18.என் சுவாசத்தின் மறுஜென்மம்

761 27 9
                                    

           அங்கு கொலைவெறியுடன் நின்றுகொண்டிருந்தது தீக்ஷிதோ விவானோ அல்ல அங்கு நின்றுகொண்டிருந்தது Alessandro.
   
              அவனை பார்த்து முதலில் அதிர்ச்சியான விஹானா பின்னர் நிலைமையை உணர்ந்து அவனை அமைதிப்படுத்தப் பார்த்தாள்.

             ஆனால் அலெசான்ட்ராவோ அவனை வெறிகொண்டு தாக்கிக்கொண்டிருந்தான். அவனை கட்டுப்படுத்த வழிதெரியாமல் அவனை பின்னால் இருந்து கட்டிப்பிடித்து அவ்விடத்தை விட்டு  இழுத்து சென்றாள்.

              அதனை alessandro அந்த கோச்சை அடித்தது  விஸ்காம் டிபார்ட்மென்ட் ஸ்டுடென்ட்டின்  வீடியோ கேமரா வில் எதேச்சையாக பதிவாக, அதனை கவனித்த அவந்திகா அவளிடம் பேசி அதன் மெமரி கார்டை வாங்கிக் கொண்டாள்.

            இங்கு அதற்குள் விஷயம் vice-chancellor க்கு சென்று விட அவரை காண இருவருக்கும் அழைப்பு விடுக்க பட்டது.  விஹானா வழக்கம் போல் பயம்கொள்ள  Alessandro அவளை தேற்றி அவரை காண அழைத்துச்சென்றான். அங்கு அவனை யாருக்கும் அடையாளம் தெரியவில்லை. ஆதலால் அவன் அங்கு தான் விவானின் நண்பன் என்று கூறி இவர்கள் பிசினஸ் லஞ்ச்சின் போது எடுத்துக்கொண்ட புகைப்படத்தை காட்டினான். அதனை காட்டி அங்கிருந்த அனைவரையும் தன் கட்டுக்குள் கொண்டுவந்து  அவன் சுலபமாக விஹானாவை காப்பாற்றி பல்கலைக்கழகத்தின் அலட்சியத்தை எடுத்து காட்டி அவர்களை மிரள வைத்தான். அவர்கள் மேல் தவறு இருப்பதால் இவன் சொல்வதையெல்லாம் கண்களை மூடிக்கொண்டு கேட்டனர்.

         கொஞ்சம் சூழ்நிலை அமைதியாகியவுடன் அவளை காண்டீனிற்கு அழைத்து சென்றான். அங்கு அவளிடம் சாப்பிட என்ன வேண்டும் என்று கேட்க அவலும்  ஐஸ்கிரீம் கேட்க, அங்கோ ஐஸ்கிரீம் தீர்ந்துவிட்டிருந்தது.

           அதனை கேட்டவுடன் விஹானாவின் முகம் சிறிது சுருங்கியது பின்னர் முகத்தை சீர்படுத்திவிட்டு வேறு  எதாவது சாப்பிடலாமா என்று யோசிக்க தொடங்க வேறு எதுவும் தோன்றாதலால், எனக்கு எதுவும் வேண்டாம் என்று கூறிவிட்டு அவனை பார்த்தாள்.

என் சுவாசத்தின் மறுஜென்மம் Where stories live. Discover now