விடாமல் துரத்துராளே 35

1.4K 56 19
                                    

விடாமல் துரத்துராளே 35

அந்தி சாயும் மாலை வேளை ஆரோக்கியம் மருத்துவமனை தங்களின் உடல் சார்ந்த தொந்தரவுகளுக்காக டாக்டரை பார்ப்பதற்கென குழந்தைகள் முதல் வயதான பெரியவர்கள் வரை அந்த நீண்ட பெரிய வராண்டாவில் கூட்டம் நிரம்பி வழிந்தது.. ஹரிணியும் அங்கு தான் அமர்ந்து இருந்தாள் அருகில் இருந்த தன் பாட்டியை முறைத்த வண்ணம்.

இன்று மாலை கல்லூரி முடிந்து வீட்டுக்கு திரும்பி கொண்டு இருந்த ஹரிணிக்கு போன் செய்த அவள் தந்தை, ஹரிமா பாட்டிக்கு காலையிலிருந்து உடம்புக்கு முடியலையாம். தலை சுத்துறாப்ல இருக்காம். கை கால் வேற ரொம்ப வலிக்குனு சொல்றாங்க. பீபி சுகர் ஜாஸ்தி ஆகி இருக்கும் நினைக்கிறேன்‌.  நானும் அம்மாவும் பொள்ளாச்சி வரை வந்து இருக்கோம் வரதுக்கு லேட்டாகும்.  அதனால்ல நீ வீட்டுக்கு சீக்கிரமா போய் பாட்டியை நாமா எப்பவும் காட்ற ஹாஸ்பிடல் கூட்டிட்டு போய்ட்டு வந்துருமா என கூறினார்.

அதை கேட்ட ஹரிணியோ எப்பவும் போற ஹாஸ்பிடல்னா ஆரோக்கியம் ஹாஸ்பிடல் போகனுமே. அங்க போனா ஹர்ஷா இருப்பானே. அவனை பார்க்க வேண்டியது வருமே என் மனதிற்குள் யோசித்தவள், எப்பவும் போற ஆரோக்கியம் ஹாஸ்பிடலுக்கு எல்லாம் கூட்டிட்டு போக முடியாது. பக்கத்தில் இருக்கிற ஏதாவது ஹாஸ்பிடலுக்கு வேணா கூட்டிட்டு போறேன் என்றாள் ஹர்ஷா வை தவிர்க்கும் பொருட்டு,

ஹரிமா பாட்டி பக்கத்து ஹாஸ்பிடலுக்கு எல்லாம் வர ஒத்துக்க மாட்டாங்க. அங்க காட்டினாலும் அவங்களுக்கு கேட்காது.. ஆரோக்கியம் ஹாஸ்பிடலுக்கே கூட்டிட்டு போ. அங்க தானே பாட்டி சுகர் பீபிக்கு எல்லாம் மாத்திரை வாங்கி சாப்டுறாங்க. அதனால்ல அங்கேயே கூட்டிட்டு போடா செல்லம். அப்பா  வீட்டுக்கு வரும் போது உனக்கு பிடிச்சது ஏதாவது வாங்கிட்டு வரேன்.
என தன்மையாக கூறினார்.

போப்பா எனக்கு எதுவும் வேணாம்.  அங்க எல்லாம் என்னால்ல கூட்டிட்டு போக முடியாது.. பக்கத்துல இருக்க ஹாஸ்பிடலுக்கு வேணும்னா கூட்டிட்டு போறேன். உன் அம்மா அந்த ஹாஸ்பிடலுக்கு தான் போவேன் அடம் பிடிச்சா நீயே வந்து கூட்டிட்டு போ என சொன்னதையே திரும்ப திரும்ப சொல்ல, அதில் கோவமான அவள் தந்தையிடம்  சில பல திட்டுகளை வாங்கி கட்டி கொண்டு வேறு வழி இல்லாமல் பாட்டியை அழைத்து கொண்டு வந்தாள்.

விடாமல் துரத்துராளே!!Where stories live. Discover now