1.என் சுவாசத்தின் மறுஜென்மம்

8.3K 99 10
                                    

ஜாம்ஷெட்ப்பூரில் மிகவும் வசதியான குடும்பம் நம் கதாநாயகனின் குடும்பம். அவர்களுக்கு பல தொழில்கள் இருந்தன. நம் கதாநாயகனின் தந்தை அமர்ப்ரீட் சிங் தான் ஜாம்ஷெட்ப்பூரின் தொழிலுலக சக்கரவர்த்தி ஆவார். அவரது மனைவி ஜான்வி சிங் மிகவும் பொறுமையானவர். அவர்களின் ஒரே புதல்வன் தான் நம் நாயகன் தீக்ஷித் சிங். தீக்ஷித் என்றால் 'ஆரம்பம் 'என்று அர்த்தம். அவர்களுடைய காதலின் ஆரம்பம் என்று அப்பெயரை வைத்தனர். அமர்க்கு ஒரே தங்கை அவருக்கும் திருமணம் ஆகி ஒரே வருடத்தில் கார் விபத்தில் இறந்துவிட்டார்.
பின்னர்தான் தெரிந்தது அது விபத்து அல்ல தன் மைத்துனனின் சதி என்று ஏனென்றால் அவருடைய தங்கையை ஜான்வியின் அண்ணன் ஜெயப்ரதாப் சிங் திருமணம் செய்ய ஆசை பட்டார். அவர் ஜான்வி அளவுக்கு நல்லவர் இல்லையென்பதாலும் அவர் திருமணம் செய்ய ஆசை பட்டதே தன் சொத்துக்களுக்காகவும் என்பதால் தன் தங்கையை வேறு ஒருவருக்கு மணமுடித்துகுடுத்தார். அந்த ஆத்திரத்தில், அவர்கள் கோவிலுக்கு சென்ற இடத்தில் காரை இடித்து விபத்துபோல் மாற்றினார். அவருக்கு எதிராக ஆதாரம் இல்லாத காரணத்தினால் அமரால் எதுவும் செய்ய இயலாமல் போயிற்று. பின்னர் ஜெயப்ரதாப்பும் தன்னை காதலித்த வேறு ஒரு பணக்கார பெண்ணை திருமணம் செய்துகொண்டார்.அந்த விபத்தில் உயிர்பிழைத்தது அமரின் தங்கையின் இரண்டு மாத பெண்குழந்தை தான். எல்லாரும் அபூர்வமாய் அக்குழந்தை அவ்விபத்தில் பிழைத்தது என்று பேசிக்கொண்டதால் அக்குழந்தைக்கு அபூர்வா சிங் என்று பெயர் சூட்டினார்.

தீக்ஷித்திற்கும் அபூர்வாவிற்கும் 1 வருடம் தான்  வித்தியாசம் . அபூர்வா தன்னுடைய தாய்மாமா வீட்டிலேயே வளர்ந்தாள். அவளை தன் மகனுக்கே கட்டிவைத்தால் தன் தமையன் செய்த பாவம் தன் தமையனை விட்டு விலகுமென்று நம்பினாள். என்ன இருந்தாலும் ரத்தபாசம் அல்லவா, அமரும் தன் தங்கையின் மகள் தன்னை விட்டு பிரிய மாட்டாள் என்று அவரும் ஆனந்தப்பட்டார். தீட்சித்தும் அபூர்வாவை விட்டு பிரியவேமாட்டான். அவள் சாப்பிடாமல் இவனும் சாப்பிடமாட்டான். அவள் தூங்கிய பிறகே இவனும் தூங்குவான்.
இப்படியே சென்றுகொண்டிருந்த நிலையில் ஜெயப்ரதாபின் தொழிலில் நஷ்டம் ஏற்பட்டு பெரும் பின்னடைவை சந்தித்தது. இந்நிலையில் மீண்டும் தங்கையின் உறவை நாடினான். ரத்தபாசத்தில் ஜான்வியும் தன் கணவரிடம் பேசி உதவினாள். காலம் காயத்தை ஆற்றும் அல்லவா. அவரும் தன் தங்கையின் இறப்பு தந்த காயத்தை மறந்து தன் மனைவிக்காக உதவினார். ஜெயப்ரதாபிற்கு ஒரு மகள் இருந்தாள். அவளும் அவள் அம்மாவை போலவே கெட்டவளாகவே வளர்ந்தாள். தாயை போல பிள்ளை என்று சும்மாவா சொன்னார்கள். அவளுடைய குடும்பம் ஒரு கணக்கு போட்டார்கள். தீக்ஷித்தை இவள் மணந்தால் மொத்த சொத்தும் இவர்கள் கையில் என்று கணக்கு போட்டார்கள். அதற்கு தடையாய் இருந்த அபூர்வாவை கொன்றுவிட முடிவு செய்து அந்த வீட்டில் ஒரு வேலையாளை சரிக்கட்டி அவளது உணவில் விஷத்தை கலந்தனர். விஷம் கலந்தது தெரியாமலிருக்க பல்லியை போட்டனர். எங்கே தீக்ஷித் இருந்தால் காரியம் கெட்டு விடுமோ என்று அஞ்சி அவனை அபூர்வா பிறந்தநாளுக்கு இன்பதிர்ச்சி கொடுத்து அவளை மகிழ்விக்க யோசனையை கொடுத்து வெளியே அனுப்பினர்.
தொழில் விஷயமாக ஏற்கெனவே வெளியூர் போயிருந்தனர் அமர் தம்பதியினர். அதுவும் இவர்களுக்கு சாதகமாகப்போயிற்று. இவர்கள் நினைத்தது போலவே அபூர்வா இறந்துவிட்டாள். வீட்டிலுள்ள அனைவரையும் அபூர்வா பல்லியால் செத்துவிட்டாள் என்று நம்பவைத்தனர்.பிணப்பரிசோதனை (autopsy) செய்ய நினைத்த அமரையும் பிள்ளையை துண்டுதுண்டாக போட்டு தருவார்கள் வேண்டாம் என்று கூறி அமைதிப்படுத்தி விட்டார். பின்னர் அபூர்வாவிற்கு இறுதிச்சடங்கை முடித்தனர். எல்லாம் முடிந்த கையோடு தீக்ஷித் வெளிநாடு சென்று விட்டான்.
அவனால் எதையும் மறக்கமுடியவில்லை. அவளில்லாத ஜாம்ஷெட்ப்புரை வெறுத்தான். பின்னர் அனைத்து தொழில்களையும் அமருடன் சேர்ந்து பிரதாப் பார்த்துக்கொண்டான். அனைத்தும் நம் மகள் மூலம் நமக்கு கிடைக்கும் என்ற நம்பிக்கையில் எந்த தவறும் செய்யாமலிருந்தான். மெதுமெதுவாக தன் மகள் இந்த வீட்டிற்கு மருமகள் ஆக போகிறாள் என்று அவர்களின் எண்ணத்தை அந்த வீட்டில் புகுத்திக்கொண்டிருந்தனர். அவர்களும் வெளியில் பெண்ணெடுப்பதைவிட பிரதாப்பின் மகள் ஊர்மிளா மருமகளாக வந்தாள் நன்றாக இருக்கும் என்று நினைத்தனர். ஆனால் அவள் மருமகளாக வந்தால் வீட்டின் நிம்மதியே குலைத்துவிடும் என்பதை யோசிக்கமறந்தனர்.
ஆனால் விதி வலியது ஆயிற்றே. விதி வேறுவிதமாய் யோசித்தது. அது என்னவென்பதை பின்னர் வரும் அத்தியாயங்களில் பார்க்கலாம். அபூர்வாவின் மறைவுக்கு பின் தன் பள்ளி படிப்பை முடித்த தீக்ஷித் வெளிநாட்டில் சென்று படிக்க ஆரம்பித்தான். ஏனெனில் அவன் அபூர்வாவை நிரந்தரமாக மறக்க முடியவில்லை.
அதனால் தற்காலிகமாக மறக்கடிக்க முயற்சித்தான். அதற்காக எப்பொழுதும் படித்துகொண்டேயிருந்தான். மற்ற நேரங்களில் பகுதிநேர(part-time) வேலையில் சேர்ந்தான். தூங்கும் நேரத்திலும் அபூர்வா கனவில் வந்து காட்சி தந்தாள். அங்கு அவனுக்கு நிறைய நண்பர்கள் உண்டு. அவர்களிடம் தான் இந்தியா சென்றதும் தொழில் தொடங்கி வேலை தருவதாக வாக்களித்தான். எதற்காக அவன் வெளிநாடு வந்தானோ அது மட்டும் நடக்கவில்லை. அப்பொழுது அவன் பெற்றோர் மனதளவிலும் உடலளவிலும் மிகவும் சோர்ந்தனர். அவர்கள் கூடவே இருந்தால் அவர்களாவது சந்தோசமாக இருப்பார்கள் என்றுக்கருதி அவர்களுடன் இருக்க புறப்பட்டான்.

என் சுவாசத்தின் மறுஜென்மம் Where stories live. Discover now