விடாமல் துரத்துராளே 42

1.7K 69 14
                                    

விடாமல் துரத்துராளே 42

ஹாஸ்பிடலில் இருந்து மாலை ஐந்து மணிக்கே வீட்டுக்கு வந்தான்… தியா வீட்டில் இல்லை. வரும் நேரம் தான் சீக்கிரம் வந்துருவா என்றபடி முதன் முறையாக தியாவுக்காக காத்திருக்க ஆரம்பித்து இருந்தான்… கடிகாரத்தை பார்ப்பது வாசலை பார்ப்பது என பதட்டத்தோடு அந்த ஹாலிலே  குறுக்கும் நெடுக்குமாக நடந்து கொண்டு இருந்தான்… கை விரல் பத்திலும் இருந்த நகத்தை நின்று தீர்த்து இருந்தான்… இன்னமும் தியா வந்து இருக்கவில்லை.. கடிகாரம் வேகமாக சுழன்று மணி ஆறு ஆகி ஏழானது.. 
ஹரிணி கூட சேர்ந்து எங்கயாவது வெளிய போய் இருப்பா போல, அதான் இன்னும் வீட்டுக்கு வரல போல, பேசாம கால் பண்ணி எங்க இருக்கான்னு கேட்டு நாமளே நேர்ல போய் கூட்டிட்டு வரலாம் என்று யோசித்தவன்,  தனது பேண்ட் பாக்கெட்டிலிருந்த போனை எடுத்து தியாவுக்கு அழைத்தான்..

முழு ரிங் போய் கட்டானது.. ச்சே என்றபடி திரும்ப திரும்ப கால் செய்தான் மூன்று முறை அழைத்தும் கூட போன் முழு ரிங்காகி கட்டானது. தேவாவதற்கு கடுப்பாக இருந்தது.. எவ்வளவு கோவம் இருந்தாலும் இத்தனை முறை போன் பண்றாங்களே ஏதோ அவசரமா இருக்கும்னு எடுக்கிறாளான்னு பாரேன் என்று கடுப்பானவன் போனை தூக்கி ஷோபாவில் எறிந்தான்…ஆனால் இதே போல் பல நாட்கள் அவள் பத்து  பதினைந்து முறை கால் செய்த போது அதை எடுக்காமல் இருந்ததோடு  இம்சை பண்றா என்றபடி அவள் எண்ணை ப்ளாக்கில் போட்டதை மறந்து விட்டான்..

ஷோபாவில் வீசிய போனை மீண்டும் எடுத்து தியாவுக்கு கால் செய்ய ஆரம்பித்தவன் காதில் மிக மெலிதாக தியாவின் போன் சத்தம் கேட்டது. அவள் தான் வந்து விட்டாளோ என்று வாசலை பார்த்தவனுக்கு ஏமாற்றம்.. அப்ப எங்கிருந்து சத்தம் கேட்கிறது என்று உன்னிப்பாக கவனித்தான்… அந்த ஹாலின் ஓரத்தில் இருந்த அறையிலிருந்து வந்தது… என்ன போன் சவுண்ட் இங்கிருந்து கேட்குது என்ற யோசனையுடன் கதவை திறந்தவன் சற்று அதிர்ச்சி ஆனான்..

அந்த அறையை தான்  தியா நேற்று அலங்காரம் செய்து வைத்திருந்தது..  அலங்காரம் முடித்து விட்டு போனை இந்த இடத்தில் கேமரா ஆன் செய்து வைக்க வேண்டும் என்று கூறியவள், கேமராவை ஆன் செய்து அந்த இடத்தில் வைத்து விட்டு தான் தேவாவிற்காக காத்திருக்க ஆரம்பித்து இருந்தாள்…அந்த அலங்காரம் எல்லாம் அப்புடியே இருந்தது… கண்களை சுருக்கி அதை பார்த்தவன் இன்னைக்கு பாப்பா பர்த் டேவா ச்சே இது தெரியாமா ரொம்ப திட்டி அவளை கஷ்ட படுத்தி வச்சு இருக்கேனே என்று தன்னை நொந்து கொண்டவன்  இந்த அலங்காரம் எல்லாம் யார் பண்ணனது என்ற குழப்பதுடன் அங்கிருந்த தியா போனை கையில் எடுத்து அதை ஓபன் செய்து பார்க்க அதில் தியா நேற்று அலங்காரம் முடித்து விட்டு பேசியது அனைத்தும் ரெக்கார்டு ஆகி இருக்க அதை தான் தேவா பார்த்தான்.. அது மட்டும் அல்லாது அவனை தவிர மற்ற அனைவரும் வாட்ஸ் அப்பில் பிறந்த நாள் வாழ்த்து சொல்லி இருந்ததையும் பார்த்தவன் மனது சங்கடமாகி போனது. நேற்று இதை சொல்ல தான் அவள் அவ்வளவு முயற்சி செய்து இருக்கிறாள் என்பது புரிந்து தன் தலையில் அடித்து கொண்டான்… பிறந்த நாள் அதுவுமா சந்தோஷமா வச்சு இருக்கலைன்னாலும் இப்புடி கஷ்டப்படுத்தாமலாவது இருந்து இருக்கலாம் என்றது மனது..  உடனே வீட்டுலிருந்து வெளியேறி இருந்தான் தியாவை தேடி,


விடாமல் துரத்துராளே!!Where stories live. Discover now