புதிர்

2.7K 114 15
                                    

"மாலதி போலாமா???

"போலாம் ஹம்சி". கோவிலில் பூஜையை முடித்துவிட்டு கிளம்ப தயாரானார்கள். மாலதி, பூஜா, ஹம்சி மூவரும் முன்னால் நடந்தார்கள். சிவா அவர்கள் பின் மெல்ல நடந்து வந்து கொண்டிருந்தான்.

"அப்போது பூஜா திரும்பி சிவாவை பார்த்தாள். அவன் ,அவளை பார்த்ததும் பூஜா சட்டென திரும்பிவிட்டாள். அவள் செய்கையை கண்டு சிவா புண்ணகைத்தான்.

"ஹம்சி நீங்க கீழ போங்க. நான் கொஞ்ச நேரம் இங்க இருந்துட்டு வருகிறேன் " என சிவா ,பூஜாவை பார்த்துக்கொண்டே கூறினான்.

"அதை மாலதியும், ஹம்சியும் கவனித்தார்கள்.

"தனியா கோவில்ல என தேங்கா பொறுக்க போறியா சிவா"? என மாலதி நக்கலாக கேட்டாள்.

"ஹம்சி பட்டென சிரித்ததும் பூஜா அவளை முறைத்தாள். அவளை பார்த்ததும் ஹம்சி சிரிப்பை அடக்கிகொண்டாள்.

"தேங்கா பொறுக்கல மணி ஆட்ட போறேன். நீயும் வரியா? என சிவா மாலதியை கேட்டான்.

"நான் வர்ல" வா பூஜா, ஹம்சி போகலாம் என மாலதி அழைத்தாள்.

"நீங்க போங்க நான் பிறகு வருகிறேன் என்று பூஜா தயக்கத்துடன் கூறினாள்.

"ஓ அப்போ சரி நாங்களும் இங்கேயே இருக்கோம் என ஹம்சி பதில் அளித்தாள்.

"சிவா ஹம்சியை ஏக்கத்தோடு பார்த்தான். அதை புரிந்துக்கொண்ட ஹம்சி "சரி உங்களுக்காக கீழே காத்து இருக்கிறோம் சீக்கிரம் வந்துவிடுங்கள். எனக்கு பசி உயிரை கொள்ளுகிறது. அதோடு உச்சி வெயில் வருவதற்க்குள் வீடு திரும்ப வேண்டும் இல்லை என்றால் சூரியன் சுட்டெரிக்கும் என்று கூறினாள்.

"சரி நாங்க சீக்கிரம் வந்துவிடுவோம் நீங்கள் செல்லுங்கள் என்று சிவா கூறினான்.

"மாலதியும், ஹம்சியும் இறங்கி கீழே சென்றனர். ஹரூஷ் ஜீப்பில் அமர்ந்துக்கொண்டு அருகில் தோட்டத்தில் இருந்த ரோஜா மலர்களை ரசித்துக்கொண்டிருந்தான். அவர்கள் வருவதை அவன் கவனிக்கவில்லை. அதை கவனித்த மாலதி விளையாட்டாக ஹரூஷ் பின்னால் சென்று பட்டென அவன் காதின் அருகில் கத்தினாள். சட்டென ஹரூஷ் திடுக்கிட்டு பயத்தில் அவன் நெஞ்சில் கைவைத்து அவன் கண்களை மூடினான் ். இதை கண்டா ஹம்சி "ஏய் ஹரூஷ் என்ன ஆயிற்று என்று பதற்றத்துடன் அவனை நெருங்கினாள்.

ஹாசினிDove le storie prendono vita. Scoprilo ora