விடாமல் துரத்துராளே 15

1.2K 49 3
                                    

விடாமல் துரத்துராளே 15

வேதாசலத்தின் நெருங்கிய நண்பர் தான் மகேஸ்வரன்.‌இருவரும் பள்ளி படிக்கும் காலத்தில் இருந்தே நண்பர்கள். பள்ளி படிப்பை இருவரும் ஒன்றாக முடிக்க மகேஸ்வரன் மருத்துவ கல்லூரியில் சேர்ந்தார்..
வேதாசலம் தங்கள் குடும்ப தொழிலை நிர்வகிக்க நிர்வாக பிரிவை தேர்ந்தெடுத்து படித்தார். கல்லூரி வேற வேற மாறினாலும் அவர்களின் நட்பில் எந்த பாதிப்பும் இல்லை. இருவரும் கல்லூரி முடித்ததுமே வேதாசலத்திற்கு வீட்டினரால் மீனாட்சிக்கும் திருமணம் நடந்ததது. மகேஸ்வரன் உடன் படித்த பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.‌ இருவரின் நட்பை இவர்களின் மனைவிகளும் புரிந்து கொண்டதால் எந்த பிரச்சினையும் இன்றி இன்று வரை தொடர்கிறது. குடும்ப நண்பர்கள் ஆகினர்.

அதன் பின்பு   வேதாசலம் மில் நிர்வாகத்தை கையில் எடுக்க, மகேஸ்வரன் ஆரோக்கியம் மருத்துவமனை பொறுப்பை கையில் எடுத்தார். ஆரோக்கியம் மருத்துவமனை மகேஸ்வரனின் தாத்தா சிறியதாக ஆரம்பிக்க அதை மகேஸ்வரன் தந்தை ஓரளவு பெரிதாக்கினார். மகேஸ்வரன் பொறுப்பேற்ற பின்பு தான் மருத்துவமனை மிகவும் பிரபலமானது.. மக்களிடம் நிறைய நன்மதிப்பைப் பெற்றது. மகேஸ்வரன் மருத்துவமனையை விரிவுப்படுத்தியது மட்டுமில்லாமல் நிறைய ஏழை எளிய மக்களுக்கு மருத்துவம் பார்க்க வசதி இல்லாத மலை வாழ் மக்களுக்கும் கூட இலவசமாக மருத்துவ உதவி நிறைய செய்தார். அதனால் மகேஸ்வரனுக்கும் மருத்துவமனைக்கும் நல்ல பெயர் கிடைத்தது. அந்த காலத்தில் எல்லாம் ராஜாக்களின் உயிர் ஏழு மலை ஏழு கடல் தாண்டி‌ ஒரு கிளிக்குள்ள இருக்கும் சொல்லுவாங்க. அதே போல் தான் மகேஸ்வரனின் உயிர் இந்த மருத்துவமனை என்றாகி போனது.

வேதாசலத்திற்கு ராஜேந்திரன், தேவேந்திரன், ராகேவந்திரன், இந்துமதி என்று நான்கு பிள்ளைகள். மகேஸ்வரனுக்கு கார்த்திக் என்று ஒரே ஒரு பையனே. வேதாசலத்திற்கு நான்கு பிள்ளைகள் இருந்தாலும் அவரின் செல்ல பிள்ளை தேவா தான். இன்று அவனை கண்டாலே வெறுப்பவர். ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு வரை உயிரையே வைத்திருந்தார்.. அவனின் அண்ணன் தம்பி தங்கை கூட அவன் மேல் மிகுந்த அன்புடன் இருப்பார்கள்.

விடாமல் துரத்துராளே!!Where stories live. Discover now