விடாமல் துரத்துராளே 33

1K 46 6
                                    


விடாமல் துரத்துராளே 33

சௌதாமினி  இன்று  கல்லூரிக்கு என்றும் இல்லாத உற்சாகத்துடன்  கிளம்பி கொண்டு இருந்தாள். காரணம் தன்னிடம் வண்டி இல்லாததால் தன்னை தன் தந்தையே அவரது வாகனத்தில்  கல்லூரி அழைத்து செல்வார் என்பதால், நேற்று சபரியிடம் வண்டியை பனி கொடுத்தவள் வீடு திரும்பியதும் அவள் தாய் கௌரி வண்டி எங்கே கேட்க, வண்டி ரிப்பேர் ஒர்க் ஷாப்ல விட்டு இருக்கேனா என்று மட்டும் கூறினாள். ஏனோ சபரியை பற்றியும் அவன் கூறியது பற்றியும் வீட்டில் சொல்லவில்லை. 10வது படிக்கும் வரை சௌமியை செந்திலே தன்னுடைய இருசக்கர வாகனத்தில் கூட்டி கொண்டு போய் பள்ளியில் இறக்கி விடுவார். தனது தந்தையுடன் இரு சக்கர வாகனத்தில் பயணம் செய்வது அவளுக்கு மிகவும் பிடித்தமான ஒன்று, சில வருடங்களுக்கு பிறகு இன்று மறுபடியும் தனது தந்தையுடன் செல்ல போகிறோம்  என்ற நினைவே அவளுக்கு அளவில்லாத ஆனந்தத்தை தந்தது..‌  அப்போது இரு சக்கர வாகனம் இப்போது கார் அவ்வளவே வித்தியாசம் அவருடன் ஒன்றாக சென்றாலே போதும் என்றபடி ஆசை ஆசையாக செந்திலிடம் வந்தவள் "அப்பா வண்டி ஒர்க் ஷாப்ல  விட்டு இருக்கேன் என்னை காலேஜ்ல ட்ராப் பண்ணிடேறீங்களா?" என ஆசையாக  கேட்க,

" நீ பஸ்ல போய்க்கோ சௌமி நான் முக்கியமான விஷயமாக ஒரு ஆளை வர சொல்லி இருக்கேன்" என்று கூறினார்… அதை கேட்ட  சௌதாமினி தனக்கு ஏற்பட்ட ஏமாற்றத்தை தனக்குள் மறைத்து கொண்டு சரிப்பா போய்டு வரேன் என்றபடி வாடிய முகத்துடன் கல்லூரி கிளம்ப, அப்போது தன்னுடைய செல்போனில் குறுஞ்செய்தி வந்ததற்கான ஓசை வர, எடுத்து பார்த்தவள் முகத்தில் மகிழ்ச்சி வந்தது.  தன்னை நேசிக்கவும்  ஒருவன் இருக்கிறான் என்ற சந்தோஷம்.  ஆனால் அது அவள் நினைப்பது போல ஆர்ப்பரிக்கும் அன்பு ஊற்று இல்லை வெறும் கானல் நீர் தான் என்பதை எப்போது உணர போகின்றாளோ?

சாலையை கவனிக்காமல் மொபைலுக்குள் தலையை புதைத்தபடி பஸ் நிலையம் நோக்கி நடந்து கொண்டு இருந்தாள் சௌதாமினி.. அவளை உரசுமாறு ஒரு கார் வந்து அருகே நின்றது. பயந்து போனவள் காரை பார்க்க, காரின் பக்கவாட்டு கண்ணாடியை கீழ் இறக்கியவன் இப்புடி ரோட்டை பார்க்கமா போனையே பார்த்துட்டு போனா காலேஜ் போக முடியாது. மேல் தான் போகனும் சௌமியா என்றான் காருக்குள் இருந்த ஹர்ஷா.

விடாமல் துரத்துராளே!!Where stories live. Discover now