7.என் சுவாசத்தின் மறுஜென்மம்

2K 95 13
                                    

                 தீக்ஷித் அந்த பையன் அஞ்சலியின் தம்பி என்று தெரிந்தபிறகே நிம்மதியானான். பின்னர் தான் தன்னவளை சந்திக்கப்போகும் நாளுக்காக காத்திருந்தான். என்ன பேசவேண்டும்? எவ்வாறு பேசவேண்டும்? எவ்வாறு அவளை சம்மதிக்கவைக்கவேண்டும்? என்ன சொன்னால் அவள் புரிந்துகொள்வாள்?  என்று அந்த நாளுக்காக மிகவும் காத்திருந்தான்.
                அந்த நாளும் வந்தது. இவன் காலையிலே எழுந்து குளித்து வார்டரோபை ஆராய்ந்து முதலில் பிளேசரை எடுத்தவன் பின்னர் தலையை உதறிவிட்டு  ஒரு  சிவப்பு நிற டீ-சர்ட்டும் கருப்பு ஜீன்சையும் அணிந்துகொண்டு   (dolce and gabbana) perfume ஐ கையில் எடுத்து அது தீரும்வரை அடித்தான். ஏதோ புதிதாக வாசனை திரவியத்தை பயன்படுத்துபவன் போல. பின்னர் jack black wax pomade ஐ தலையில் தடவி முடியை மேல்நோக்கி சீவினான். எல்லாம் முடிந்ததும் கண்ணாடியில் பலமுறை தன்னை சரிபார்த்துக்கொண்டான்.
            பின்னர் அவன் தன் காரை சென்றடைந்தவன் காரோட்டியை பார்த்து தானே ஒட்டிக்கொள்வதாய் கூறி சாவியை வாங்கி வண்டியை எடுத்தான். முதலில் காரோட்டி ஓட்டுவதாக தான் இருந்தது. பின்னர் அவன் விஹானாவை வெளியில் அழைத்துச்செல்லலாம் என்ற நினைவில் தானே வண்டியை எடுத்தான்.
             அங்கே விஹானாவின் வீட்டிலோ அவளை எழுப்பலாமா?  வேண்டாமா? என்று யோசித்து கொண்டிருந்தனர்,  அவளின் பெற்றோர். ஏனெனில் அவளை எழுப்பி என்ன காரணத்தை கூறுவது என்றுதான் யோசனை. பின்னர் தீக்ஷித் வந்ததும் எழுப்பிக்கொள்ளலாம் என்று வந்துவிட்டனர். அவர்களின் மனதிலோ அவனுக்கு அவசர வேலை வந்து வராமல் போனால் விஹானாவிடம் என்ன கூறுவது என்று நினைத்தனர். அவன் வராமல் போனால் நன்றாக இருக்கும் என்றுக் கூட யோசித்தனர். 
             அவர்களின் யோசனைக்கு ஆயுசு மிகவும் கம்மி வெளியே அவன் காலிங் பெல்லை அழுத்திக்கொண்டிருந்தான்.
              விஹானாவின் தாய் போய் கதவை திறந்தார். விஹானா வந்து கதவை திறப்பாள் என்று நினைத்தவனுக்கு ஏமாற்றமே மிஞ்சியது.
                 வீட்டிற்குள் வந்தவன் விஹானா எங்கே என்ன கேட்டான். அதற்கு அவளின் தந்தையோ நேற்று இரவு முழுவதும் பரீட்சையை ஒழுங்காக எழுதவில்லை என்று வருத்தப்பட்டுக்கொண்டிருந்தாள். அதனால் அவள் தூங்க நேரமாயிற்று என்று கூறினார்.
                  அவனோ இப்பொழுது அவளை எழுப்புங்கள் என்று கூறினான். அவர்கள் தயங்கவும், நானே அவளை எழுப்பி நான் யார் என்பது பற்றி அனைத்தையும் கூறிவிடுகிறேன் என்றான்.
               இல்லை,  நான் சென்று எழுப்பி கூட்டி வருகிறேன் என்று கூறிவிட்டு விஹானாவை எழுப்ப அவளின் தாயார் விஹானாவின் அறையினுள்ளே நுழைந்தார்.
               அவளை எழுப்பி பல்துலக்கி விட்டு ஹாலுக்கு வருமாறு கூறிவிட்டு சென்றார். அடுத்த ஐந்து நிமிடத்தில் விஹானா ஹாலிற்கு வந்தாள். அங்கே அவளை ஆ வென்று பார்த்துக்கொண்டிருந்தான் தீக்ஷித்.
                அவள் முழு நீள ஸ்க்ர்ட்டும் வெள்ளை டாப்சும் அணிந்திருந்தாள்.நேற்று பின்னிருந்த  இரட்டை ஜடை கலைந்துஇருந்தது. முகத்தில் எவ்வித அலங்காரமும் இன்றி அன்லர்ந்த மலர் போல இருந்தாள். அவள் அம்மா அழைத்ததால் பல் துலக்கி முகம்கழுவி காபி குடிக்க அழைக்கிறார் என்று நினைத்து அப்படியே வந்து நின்றாள்.
                அப்படியே வந்து நின்றவளை தான் அவன் ஆ வென்று பார்த்துக்கொண்டிருந்தான். அவன் அப்படி பார்ப்பதை கவனியாதவள் புதிதாக வந்திருப்பவனை பார்த்து சற்று பயந்து காபி கொண்டுவந்த அவளின் அம்மாவின் கையை பிடித்துக்கொண்டு அவளின் அம்மாவுடன் ஒண்டிநின்றாள்.
              பின்னர் தன்னை அவள் என் புதிதாய் பார்ப்பது போல் பார்க்கிறாள் என்று யோசித்தான். பின்னர்தான் அவள் முதல்தடவை ஸ்டேஜில் பயத்தில் ஒழுங்காக பார்க்கவில்லை என்பது உரைத்தது.பின்னர் சைக்கிள் செயினை எடுத்துக்கொடுத்தபோதும் அவள் ஒழுங்காக பார்க்கவில்லை என்பதையும் நினைவுகூர்ந்தான்.
            பின்னர் விஹானாவின் தந்தையிடம் தன்னை அறிமுகப்படுத்துமாறு சைகையில் கூறினான். அவரும் விஹானாவை பார்த்து, இங்கே வந்து சோபாவில் உட்கார் கண்ணா! என்று கூறினார். அவள் அமர்ந்ததும் இவர் நமக்கு வேண்டியவர் கண்ணா! என் நண்பரின் மகன்,  பெயர் தீக்ஷித் என்று திக்கித்திக்கி கூறி இடைவெளிவிட்டு மேற்கொண்டு என்ன சொல்வது என்று   யோசித்தார்.அந்த இடைவெளியில் உடனே அவன் இனிமேல் உனக்கு நான்தான் டியுசன் எடுக்க போகிறேன் என்று கூறினான்.
           இதனை கேட்ட விஹானா மற்றுமல்ல அவளின் பெற்றோரும் திகைத்தனர். ஏனெனில் இதை பற்றி அவன் அவர்களிடம் அதுவரை சொன்னதில்லை.  அப்பொழுது தான் அவனே யோசித்தான் இவள் நம்முடனே இருந்தாள் மட்டுமே நம்முடன் நெருக்கமாவாள் என்று நினைத்து அவ்வாறு சொன்னான்.
                ஆனால் அதற்கு அவள் டியுசனிற்கு இப்பொழுது என்னாப்பா அவசியம் என்றுக்கேட்டாள். அவளின் தந்தை என்ன பதில் கூறுவது என்று நினைத்து அமைதியாய் யோசிக்க உடனே இவன் நீ நேற்றுதான் பரீட்சை ஒழுங்காக எழுதவில்லை என்று புலம்பினாயாமே அது மட்டுமல்லாமல் உன்னை வெளியில் அனுப்பினால் பயந்துவிடுவாய் என்று தான் என்னை அழைத்தார்கள் என்று வாய்க்கு வந்த பொய்யை கூறினான்.
              ஆனால் அவள் என்னவோ அவனுடன் பயந்துபயந்து பேசினாள். பின்னர் அவர்கள் வீட்டிலேயே காலை உணவை முடித்தவன் அவளை வெளியே அழைத்து செல்ல எடுத்திருந்த முடிவை கைவிட்டான். அவளே பயந்துபயந்து பேசுகிறாள். தனியே அழைத்தால் வரமாட்டாள் என்று அந்த முடிவை கைவிட்டான்.
           இவர்களுடன் பேசிக்கொண்டிருக்கும்போதே அவளுக்கு கொட்டாவியாக விட்டு கண்களை தேய்த்தபடியே அமர்ந்திருந்தாள். அவனுக்கு அவளை பார்க்க பாவமாக இருந்ததால், உனக்கு களைப்பாக இருக்கும் போய் தூங்கு என்று சொன்னான். அவளும் வீட்டிற்கு விருந்தினர் வந்திருக்கும் பொழுது தூங்கசென்றால் நன்றாக இருக்காது என்று நினைத்து தன் சொன்னால் போகலாம் என்று நினைத்து அமர்ந்திருந்தாள். பின்னர் அவனும் கிளம்பிவிட்டான்.
              வீட்டிற்கு வந்தவன் அவளை பற்றியே நினைத்துக்கொண்டிருந்தான். எப்படியோ அவளை தினமும் சந்திக்க வாய்ப்பு கிடைத்துவிட்டது என்று நினைத்து சந்தோசப்பட்டுக்கொண்டான்.
         இவனும் அவளை தினமும் சந்திக்க வேண்டுமென்றால் எல்லா வேலையையும் அவளுக்கு டீயுசன் எடுக்குமுன் முடிவிடவேண்டும் என்று நினைத்தான். அதற்காக அவன் பாரின் போக வேண்டி இருந்ததால் உடனே கிளம்பினான். ஏனெனில் காரணமில்லாமல் அவளை சந்திக்கமுடியாதே அதனால் அவனும் பாரினுக்கு சென்றான். அங்கு எவ்வளவு சீக்கிரம் வேலையை முடிக்கமுடியுமோ அவ்வளவு சீக்கிரம் முடித்துவிட்டு அவளுக்கு நிறைய துணிமணி நகைகள் என்று நிறைய வாங்கினான். அனைத்தையும் வாங்கினான் ஒழிய எப்படி கொடுப்பதென அவனுக்கு தெரியவில்லை. அவனும் ஊருக்கு திரும்பியபோது விஹானாவும் விடுமுறை முடிந்து பள்ளிக்கு செல்ல ஆரம்பித்தாள்.
               அவளும் தனக்கு டீயுசன் எடுக்க ஒருவன் வரப்போவதையே மறந்துவிட்டிருந்தாள். வழக்கம் போல் அவளும் அஞ்சலியும் வீட்டிற்கு வந்துகொண்டிருந்தனர்.அஞ்சலி அவள் வீட்டிற்கு சென்றதும் விஹானா தன்னுடைய வீட்டிற்கு வந்தாள். வந்தவள் களைப்பாக இருக்கிறதென்று உறங்கிவிட்டாள். பின்னர் ஏழரை மணிவாக்கில் அவளின் அம்மா அவளை எழுப்பி தீக்ஷித் அவளுக்கு பாடம் சொல்லிகொடுக்க வந்திருப்பதாக சொன்னார். பின்னர்தான் அவளுக்கு உரைத்தது.சிறிது நேரத்திலேயே ரெடியாகி வந்தாள். இன்று அவள்        டீ-ஷர்ட்டும் பாட்டியாலா பேண்டும் அணிந்துருந்தாள். அவன் ஆஃபிஸில் இருந்துவந்ததால் ப்ளாஸ்ர்ரையும் டையையும்  காரிலேயே கழட்டிவைத்துவிட்டு cuffling பட்டனை கழட்டி ஸர்ட்டை மடக்கிவிட்டு கழுத்து பட்டனை கழட்டி இறக்கிவிட்டு வந்தான்.
            பின்னர் அவளை பார்க்காமல் அவளுக்கு சொல்லிகுடுக்க ஆரம்பித்தான். அவளை பார்த்தால்தான் அவனுக்கு சர்வமும் மறந்துவிடுகிறதே. பின்னர் நேரம்போவதே அவனுக்கு தெரியவில்லை கணக்கு சொல்லிக்கொடுத்து அவளை போடச்சொல்லிவிட்டு புக்கை பார்த்துக்கொண்டிருந்தவன்.அமைதியாக இருக்கவும் அவள் என்ன செய்கிறாள் என்று பார்த்தான் அப்பொழுதுதான் அவள் வாயை திறந்து வைத்தபடி கையில் பென்சிலை வைத்துக்கொண்டு நோட்டில் தலை வைத்து படுத்து தூங்கிக்கொண்டிருந்தாள். பார்த்தவுடன் அவனுக்கு அவளை அப்படியே முத்தமிட வேண்டும்போல் இருந்தது.அவனின் உணர்வுகளை அடக்கிக்கொண்டு அவளை எழுப்பி நாளை மிச்ச பாடத்தை பார்த்துக்கொள்ளலாம் என்று தூங்க போகச்சொன்னான். அவளும் அரைகுறை தூக்கத்தில் தலையை ஆட்டிவிட்டு தள்ளாடியபடியே சென்றாள். அவளை பார்த்துவிட்டு தன் வீட்டிற்கு வந்தவன் முகத்தை கூட கழுவாமல் அப்படியே பெட்டில் சரிந்து களைப்பிலும் அவளின் நினைவிலும் தூங்கஆரம்பித்தான்.

என் சுவாசத்தின் மறுஜென்மம் Where stories live. Discover now