2.என் சுவாசத்தின் மறுஜென்மம்

3.5K 86 18
                                    

ஜாம்ஷெட்பூர் வந்த பிறகே அவனுக்கு தெரிந்தது அவன் பெற்றோரின் நிலைமைக்கு பாதி அபூர்வாவின் இறப்பென்றால் மீதி பிரதாப்பின் குடும்பத்தாரே அபூர்வாவின் கடைசிஆசை அது இது என்று அவர்கள் தீக்ஷித்தின் திருமணத்தை ஊர்மிளாவுடன் நடத்த வேண்டும் என்று அவர்களின் மனதை கலைத்து தீக்ஷித்துடன் பேச வைத்தனர்.
அதற்கு தீக்ஷித் சம்மதிக்கவில்லை. எப்படியும் சம்மதிக்க மாட்டான் என்று பிரதாப் வீட்டினர் நினைத்ததால் அவர்களின் அடுத்த அஸ்திரத்தை கையில் எடுத்தனர். அதாவது அவனின் பெற்றோரை வைத்து அவனிடம் சம்மதம் பெறுவது, அதற்காக அவனின் பெற்றோரிடம் அவன் அபூர்வாவை நினைத்தே அவன் வாழ்வை அவன் வாழமாட்டான் அதற்காக அவனை அப்படியே விடக்கூடாது என்றும் வெளியில் ஒரு பெண்ணை பார்த்து திருமணம் செய்வதைவிட தன் பெண்ணை திருமணம் செய்தால் அவனை புரிந்து அவனை அனுசரித்து அவன் வாழ்வை மாற்றியமைப்பாள் என்றும் கூறி அவர்களை பேசியே கரைத்தனர். அதை நினைத்து தன் மகனின் வாழ்வை நினைத்து மிகவும் வருத்தப்பட்டே அவர்களுக்கு இந்நிலை வந்துள்ளது என்பதை புரிந்துகொண்டான்.
அவன் சிறிதுநாட்கள் அவர்கள் போக்கிலேயே விட்டுப்பிடிக்கலாம் என்று எண்ணி தான் ஊர்மிளாவை திருமணம் செய்து கொள்வதாகவும் அதற்கு சிறிது காலாவகாசம் வேண்டும் எனவும் கூறி சமாதானம் செய்து விட்டு என்ன செய்யலாம் என்று யோசித்தான். பின்னர் சிறிது காலம் விலகியிருந்து பிரதாப்பின் முகத்திரையை கிழித்தெறிய முடிவுசெய்தான். அதை செயல்படுத்த அவனது தொழில்கள் அனைத்தையும் பிரதாப்பையே நிர்வாகம் செய்ய சொன்னான். ஏனெனில் அப்பொழுதுதான் பிரதாப் ஏதேனும் தவறு செய்தால் பிடிக்க வசதிப்படும் என்று எண்ணினான்.
அதனை மிகவும் மகிழ்ச்சியுடன் ஏற்றுக்கொண்ட பிரதாப் தீக்ஷித்தை பார்த்து நீ என்ன செய்ய போகிறாய் என்று கேட்டான். அதற்கு தீக்ஷித், நான் எனது நண்பனின் கம்பெனியில் பார்ட்னராக சேர போகிறேன் என்று கூறினான். அதனை கேட்ட பிரதாப் நீ அவனை போல ஒரு கம்பெனியை வாங்கி எம். டி ஆகலாமே என்று கேட்டார். அதற்கு தீக்ஷித் எல்லாமே ஒரு அனுபவத்திற்காக என்று கூறினான். அவன் காரணம் அனைவருக்கும் ஞாயமாக பட எல்லாரும் சம்மதித்தனர்.
அவன் நாளையே சென்னை செல்வதாக கூறினான். அது அவனது பெற்றோர் முதற்கொண்டு அனைவருக்கும் வேதனையை அளித்தாலும் அவன் திருமணத்திற்கு ஒப்புக்கொண்டது சற்று ஆறுதல் அளித்தது.

இங்கே திருச்சி பக்கத்தில் ஒரு கிராமம் அங்கே தான் நம் கதாநாயகியின் மறுபிறப்பே அரங்கேறியிருக்கிறது. அக்கிராமத்தில் சுமாரான வீட்டில் அதாவது நடுத்தர குடும்பத்தில் பிறந்திருக்கிறாள்.அவளுக்கு விஹானா என்று பெயர்சூட்டினர். ஏனெனில் அவள் பிறப்பதற்கு முன் அவர்கள் குடும்பத்தில் மிகவும் பிரச்சனை. விஹானாவின் பெற்றோர் காதல் கல்யாணம் செய்துகொண்டவர்கள். அதனால் இரு குடும்பத்தினரிடையே பேச்சு வார்த்தையே இல்லாமல் இருந்தது. பின்னர் விஹானா பிறந்தவுடன் கொஞ்சம் ஓட்டுதல் ஏற்பட்டது. எல்லாம் இனி புதிதாய் இருக்கட்டும் என்று அவர்களின் மகளுக்கு விஹானா என்று பெயர் வைத்தனர்.
கதாநாயகியின் பெற்றோரின் பெயரை கூறமறந்துவிட்டேன். அவளது தந்தையின் பெயர் மூர்த்தி. அவளின் தாயார் பெயர் விஜயா. விஹானா அவர்கள் ஊரில் அருகிலுள்ள தனியார் பள்ளியில் 10ம் வகுப்பு படிக்கிறாள்.

தினமும் சைக்கிளில் சென்றுகொண்டிருந்தாள். அவளை பற்றி கூறவேண்டுமென்றால் கருநிற நீண்ட கூந்தல். மைதீட்டப்பட்ட மருண்ட மான்விழிகள் ஒல்லியான உடல்வாகு.மஞ்சள் நிற முகம் என்று அழகான பெண் அவள். அவள் கொஞ்சம் இல்லை ரொம்பவே பயந்த சுபாவம். அதனால் அவளுக்கு ஆண் தோழர்களை விட பெண்தோழிகளே அதிகம். ஆண் தோழர்களே இல்லை எனவும் கூறலாம். அவளுக்கு அண்ணன் தம்பி என்று யாரும் இல்லாதது கூட ஒரு காரணமாக இருக்கலாம்.
இப்பொழுது கதாநாயகனிடம் வருவோம். அவன் நேராகா சென்னை வந்ததும் நண்பனின் அலுவலகத்திற்கு உடனே வந்துவிட்டான். அலுவகத்தில் அவன் நண்பன் அவனை தன்னுடைய பார்ட்னர் என்று அலுவலகத்தில் அனைவரிடமும் அறிமுகம் செய்து வைத்து தான் வேறு ப்ராஞ்சிற்கு செல்ல வேண்டியுள்ளதாகவும் அதுவரை தீக்ஷிதே அலுவலகத்தை கவனிப்பான் என்றும் கூறினார். அலுவலகத்தில் உள்ள அனைத்து பெண்களும் அவனை ஆவென பார்த்து கொண்டிருந்தனர். பின்னர் நன்றாக ஆறடிக்கு மேலே இருந்தான். நன்றாக உடற்பயிற்சி செய்து கட்டுமஸ்தான உடலை பெற்றிருந்தான். அடர்த்தியான தலைமுடி அதனை ஜெல் தடவி மேல் நோக்கி சீவியிருந்தான். ட்ரிம் செய்யப்பட்ட தாடி மீசை. இப்படி பார்த்த உடன் ரசிக்க தோன்றும் இவனை யார்தான் புறக்கணிப்பர். ஆனால் இவன் முகம் மட்டும் இருகியிருப்பதை பார்த்து என்னவாக இருக்கும் என யோசிக்க அனைவரும் தொடங்கினர் .
ஆனால் அவர்களுக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை அபூர்வா இறந்ததிலிருந்தே அவன் இப்படித்தான் இருக்கிறான் என்று.
ஆனால் இந்த இருகிய முகமும் ஒரு நாள் இலகும் என்று யாருமே ஏன் அவனே கூட எதிர்பாத்திருக்கமாட்டான்.
இந்நிலையில் விஹானாவின் 10ம் வகுப்பிற்கு பின்னர் சென்னையிலேயே மேற்கொண்டு படிக்க வைக்க வேண்டுமென்று நினைத்தார் மூர்த்தி. ஏனென்றால் அவளின் கூச்ச சுபாவம் பயந்த சுபாவம் நகரத்தில் படித்தால் மாறக்கூடும் என்ற ஆசையில் சென்னை செல்ல முடிவு எடுத்தார்.
அவர்கள் சென்னையில் அவர்களின் ஊரை சேர்ந்த பெண்ணை அங்கே மணமுடித்து கொடுத்திருந்தனர். அப்பெண்ணின் மாப்பிளைக்கு இன்னொரு வீடு இருந்தது. அதை அவர்கள் இவர்களுக்கு வாடகைக்கு விட்டிருந்தனர். மூர்த்தியும் தெரிந்தவர்கள் இருக்கிறார்கள் புதிய ஊர் என்று பயமில்லாமல் இருக்கலாம் என்று நினைத்தார்.
பின்னர் அங்கிருந்த தனியார் பள்ளிகளில் ஒரு பள்ளியில் சேர்த்தார்.
அதுவும் இருபாலர் பள்ளியாக சேர்த்தார். ஏனென்றால் அப்பொழுதுதான் அவள் அனைவரிடமும் பேசிப்பழகுவாள். அவளுடைய சுபாவமும் மாறும் என்று நினைத்தார்
விதி இவர்களை சந்திக்க வைக்குமா என்பதை பொறுத்திருந்து வரும் அத்தியாயங்களில் பார்ப்போம்.

என் சுவாசத்தின் மறுஜென்மம் Where stories live. Discover now