15.என் சுவாசத்தின் மறுஜென்மம்

1.7K 46 8
                                    

sry for the late update guys
This time i post a little bit long update.Hope u will enjoy this update!!!!!!

அன்றிலிருந்து கல்லூரியில் மூன்று நாட்களுக்கு விடுமுறை. விஹானாவை வீட்டிற்கு கூட்டிவர வேண்டும். ஆதலால் வீட்டில் விஹானாவின் அம்மா விவானின் காரியதரிசியிடம் விவரம் கூறி நாளைக்கு தான் செல்ல அனுமதி கோரினார்.

உடனே அவரும் விவானிடம் கூறிவிடுகிறேன் நீங்கள் சென்று அழைத்து வாருங்கள் என்று கூறினார்.

அவர் சரி நாளை காலை நான் கிளம்புகிறேன் என்று கூறிவிட்டு சென்றார். அவர் சென்றதும் விவானின் காரியதரிசி விவானிடம் விபரத்தை உரைத்தார்.

அதனை கேட்ட விவானுக்கு ஏதும் சரியாக படவில்லை. கல்லூரிக்கு உள்ளே இருக்கும்வரை ஏதும் பிரச்சனை இல்லை. வரும் வழியில் அவர்கள் தீக்ஷித்தையோ இல்லை அவன் சம்பத்தப்பட்ட யாரையாவது சந்தித்தால் பிரச்சனையாகி விடுமே? என்று யோசித்தான்.

பின்னர் தான் ஊருக்கு நாளை வர இருப்பதாகவும் வரும் வழியில் தான் விஹானாவை அழைத்து வருவதாகவும் கூறிவிட்டு காலை கட் செய்தான்.

விஹானாவின் அம்மாவிடம் இதை பற்றி அவனின் காரியதரிசி கூறியதும் அவருக்கும் இது சரி என்றே தோன்றியது. அதனால் அவரும் சரி என்று விட்டு அவரின் வேலையை பார்க்க சென்று விட்டார்.

மறுநாள் விஹானாவும் மிகவும் மகிழ்ச்சியாக கிளம்பினாள்.
இதற்கிடையே இவளது சூப்பர் சீனியரான விசாவிற்கு கொடுத்த டிபார்ட்மென்ட் வேலைகளை தனது ஜூனியரான விஹானாவின் தலையில் கட்டிவிட்டாள். பொதுவாக டிபார்ட்மென்ட்டில் இருக்கும் வேலைகளை விடுதியில் இருக்கும் மாணவியரிடமே ஒப்படைப்பர்.

இன்று தான் வீட்டிற்கு சீக்கிரமே செல்லவேண்டும் என்று ஒரு காரணத்தை கூறி hod யிடம் அனுமதி கேட்டாள். அதற்கு, அவர் விடுதியில் வேறு யாரிடமாவது இவ்வேலையை ஒப்படைத்துவிட்டு நீ செல்! என்றார்.

அந்த நேரம் விஹானாவும் தன்னுடைய tutor அழைத்தார் என்று வந்தாள். அவளுடைய அட்மிஷன் சம்பந்தப்பட்ட ஏதோ ஒரு form இல் அவளுடைய பெற்றோரோ அல்லது கார்டியனுடைய sign வாங்கப்படாமல் இருந்தது. அதனை விஹானா வீட்டிற்கு அழைத்து செல்ல வீட்டிலிருந்து பெற்றோரோ கார்டியானோ வரும் பொழுது கையெழுத்து வாங்கி தந்து விட்டு செல்ல கூறினார்.

என் சுவாசத்தின் மறுஜென்மம் Where stories live. Discover now