ரொம்பவே பயந்தார் கிட்டே நெருங்க, பிறகு பொறுமையாக அவனை அழைத்தார். அவரை பார்த்ததும் தன் உணர்வுகளை கட்டுப்படுத்தியவன் தானே வண்டி ஓட்டுவதாக கூறி அவரை வீட்டிற்கு போக சொன்னான். அவரும் வேறுவழியில்லாமல் சரி என்று கிளம்பிவிட்டார். விஹானா அவளுடைய தந்தையுடன் சென்றது அறியாமல் அவள் தனியே சென்றிருப்பதை அறியாத அவன் அவள் தனியே சென்றிருந்தால் வீடு அருகிலேதான் இருக்கும் என்று கருதி பக்கத்து தெருக்களில் எல்லாம் அலைந்து திரிந்தான். அவனால் அவளை கண்டுபிடிக்கவே முடியவில்லை.
பிறகு பள்ளித்தலைமை ஆசிரியரிடம் கேட்கலாம் என்று நினைத்தவன் அந்த யோசனை தனக்கு முன்பே வராததை நினைத்து நொந்துகொண்டான். அவருக்கு அழைக்கலாம் என்று நினைத்து செல்லை எடுத்தவன் மணியை பார்த்தவன் இப்பொழுது அழைப்பது முறையல்ல என்று கருதி அப்படியேவைத்துவிட்டான்.
அவனால் எதுவும் செய்யமுடியவில்லை. அப்படியே வண்டியை சாலை ஓரம் நிறுத்திவிட்டு காரைவிட்டு கீழிறங்கி வந்தவன் அப்படியே காரில் சாய்ந்து அமர்ந்து அவளின் சிறுவயது புகைப்படங்களை எடுத்து பார்த்து பிதற்றியவன் அப்படியே உறங்கிவிட்டான். எப்பொழுது உறங்கினான் என்றே தெரியவில்லை.
கண்களை தேய்த்துக்கொண்டே விழிக்க முயற்சித்தவன் கண்கூசவும் தான் எங்கிருக்கிறோம் என்று பார்க்க ஆரம்பித்தான் அப்பொழுதுதான் நேற்றைய நிகழ்வுகளை நினைத்தவன் தாமதிக்காது தனது செல்லை எடுத்து விஹானாவின் பள்ளித்தலைமை ஆசிரியரை தொடர்புகொண்டு விஹானாவை பற்றி விசாரித்தான். அவர் ஒன்றும் புரியாமல், என்ன? எதற்கு? என்று கேட்டார். உடனே அவனுக்கு அப்படி ஒரு கோவம் வந்துவிட்டது நான் கேட்டால் கொடுக்கவேண்டியதுதானே அதை விடுத்து நம்மை கேள்வி கேட்கிறாரே என்று நினைத்தவன்.தனக்குவந்த கோபத்தை கட்டுப்படுத்தி அவரிடம் ஸ்பான்சர்ஷிப் என்று என்னென்னவோ கூறி அவளின் விவரத்தை கேட்டான். அவர் தான் நாளை மறுநாள் விவரங்களை அனுப்புவதாக கூறினார். ஏன் என்று அவன் கேட்டான். அதற்கு அவர் இன்றும் நாளையும் பள்ளி விடுமுறை என்றும் நாளை மறுநாள்  பள்ளிக்கு போய் விவரத்தை அனுப்புவதாகவும் கூறினார்.
             அவன்தான் முக்கியவேலையாக வெளியூர் செல்லவிருப்பதாகவும் உடனே வேண்டும் என்றும் கூறினான். சற்று யோசித்த அவர் பள்ளி விடுதி காப்பாளரிடம் கூறிவிட்டு அவரை அனுப்ப சொல்கிறேன் என்று கூறினார்.
அவர் கூறியவுடன் சரி என்று கூறி தன் கைபேசி எண்ணிற்கு விவரங்களை அனுப்ப சொல்லி வைத்துவிட்டான். அவருக்கு இவனின் செயல்கள் விசித்திரமாக பட்டது. இவனும் தன்னை என்ன நினைப்பார்கள் என்ற கவலைக்கூட இன்றி வீட்டிற்கு போய் கிளம்பினான் விஹானாவின் வீட்டிற்கு செல்ல.
           கிளம்பிவிட்டு செல்லையே பார்த்துக்கொண்டிருந்தான். அவனது வாட்ஸாப் கூவியதும் அதனை எடுத்து முதலில் அவளின் date of birth ஐ ஆராய்ந்தவன். அவளின் வயது 17 என்று இருக்கவும் தன் வயதை ஒப்பிட்டு பார்த்தான். அவளுக்கும் தனக்கும் 9 வருட இடைவெளியை எண்ணி முதலில் அதிர்ந்தவன் பின்பு 9 வருடம் தானே  என்று தன்னை தானே சமாதானம் செய்துக்கொண்டான். என்ன ஆனாலும் அவள் சம்மதித்தாலும் சம்மதிக்காவிட்டாலும்  அவளை தான் கல்யாணம் செய்துகொள்ளவேண்டும் என்று உறுதியாக நின்றான்.
              உடனே அதிலிருந்த முகவரிக்கு புறப்பட்டான்.அங்கே அவள் வீட்டை சென்றடைந்தவன் வீடு பூட்டிருப்பதை அறிந்து அருகில் விசாரித்தான் . அவர்கள் விஹானா வீட்டினர் அவர்களின் சொந்த ஊருக்கு சென்றிருப்பதாகவும் வர இரண்டு நாட்கள் ஆகும் என்று தெரிவித்தார்.
                அவர்களின், சொந்தவூர் எது? என்று விசாரித்தான். அதற்கு விஹானாவின் பக்கத்துவீடுக்காரரோ
ஏதோ ஊர் பேர் சொன்னார்கள் தனக்கு மறந்துவிட்டதாக கூறினார்.

       செய்வதறியாது திரும்ப வீட்டிற்கு வந்தவன் இன்னும் அவளை காண இரண்டு நாள் காத்திருக்க வேண்டுமா என்று நினைத்து வருந்தினான். ஆஃபீஸிற்கு செல்ல மனமில்லாமல் பெட்டில் படுத்தவன் விஹானா வோடு கனவுலகில் சஞ்சரித்தான்.
               எவ்வளவு நேரம் அப்படி இருந்தானோ தனது செல் அடிக்கவும் நினைவு உலகிற்கு வந்தவன் யாரென்று எடுத்து பார்த்தான். தனது அம்மா என்று பார்த்தவுடன் அட்டென்ட் செய்து நலன் விசாரித்துவிட்டு ஏதேனும் முக்கிய விஷயமா என்றான்.
               அதற்கு அவர் அத்தை மாமாவின் நினைவு நாளை மறந்துவிட்டாயா என்று கேட்டார்.அப்பொழுதுதான் அவன் ஞாபகத்தில் உரைத்தது நாளை அவர்களின் நினைவு நாள் என்று, உடனே அவன் அம்மாவிடம் விஹானாவை பற்றி கூறலாமா என்று நினைத்தவன். நேரில் கூறிக்கொள்ளலாம் என்று நினைத்துக்கொண்டான். அவன் அம்மா விடம் இன்று இரவு வருவதாகக்கூறிவிட்டு காலை கட் செய்தான். பின்னர்
மானேஜரை அழைத்தவன் விஹானாவை பற்றி கூறி அவளை பற்றிய முழு விவரங்களை ஆராய்ந்து தன்னிடம் தெரிவிக்க சொன்னான்.
பிறகு தான் கிளம்புவதற்கு வேண்டிய ஏற்பாடுகளை செய்தான்.
         
         அவன் வருவதாக சொன்னதும் அவன் அம்மாவிற்கு பெரிய ஆச்சரியம் ஏனென்றால் அபூர்வா இறந்திலிருந்து அங்கு அவன் செல்ல மாட்டான்.  அன்றைய நாளில் அவர்களின்  கோவிலில் அன்னதானம் செய்வார்கள். நிறைய தானதர்மங்களை செய்வார்கள். ஒரு நாள் தீக்ஷிதர் ஒருவர் அவ்வாறு செய்வதன் மூலம் அவர்கள் மேலிருந்து ஆசிர்வதிப்பார்கள் அதனால் அபூர்வாவின் வாழ்க்கை மிகவும் மகிழ்ச்சியாக இருக்கும் என்று கூறினார். அபூர்வா இருந்தவரை அந்த நாளில் இவனும் அதை செய்தான். அவள் இறந்ததில் இருந்து அதெல்லாம் பொய் என்று கூறி அங்கு செல்வதை நிறுத்திக்கொண்டான்.ஆனாலும் அவனுடைய அம்மா அந்த நாளில் அவனை வரச்சொல்லி அழைப்பார் என்றாவது, ஒரு நாள் வருவான் என்ற நம்பிக்கையில்.அவன்தான் அங்கு செல்லவே  மாட்டான் ஆனால் இந்த முறை அங்கு சென்றால் அபூர்வா தனக்கு கிடைக்க வாய்ப்பிருக்கிறது என்று கூறி அங்கு செல்ல தயாரானான்.

என் சுவாசத்தின் மறுஜென்மம் Where stories live. Discover now