8. என் சுவாசத்தின் மறுஜென்மம்

2.4K 95 26
                                    

       இப்படியே காலையில் ஆபீஸ் இரவில் விஹானாவிற்கு டீயுசன் என்று சென்று கொண்டிருந்தது.எவ்வித சுவாரசியமும் இல்லையென்றாலும் அவனுக்கு இது பிடித்து இருந்தது. ஏனெனில் விஹானாவை பார்த்துக்கொண்டே இருந்தால் மட்டும் போதும் என்றிருந்தது  அவனுக்கு.
           ஒரு நாள் அவள் வழக்கம் போல் மிதிவண்டியில் சென்றுகொண்டிருந்தபோது எதிரே வந்த பைக் மோதி கீழே விழுந்தாள். அதனை பார்த்த தீக்ஷித் உடனே தான் மறைந்திருந்து அவளை கவனிப்பதை மறந்தவன் ஓடிச்சென்று அவளை பார்த்தான்.
             அவள் கீழே விழுந்ததில் கையிலும் காலிலும் சிராய்ப்பு ஏற்பட்டு ரத்தம் வந்தது. உடனே அவளை எழுப்பி தன் காருக்கு அழைத்துக்கொண்டு போனான்.
               கூடவே வந்த அஞ்சலியும் செய்வதறியாது திகைத்தாள்.ஏனெனில் அவளுக்கு தீக்ஷித்தை எங்கோ பார்த்தபடி இருந்தது. ஆனால் அவளுக்கு நினைவுக்கு வரவில்லை அவன் அவளது பள்ளியின் ஆண்டு விழாவிற்கு சிறப்புவிருந்தினராக  வந்தவன் என்று, ஏனென்றால் அவள் அன்று கல்ச்சுரல் செகிரேட்டரியாக இருந்ததால் விழா நல்லபடியாக நடக்கவேண்டுமென்ற கவலையில் அவனை கவனித்தும் அதற்கு முக்கியத்துவம் தராமல் விட்டுவிட்டாள்.
             ஆனால் இப்பொழுது யாரோ ஒருவன் விஹானாவை கைப்பற்றி இழுத்து செல்கிறானே என்ற கவலையில் விஹானாவின் பின்னால் ஓடினாள்.
                காரருகே வந்ததும் பஸ்டு எயிட் பாக்ஸ் ஐ  திறந்தவன் அதிலிருந்த திரவியத்தை பஞ்சால் ஒத்தியெடுத்து அவளின் சிராய்ப்பு கையில் வைத்தான். வைத்தவுடன் வலி தாங்காமல் ஸ்ஸ்ஸ்ஸ்  என்று கையை இழுத்தாள். அவளின் கையை இழுத்துவைத்து மருந்து வைத்தால் தான் சரியாகும் என்று கூறிவிட்டு அவளின் முகத்தை பார்த்தான். கலங்கிய கண்கள் வழியில் சுருங்கி துடித்த  உதடுகள் என்று அழகாய் இருந்தாள்.
               காலில் பெரிதாக காயம் இல்லை என்று அவள் கூறியதால் விட்டுவிட்டான். பின்னர் அவளை பார்த்து, பார்த்து வரமாட்டாயா?  அப்பு என்றான். 
                அவன் அவளை பார்த்த நாளிலேயே அவள் அப்பு என்று அவன் கூப்பிட்டதற்கு ஏன் அப்படி கூப்பிடுகிறீர்கள் என்று கேட்டாள். அதற்கு அவன் என் கசினின் பெயர் அபூர்வா என்று கூறி அவள் இறந்துவிட்டாள். உன்னை பார்த்தால் அவளை போல இருக்கிறது என்று கூறினான். அதனை கேட்ட அவளும் அதனை பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை. ஆனால் அவன் அப்பு! என்று கூப்பிடுவதை பார்த்த அஞ்சலி,  ஏன்?  அவன்  அவ்வாறு விஹானாவை அப்படி  கூப்பிடுகிறான்?  என்று யோசித்தாள்.
                அவளுக்கு அவனை மிகவும் பிடித்து இருந்தது. அவன் விஹானாவை அப்பு என்று செல்லமாக கூப்பிட்டது அவளுக்கு பிடிக்காமல் போனது. அதனை அவள் கவனிக்கவும் இல்லை.
                  அவனைப்  பற்றி விஹானாவிடம் கேட்டாள். அவள்,  நான் தான் உனக்கு ஏற்கெனெவே சொன்னேனே,  இவர்தான் எனக்கு பாடம் சொல்லிக்கொடுக்கிறார் என்று கூறினாள்.
                அதனை கேட்ட அஞ்சலி,  விஹானா அன்றே கூறினாள் எனக்கு ஒருவர் டீயுசன் எடுக்கிறார் நீயும் என்னுடன் படிக்க வருகிறாயா என்று கேட்டாள். நான்தான் சுத்த போர் என்று வரவில்லை கூறினாள். அன்றே ஒரு தடவை நேரில் சென்று பார்த்திருக்கலாம் என்று நினைத்தாள்.
                  அப்பொழுது தான் அவனின் காரை பார்த்தவள் அதிசயித்து போய் நின்றாள்.
               சரி அப்பு உன்னை நானே உனது பள்ளியில் இறக்கி விடுகிறேன் என்று கூறினான். உடனே விஹானா நான் நன்றாக இருக்கிறேன் அஞ்சலியுடன் போய் கொள்கிறேன் என்று கூறினாள். உடனே அவன் அஞ்சலியையும் நாமே கூட்டிசெல்லலாம் உங்களுடைய சைக்கிளை நான் உங்கள் வீட்டில் விட சொல்லிவிடுகிறேன்  என்று கூறினான்.
                   அதற்கு தயங்கிய விஹானாவை நமக்கு ஏற்கெனெவே நேரம் ஆகிவிட்டது என்று கூறி சம்மதிக்க வைத்தாள். அவன் இருவரையும் காரில் ஏற சொன்னதும் அஞ்சலி ஏதோ உரிமை உள்ளதுபோல முன்னாள் ஏறினாள். அதனை கண்டுகொள்ளாத விஹானா பின்னால் அமர்ந்தாள். இதனை கண்ட தீக்ஷித்திற்கு முதலில் கோவம் வந்தது பின்னர் ஏதோ சின்னப்பெண் முன்னாலுள்ள சீட்டிற்கு  ஆசைப்படுகிறாள் என்று சாதாரணமாய்  நினைத்து அப்படியே விட்டான். விஹானாவை பின்னால் உட்கார வைத்து அஞ்சலியை பக்கத்தில் அமரவைத்து வண்டியை ஓட்டுவதில் அவனுக்கு விருப்பமில்லை. ஆதலால் அவனை பின்தொடர்ந்த அவனின் பாடிகார்டை அழைத்து வண்டியை எடுக்க சொல்லிவிட்டு பின்னால் அமரபோனான். 
                 அதனை பார்த்த அஞ்சலி நீங்கள் பின்னாடி சென்றால் வண்டியை யார் எடுப்பது? என்று கேட்டாள். அதற்கு அவன் வண்டியை டிரைவர் ஓட்டுவார் என்று கூறினான். நீங்கள் டிரைவரெல்லாம் வைத்திருக்கிறீர்களா? என்று அஞ்சலி கேட்டாள்.
                இல்லை இது ஆபீஸ் கார் டிரைவர் எங்கள் ஆபீஸ் டிரைவர் என்று வாயில் வந்த பொய்யை கட்டவிழ்த்துவிட்டான்.
                 ஏனெனில் விஹானா அவனை கவனித்துக்கொண்டிருந்தாள். அவளுக்கு இப்போதைக்கு எதுவும் தெரியவேண்டாம் என்று நினைத்தான்.
                பிறகு வண்டி புறப்பட்டதும் அஞ்சலி, ச்சே  பின்னாடியே உக்கார்ந்திருக்கலாம். எதற்கோ ஆசைப்பட்டு இப்படி டிரைவர் பக்கத்தில் உக்கார்ந்து வரவேண்டியதாயிருக்கிறதே என்று மனதிற்குள்ளே குமைந்தாள்.
                பின்னாடியே அடிபட்டதால் பள்ளி வரும்வரை  சற்று ஓய்வெடுக்கலாம் என்று நினைத்து கண்ணை மூடியவள் அப்படியே உறங்கிப்போனாள். அவளை அப்படியே தன் மேலே சாய்த்துக்கொண்டான்.
          பள்ளிவந்ததும் அவர்களை விட்டுவிட்டு மாலை அவர்களை அழைத்து செல்ல வருவதாக கூறிவிட்டு ஆபீஸ் வந்தான். ஆபீஸ் வந்தவன் வேகவேகமாக சட்டையை கழட்டினான். அதனை முகர்ந்து பார்த்து அவளின் வாசம் பிடித்தான். திரும்ப போட்டால் அவளின் வாசனை போய்டுவிடுமென்று வேறு சட்டையை அணிந்துவிட்டு அதனை அப்படியே மடித்துவைத்து பத்திரப்படுத்தினான்.
              இங்கே பள்ளியில் அவனின் நினைவாக இருந்த அஞ்சலி அப்பொழுதுதான் அவனின் பெயர் என்னவென்று விஹானாவிடம் கேட்டாள். அவள் அவனின் பெயரை கூறிய பிறகு உனக்கு அவரை எப்படி தெரியும் அவருக்கும் உனக்கும் என்ன உறவு என்று அனைத்தையும் விசாரித்தாள்.
           அதற்கு விஹானாவோ அவரின் பெயர் தீக்ஷித் எனது அப்பாவின் நண்பருடைய மகன் அவ்ளவுதான் தெரியும் என்று கூறினாள்.
              பின்னர் அஞ்சலி விஹானாவும் பள்ளி முடிந்ததும் அவனின் வருகைக்காக காத்திருந்தனர். ஆனால் அங்கு வந்ததோ அவனின் டிரைவர் அவன் வேறு வேலையாய் சென்றிருப்பதை  கூறினான்.இருவரும் அவரவர் வீட்டிற்கு சென்றனர்.
                 இங்கு தீக்ஷித்திற்கு சரியான வேலை அவனும் விஹானாவை கூட்டிசெல்ல வேண்டுமென்று சீக்கிரமே முடிக்க நினைத்தான்  ஆனால் முடியவில்லை. லேட்டாக வந்ததும் ட்ராபிக்கில் சிக்கிக்கொண்டான். எவ்வளவு நேரம் ஆனாலும் தானே சென்று விஹானாவை கூட்டிச்செல்ல வேண்டும் என்று நினைத்தவன் அவளுக்கு காலையில் அடிபட்டதை நினைத்தவன் அவள் காத்திருந்தாள் அவளுக்கு சிரமம் என்று நினைத்து  காலையில் வண்டி ஓட்டிய பாடிகார்டை அழைத்தவன் அவனையே விஹானாவை கூட்டிச்செல்ல சொன்னான்.
                வீட்டிற்கு வந்த அஞ்சலி அவனை பேஸ்புக்கில் தேடினாள். தேடிய பின்தான் அவனை பற்றி தெரிந்தது. உடனே அவள் மனம் அவன்தான் உன் கண்ணாளன் என்று கூறியது. எதற்காகவோ அவன் விஹானாவிடம் பொய்யுரைத்தான் என்று நினைத்தவள் அவளிடம் இப்போதைக்கு சொல்லாமல் இருப்பதே நன்று என்று நினைத்து அவனை பற்றிய உண்மைகளை அவளிடம் இருந்து மறைத்துவிட்டாள். எங்கே உண்மையை கூறினால் விஹானா அவன் புறம் சாய்ந்துவிட்டால் என்ன செய்வது என்று நினைத்து தான் செய்வதர்க்கு ஞாயம் கற்பித்தாள்.
               அஞ்சலி விஹானாவின் வாழ்க்கையில் தடையாய் இருப்பாளா? இல்லை தடையை தகர்த்துஎறிய உதவி புரிவாளா?  பொறுத்திருந்து பார்ப்போம்.

என் சுவாசத்தின் மறுஜென்மம் Where stories live. Discover now