விடாமல் துரத்துராளே 19

1.2K 48 7
                                    

விடாமல் துரத்துராளே 19

நள்ளிரவு ஒரு மணி தேவா தனது அறையின் பால்கனியில் உறக்கம் வராமல் நடந்து கொண்டு இருந்தான்…‌ பொதுவாகவே திருமணம் நெருங்கும் சமயத்தில் ஆணுக்கோ பெண்ணுக்கோ அதீத சந்தோஷ மனநிலையில் உனக்காக வராது தான். தேவாவும் கல்யாணத்தை எதிர்நோக்கி மகிழ்வாக இருந்தாலும்… அந்த மகிழ்வையும் தாண்டி கடந்த இரண்டு நாட்களாக மனம் ஒரு நிலையில் இல்லாமல் தவிக்கின்றது…ஏதேதோ மண்டைக்குள் வந்து குழப்புக்கின்றது..‌ அவனின் உள்ளுணர்வு ஏதோ ஒன்றை அவனுக்கு சொல்கிறது… ஆனால் அது என்ன என்பது தான் அவனுக்கு புரியவில்லை…

நமக்கு ஏதாவது கெட்டது நிகழ போகின்றது என்றால் சில சமயம் இப்புடி தான் நமது மனம் அதை நமக்கு காட்டி கொடுக்கும். தேவாவிற்கும் அதே தான் ஆனால் அவன் அதை உணரவில்லை.
சிறிது நேரம் பாட்டு கேட்கலாம் அப்போது மனது அமைதியாகும் என்று நினைத்தவன். அங்கு இருந்த டீபாயில் வைத்திருந்த தனது மொபைலை எடுக்க தனது இடது கரத்தை நீட்டினான்…

அப்போது தான் ஒன்றை கவனித்தான். அவனின் இடது கரத்தின் மோதிர விரலில் அணிந்திருந்த அவனின் நிச்சய மோதிரம் காணவில்லை.. அந்த மோதிரம் வெண்ணிலாவின் தேர்வு. அவளே தேவாவிற்காக ஆசை ஆசையாக நகைப்பட்டறையில் ஆர்டர் கொடுத்து செய்தது…
அச்சோ தேவா மோதிரத்தை எங்கடா போட்ட என்று தலையில் அடித்து கொண்டு அறை முழுக்க தலை கீழாய் புரட்டி போட்டு  தேடி பார்த்தான்.. பாத்ரூமில் கூட போய் பார்த்தான்.. மோதிரம் கிடைக்கவில்லை… அய்யோ நிச்சயதார்த்த மோதிரம் காணலைன்னு சொன்னா நிலா அபசகுணம் அது இது சொல்லி வருத்தப்படுவாளே, நல்லா யோசி தேவா நல்லா யோசி என்று   தலையில் இரண்டு கை வைத்து கண்களை மூடி யோசித்து பார்த்தான்… இரண்டு நொடிகளில் நியாபகம் வர கார் சாவியை எடுத்து கொண்டு கிளம்பினான் மருத்துவமனைக்கு..‌ இரண்டு நாட்களுக்கு முன்னர் ஒரு அறுவை சிகிச்சை செல்லும் முன் மோதிரத்தை கழட்டி வைத்ததை எடுக்கவில்லை...

மருத்துவமனை வளாகத்தில் காரை நிறுத்தி விட்டு இறங்கினான் தேவா… அப்போது செக்யூரிட்டி ஓடி வந்து என்னாச்சு டாக்டர் நீங்க கல்யாணத்திற்கு லீவ் தானேபோட்டு இருக்கீங்க… இந்த நேரத்தில் இங்க வந்துருகீங்க ஏதாவது பிரச்சினையா டாக்டர் என்று கேட்டார்…

விடாமல் துரத்துராளே!!Where stories live. Discover now