விடாமல் துரத்துராளே 30

1.3K 60 6
                                    

விடாமல் துரத்துராளே 30


தேவா, சூர்யா இருவரும் கிச்சனில்  சமைத்து கொண்டு இருந்தார்கள்.. தியா ஷோபாவில் படுத்து மொபைல் நோண்டி கொண்டு இருந்தாள்…

"தியாமா" என்று சந்தோஷமாக கத்திக் கொண்டே உள்ளே ஓடி வந்து அவளை அணைத்து கொண்டாள் ஹரிணி..

ஹரிணி, "காலையில்ல நான் எழுந்த போது தான் தெரிஞ்சது நீ நைட்டு வீட்டுக்கு வரவே இல்லைன்னு, உன் நம்பருக்கு கால் பண்ணா சுவிட்ச் ஆஃப்ன்னு வந்துச்சு, என்னவோ ஏதோன்னு பயந்துட்டேன்டா, அதுக்கு அப்புறம் சபரி மூலமா தான் தெரிஞ்சது நைட்டு நடந்தது எல்லாம் ஹாப்பி மேரிட் லைஃப் தியாமா, சொன்ன மாதிரியே உன் பாவாவையே கல்யாணம் பண்ணிட்டியே, உனக்கு மேரேஜ் ஆனதில் உன்னை விட எனக்கு தான் ரொம்ப சந்தோஷம் தெரியுமா?

தியா, "தெரியும் ஹனிமா ஏன்னா நீ தான் என் நண்பேன்டா ஆச்சே, எனக்கு ஒரு நல்லது நடந்தா என்னை விட நீ தான் அதுக்கு சந்தோஷப்படுவேன்னு தெரியும்டா",

அது எல்லாம் ஒன்னுமில்லை, பாவா எங்க இருப்பார்? ஹனிமா,பாவா சாப்பிடுருப்பாரா? பாவா தூங்கி இருப்பாரே? பாவா ஏன் வீட்டில் இருக்க மாட்டேங்கிறார்?பாவாக்கு  என்ன பிரச்சினை எதற்காக இப்புடி இருக்கிறார்? பாவா, பாவா, பாவான்னு மொக்கை போட்டு என் உயிரை எடுக்க மாட்டால்ல அதான் ஹாப்பின்னு சொன்னேன்" என்று கூறி சிரித்த ஹரிணியை தியா முறைத்தாள்...

"கூல் கூல் சும்மா ஒரு ஜாலிக்கு சொன்னேன் டா, நிஜமா ரொம்ப சந்தோஷமா இருக்குடா" என்று ஹரிணி உள்ளார்ந்த மகிழ்வுடன் கூற  தியா அவளை அணைத்து கொண்டாள்…

மற்ற அனைவரையும் விட ஹரிணிக்கு தானே தெரியும். தியா தேவா மீது எவ்வளவு காதல் வைத்து இருந்ததால், அவனை பார்க்க வேண்டும் என்பதற்காக எவ்வளவு கஷ்டப்பட்டாள், கடந்த காலத்தில் அவன் பட்ட கஷ்டங்களை நினைத்து எவ்வளவு அழுது வருத்தப்பட்டாள் என்பது, தியாவின் காதல் ஒரு வகை பைத்தியக்கார தனமாக ஹரிணிக்கு தோன்றினாலும், அவளின் அன்பை பார்த்து அவள்  காதல் கைக்கூட வேண்டும்.. தேவாவோ தியா பெற்றோரோ அவளின் காதலை ஏற்காமல் அவள் மனதை கஷ்டப்படுத்தி விடுவார்களோ, அதனால் தன் தோழி வருத்தப்படுவாளோ என்று எல்லாம் நினைத்த ஹரிணிக்கு, இப்போது தியா தேவா திருமணம் மகிழ்ச்சியையே கொடுத்தது.

விடாமல் துரத்துராளே!!Where stories live. Discover now