11.என் சுவாசத்தின் மறுஜென்மம்

2K 132 23
                                    

            விஹானா அழுதுகொண்டே இருந்தாள். விருந்தினர் அனைவரும் சென்றுவிட்டனர் என்ற குறுந்செய்தி அவனின் கைபேசிக்கு வந்தவுடன் விஹானாவின் வாயிலிருந்த கையை எடுத்தான். எடுத்தவுடன் விஹானா மயங்கி கீழே சரிந்து விழப்போனாள். அவளை தாங்கி பிடித்து கன்னத்தை தட்டி பார்த்தான்.
               அவளோ மயக்கத்தில் இருந்து  எழவில்லை. அவளை தூக்கிக்கொண்டு தன்னுடைய அறைக்கு சென்று அவளை அங்கு படுக்க வைத்துவிட்டு, தன்னுடைய அறையை விட்டு வெளியே வந்தான். விஹானாவை பார்ப்பதற்கு வந்த தன் பெற்றோரரையும் தடுத்து ஹாலிற்கு கூட்டிக்கொண்டு வந்தான்.
               அமர் தீக்ஷித்தை பார்த்து கேள்விகளால் துளைத்துஎடுக்க, அவர்களை பார்த்து அனைத்தையும் கூறுகிறேன், என்று அவனுக்கு தெரிந்தவற்றை கூற ஆரம்பித்தான்.
                 இவள் பெயர் விஹானா.இவளின் பெற்றோரரான மூர்த்தியும் விஜயாவும் நடுத்தரவர்க்கத்தை  சேர்ந்தவர்கள். ஆனால் இவர்கள் விஹானாவின் சொந்த  பெற்றோர் அல்ல. விஹானா யாரென்றால் அபூர்வாவின் சொந்த சித்தப்பாவின் மகள். அபூர்வாவின் அப்பாவிற்கு கூட பிறந்த ஜீத் குரானா விற்கும் அவரது மனைவியான பபிதாவிற்கும் பிறந்தவள் தான் விஹானா.
                20 வருடத்திற்கு முன்பு குழந்தை வரம் வேண்டி வடஇந்தியாவிற்கு யாத்திரை வந்தவர்கள் தான் விஹானாவின் தற்போதைய பெற்றோர். அப்பொழுது அவர்கள் வந்த அதே ரயிலில் ஜீத்தின் குடும்பமும் வந்துள்ளது. அப்பொழுது ரயிலில் சந்தித்து இருகுடும்பமும் நட்பாகியுள்ளது.
                அப்பொழுது நடந்த அந்த கோர விபத்தில் ஜீத் மற்றும் பபிதாவும் சம்பவ இடத்திலே இறந்துவிட்டனர். மூர்த்தியும் விஜயாவும் பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
                 விஹானா ரயிலில் அவர்களுடன் விளையாடிக்கொண்டு இருந்தாள். ஆதலால் இவர்களை மருத்துவமனையில் சேர்த்தவர்கள் மூர்த்தி மற்றும் விஜயாவின் குழந்தை என்று சேர்த்துவிட்டனர்.
                     ஜீத்திடம் பேசியதில் ஜீத் காதல் kaல்யாணம் செய்துகொண்டு தனியே வாழ்வதாக கூறியுள்ளார். ஆதலால் அக்குழந்தையை தேடி யாரும் வர வாய்ப்பில்லை என்று கூறி அவர்களே வளர்த்துவந்துள்ளனர்.
                    அவர்கள் காயம் தேறி வர ஒன்றரை வருடங்கள் ஆனது பின்னர் அங்கேயே இரண்டு வருடங்கள் வேலை பார்த்துவிட்டு விஹானாவின் 3 வயதில் சொந்த ஊருக்கு திரும்பியுள்ளனர். ஊரில் அனைவரிடமும் தனக்கும் விஜயாவிற்கும் பிறந்த குழந்தை என்று நம்பவைத்துள்ளார்.
                 அதன்பிறகு தான் அவளை சந்தித்தது பற்றியும் அவளின் பெற்றோரிடம் பேசியதை கூறினான் தீக்ஷித். விஹானாவின் பெற்றோர் முதலில் உண்மையை ஒப்புக்கொள்ளவில்லை. பின்னர் டிஎன்ஏ டெஸ்ட் எடுக்கப்போவதாக கூறி அப்படி எடுத்து உண்மையை வெளியே  வரவழைத்து எங்களுடன் விஹானாவை நாங்கள் கூட்டிசெல்வோம்.
                     அப்படி நாங்கள் அழைத்துச்சென்றால் நீங்கள் திரும்ப விஹானாவை பார்க்கவே முடியாது அதற்கு பதிலாக நான் கூறுவதை செய்தால் அவளுடன் நீங்கள் கடைசிவரை அவளின் வளர்ப்பு பெற்றோராக இருக்கலாம் என்று கூறி நான் நம்மை பற்றியும் அப்புவை பற்றியும் கூறியதால்தான் அவர்கள் என்னுடைய திட்டத்திற்கு சம்மதித்தார்கள் என்று கூறினான் தீக்ஷித்.
                  உங்கள் எல்லாருக்கும் முன்பு  என் பிறந்தநாள் அன்று அனைவருக்கும் இன்பஅதிர்ச்சி கொடுக்கலாம் என்று நான் அவளை இங்கு அழைத்துவந்தேன். அதற்குள் நீங்கள் அவளுக்கு அதிர்ச்சி கொடுத்துவிட்டிர்கள்.
                    அவளுக்கு பேசி புரியவைத்து அவளை திருமணம் செய்யலாம் என்று இருந்தேன்.போகிறபோக்கை பார்த்தால் அவளை நான் கட்டாய திருமணம்தான் செய்ய வேண்டும் போல் உள்ளது.
                  இவன் இவ்வாறு கூறியதும்
அப்போது என் மகளின் திருமணம் என்று பிரதாப்பின் மனைவி வாயெடுக்க, அதே நேரம் தீக்ஷித் என்று ஊர்மிளையும் கத்த, அனைவரும் பிரதாப்பின் குடும்பத்தை பார்த்தனர்.
                 பிரதாப்பின் மனைவியோ அண்ணி, என் மகள் பிறந்ததில் இருந்து அவளுக்குத்தான் தீக்ஷித் என்பது முடிவான விஷயம் இடையில் அந்த அபூர்வாவிற்கு பேசிமுடித்தீர்கள் துரதிஷ்டவசமாக அவள் இறந்துவிட்டாள். அதன் பிறகு அவளின் திருமணத்தை நீங்கள் தானே நடத்தி  கொடுப்பதாக வாக்களித்தீர்கள்! என்று கேட்டாள்.
  
              அதற்கு அமர், இதோபார் அபூர்வா ஒன்றும் துரதிஷ்டவசமாக இறக்கவில்லை அவளை கொன்றது உன் கணவன் அவளை மட்டுமல்ல, அவளின் பெற்றோரையும் அவன்தான் கொன்றான் என்பது இங்குள்ள அனைவருக்கும் தெரியும். அவன் திருந்திவிட்டேன் என்று என் காலை பிடித்து கதறியதால்தான் அவனை உங்களுக்காக மன்னித்தேன்.

                பின்னர் ஜான்வியிடம் அவளை மூளை சலவை செய்து ஊர்மிளையை கட்டிவைக்க என்னிடம் பேச சொன்னாய். நானும் தீக்ஷித்தின் நிலை கருதி அவனை விரும்பும் ஊர்மிளையை தீக்ஷித்தின் சம்மதத்தோடு கட்டிவைக்கலாம் என்று அவனிடம் பேசினேன். அதற்கு அவனோ ஊர்மிளையை மணக்க  மறுத்துவிட்டான்.
                 அவனே உங்களின் எண்ணப்படி  நான் திருமணம் செய்துகொள்ளதான் போகிறேன் ஆனால் அதற்கு ஒரு வருட அவகாசத்தையும் கேட்டான். நானும் அதற்கு சம்மதித்தேன்.
                 பின்னர் நீ திரும்ப திரும்ப ஜான்வியை நச்சரிக்க தொடங்கினாய். அதற்காக அவள் நான் தீக்ஷித்திடம் பேசி பார்க்கிறேன் என்று கூறினாலே தவிர  உனக்கு வாக்கொன்றும் அவள் அளிக்கவில்லை என்று கூறினார்.
                 கடைசியாக தீக்ஷித் எதுவும் கூறாமல் , அத்தை அபூர்வாவிற்கு நீங்கள் செய்த பாவங்களுக்கும் நான் அவளை பிரிந்து வாடுவதற்காகவும் தானே  பிராயச்சித்தமாக  எனக்கு  உங்கள் மகளை திருமணம் செய்ய கூறினீர்கள். இப்பொழுது தான் என் அப்புவே வந்துவிட்டாளே, பின்னர் நான் எதற்கு உங்கள் மகளை திருமணம் செய்ய வேண்டும்? என்றுக் கேட்டான். 
                   அதற்கு ஊர்மிளையோ சற்றும் யோசிக்காமல், என்னை எப்படி அந்த பிச்சைகாரியோடு ஒப்பிட்டு பேசுவாய் தீக்ஷித் என்று கேட்ட மறுகணமே அவள் தன் கண்ணத்தை பிடித்தவாறு கீழே இருந்தாள்.
               பின்னர்தான் தீக்ஷித் அவளை அடித்தது அவளுக்கு உரைத்தது.
                யாரை பற்றி என்ன கூறினாய்?  என்று தீக்ஷித் அவளை பார்த்து உறுமினான்.
                 அவளோ பயத்தில், நான் அபூர்வாவை கூறவில்லை, விஹானாவை தான் கூறினேன் என்று பயத்தில் உளற, அதற்கும் சேர்த்து தீக்ஷித்திடம் வாங்கிகொண்டாள்.
                    இங்கு நடந்த சம்பவத்தை பற்றி  எதையும் அறியாத மயக்கத்தில் இருந்து எழுந்த  விஹானா மாடியில் இருந்து ஊர்மிளையை தீக்ஷித் மூர்கத்தனமாய் அடிப்பதை மட்டும் பயம் கலந்த வெறுப்புடன்  பார்த்தாள்.
                     இனி என்ன நடக்கும்?  கண்டிப்பாக இனி நடக்கவிருப்பதை உங்களால் கணிக்கவேமுடியாது!!!!
                 உங்களுக்கு இந்த கதை பிடித்து இருந்தால் கீழே இருக்கும்       🌟 ஐ அழுத்துங்கள்.
                  விமர்சனங்கள் வரவேற்கப்படுகின்றன.

என் சுவாசத்தின் மறுஜென்மம் Where stories live. Discover now