விடமால் துரத்துராளே

7.3K 59 5
                                    

விடாமல் துரத்துராளே!!(டீசர்)

இப்ப உனக்கு என்ன தெரியனும் நான் ஏன் இன்னும் கல்யாணம் பண்ணிக்கமா இருக்கேன் அதானே என்று கேட்டான் தேவேந்திரன் எதிரே நின்று இருந்த திரவியாவை பார்த்து கோவமாக,

ஆம் என்பது போல் தலையை வேகமாக மேலும் கீழும் ஆட்டினாள் திரவியா…

கண்களை இறுக மூடி நீண்ட பெருமூச்சு விட்டவன், சரி சொல்றேன் ஆனா அதுக்கு அப்புறம் நீ எந்த விதத்திலும் என்னை தொந்தரவு பண்ண கூடாது… ஏன் என் கண்ணு முன்னாடி கூட வரக்கூடாது ஓகே‌,

ம்… ம்…. என்று அதற்கும் வேகமாக தலை அசைத்து அவன் என்ன பதில் கூற போகிறான் என்று கண்களில் ஆர்வம் பொங்க அவனையே பார்த்து கொண்டு இருந்தாள்…

தேவேந்திரனோ சற்று நகர்ந்து சென்று ஹாலில் இருந்த அலமாரியின் கதவை திறந்து அதில் இருந்து ஒரு மதுப்பொத்தலை எடுத்து அப்படியே வாயிக்குள் சரித்தவன், மீண்டும் அவள் எதிரே இருந்த ஷோபாவில் அமர்ந்து பேச ஆரம்பிக்கும் போது,

சார் நீங்க இரண்டு பேரும் தானே பேச போறீங்க? நான் வேணா கிளம்பட்டுமா? ஏற்கெனவே நான் வந்து இரண்டு மணி நேரம் ஆச்சு, சும்மா தான் இருக்கேன்… எனக்கு இன்னும் ஒன் ஹவர்ஸ்ல வேற ஒரு கஸ்டமரோட மீட்டிங் இருக்கு என்றாள் தேவேந்திரனால் அன்று அழைத்து வரப்பட்ட பெண்…

அட ஏம்மா நீ வேற கொஞ்சம் நேரம் சும்மா இரேன், நானே ரொம்ப நாளா இவர் பின்னாடி நாய் மாதிரி அலைஞ்சு கேட்ட கேள்விக்கு, இன்னைக்கு தான் அவரே மனசு வந்து பதில் சொல்றேன்னு சொல்லிருக்கிறார்… இதுல நீ வேற இடையில் இப்படி நொய் நொய்னுட்டு, கோபப்பட்டு சொல்ல போயிட போறார்… போ போய் அப்படி அமைதியா உக்காரு, என்று எரிச்சல்பட்ட திரவியா பின்பு தேவேந்திரன் புறம் திரும்பி நீங்க சொல்லுங்க பாவா என்றாள்…

தேவேந்திரன், சரி இப்ப நான் உன் கிட்ட ஒரு கேள்வி கேட்கிறேன் அதுக்கு நீ முதல்ல பதில் சொல்லு, அதுக்கு அப்புறம் நான் சொல்றேன் என்றவன்,  ஒரு ஆணுக்கும் பொண்ணுக்கும் ஏன் கல்யாணம் பண்ணி வைக்கிறாங்க? என்று கேட்டான் திரவியாவை பார்த்து,

எதுக்குனா, நாமா வாழ்றத்துக்கு நமக்கு ஒரு துணை தேவை… கடைசிவரை நம்ம பெத்தவங்க நம்ம கூட வர முடியாது இல்லையா அதுக்காக தான்,  என்றாள் தனக்கு தெரிந்த அளவு,

அதுக்கு மட்டும் தானா வேற எதுவும் இல்லையா? ப்ராக்டிகலானா பதில் சொல்லு என்றான் அவளின் முகத்தை கூர்ந்து நோக்கியபடி,

அவன் என்ன கேட்க வருகிறான் என்பது புரியாமல் முழித்து கொண்டு திரவியா இருக்க,

நானே சொல்றேன் ஒரு ஆணும் பொண்ணும் கல்யாணம் பண்ணிக்கிறது முக்கியமான காரணம் அவங்க உடல் தேவைகளை தீர்ந்துக்கிறதுக்காகவும் தான், கல்யாணத்தோட  பிரதானமான விஷயம் செக்ஸ் தான், என்று கேவலமான பதிலை கூற, அதற்கு ஏதோ சொல்ல வந்த திரவியாவை கை நீட்டி தடுத்த தேவேந்திரன் இது என்னோட கருத்து, என் தேவைகளை நான் வேற வழியில் தீர்த்துக்கிறேன்… எனக்கு தினமும் பர்ஸ்ட் நைட்டு தான்…

என்ன பொறுத்தவரை காபி குடிக்கனும்னு தோணுனா நேரா போய் காபி ஷாப்பில் குடிச்சிரனும்… ஒரு காபிக்காக மொத்த தேயிலை தோட்டத்தையே விலைக்கு வாங்கிறது முட்டாள் தனம்…  இப்ப என்ன பாரு தினம் ஒவ்வொரு காபி ஷாப் விதவிதமான டேஸ்ல, அதனால் எனக்கு கல்யாணம் தேவையில்லாத ஒன்னு நான் என் லைஃப்பா என்ஜாய் பண்ணி வாழுறேன் என்று கேவலமாக பேச அங்கு நின்று இருந்த விலைமாது பெண்ணோ என்ன இவன் ரொம்ப மட்டமான கேரெக்ட்டரா இருப்பான் போல என்று முகம் சுளிக்க,

திரவியாவோ அதற்கு நேர்மாறாக வித்தியாசமான ஆளு தான்ப்பா இந்த பாவா என்று நினைத்தபடி உள்ளுக்குள் சிரித்து இப்போதும் அதே ஆர்வமான பார்வையுடன் பார்த்து கொண்டு இருந்தாள் இல்லை இல்லை ரசித்து கொண்டு இருந்தாள்….

தொடரும்...

ஹாய்பா இது புது கதை டீசர்பா படிச்சிட்டு எப்புடி இருக்குனு சொல்லுங்க... ஆரம்பமே இப்படி இருக்கேன்னு... யாரும் தப்பா எடுத்துக்காதீங்க... கதை படிக்க படிக்க உங்களுக்கே பிடிக்கும்... இதுவும் யாதுமானவளே மாதிரி கலகலப்பான காதல் கதையா தான் இருக்கும்... நிச்சயமா சீக்கிரம் சீக்கிரம் யுடி போடுறேன்... இப்போதைக்கு இந்த கதை தான் தொடர்ந்து எழுத போறேன்... இதுக்கும் உங்க ஆதரவு கொடுங்கப்பா யாதுமானவளே போல 😘😘

விடாமல் துரத்துராளே!!Where stories live. Discover now