20.என் சுவாசத்தின் மறுஜென்மம்

527 6 2
                                    

                இவ்வாறு தீக்ஷித்தும் alessandro வும் தங்கள் அடுத்து என்ன என்ன செய்ய வேண்டும் என்பதை பற்றி விவாதித்துக் கொண்டிருந்தனர்.அப்பொழுது

                 ப்ரோ, எனக்கு இன்னொரு டவுட் கூட இருக்கு.  நம்ம டாக்டர் அங்கே  போய் சேர்வதற்குள் விவான் அவனின் எல்லையை  மீறி  விஹானாவிடம் ஏதேனும் தவறாக நடந்து இருந்தால்,  அதைப் பற்றி நாம் யோசிக்கவே இல்லையே அண்ணா! இவ்வளவு செய்தவன் அதைப்பற்றி யோசிக்காமலா இருந்திருப்பேன்? அந்த ஹோட்டலில் ஒரு ஆளைப் பிடித்து அவனிடம் பணத்தையும் அவளுக்கு நான் வாங்கிய உடையையும் கொடுத்து என்ன செய்ய வேண்டும் என்று இன்ஸ்ட்ரக்சன் கொடுத்துவிட்டே வந்தேன். ஆதலால் நமக்கு பாதகமாக அங்கு ஒன்றும் நடந்திருக்காது.

            நீ அதைப் பற்றி யோசிக்காமல், அடுத்து என்ன செய்யலாம் என்று யோசித்து ஏதாவது ஐடியா இருந்தால் கொடு என்று கூறிவிட்டு தன் யோசனையை தொடர்ந்தான்.

             அதேநேரம் இன்று ஹோட்டலில் விவான் இரவு முழுவதும் கண்விழித்து இருந்ததால் மிகவும் அசந்து உறங்கிக் கொண்டிருந்தான்.விஹானா முதலில் கண்களை சற்று லேசாக திறந்து பார்க்க, அதிக வெளிச்சத்தினால் கண்கள் கூச சற்று மூடி ஆசுவாசப்படுத்தி கொண்டு மறுபடியும் கண்களை திறந்தாள். ஒரு நிமிடம் அவளுக்கு என்ன நடந்தது என்று நினைவில் இல்லை, பின்னர் சுற்றும் முற்றும் பார்த்தால் பக்கத்தில் டாக்டர் உறங்கிக் கொண்டிருந்தார். அவளுக்கு அவரை யாரென்றே தெரியவில்லை இவர் யார் என்று யோசித்துக் கொண்டே இருக்கும் பொழுது டாக்டர் கண் விழித்தார்.
   
                 பின்னர் டாக்டர் அவளுக்கு  காய்ச்சல் இருக்கிறதா என்று பரிசோதித்தார். பின்னர் அவளை பார்த்து உனக்கு இரவு முழுவதும் பயங்கரக் காய்ச்சல் அடித்தது என்றுக் கூறினார். இவர்கள் பேசிக்கொண்டிருக்கும் சத்தம் கேட்டு உள்ளே அறையில் தூங்கிக் கொண்டிருந்த எழுந்து வந்தான்.

                 டாக்டரிடம் விஹானாவிற்கு காய்ச்சல் சரியாகி விட்டதா? என்று கேட்டான்.
அவளுக்கு தற்போது ஒன்றும் இல்லை என்று டாக்டர் கூறியதும் தான் நிம்மதி அடைந்தான்.

என் சுவாசத்தின் மறுஜென்மம் Where stories live. Discover now