ஹாசினி -1

2.2K 131 48
                                    

"ஹாசினி என் அக்கா" ஹம்சி ஹாசினி பற்றி கூற ஆரம்பித்தாள்.

"நாங்க இறட்டை குழந்தைகள். நாங்க எப்பவும் பிரிந்து இருந்ததே கிடையாது. கடைக்கு போகனும்னா கூட ஒன்னாதான் போவோம். எங்கள்ள யாரு ஹம்சி யாரு ஹாசினினு அடையாலம் கண்டு பிடிப்பது ரோம்ப கஷ்டம். ஆனா எங்களுக்குல்ல ஒரு அடையாலம் இருந்தது. அவளோட ஒரு கால்ல மட்டும் 6 விரல் இருக்கும்."

"அப்போ இந்த புகைப்படத்தில் இருப்பது நீ இல்லையா?" என்று ஹாரூஷ் கேட்டான்.

"என்ன புகைப்படம்?" என ஹம்சி கேட்டால்.

"ஒரு நாள் மேல இருக்க ரூம்ல இந்த புகைப்படம் எனக்கு கிடைத்தது. இதில் இருப்பது நீ தான் என்று நானே இதை வைத்துக் கொண்டேன்." என்று ஹாரூஷ் புகைப்படத்தை அவளிடம் கொடுத்தான். அதை ஹம்சி வாங்கி பார்த்தாள். அவள் கண்களில் இருந்து கண்ணீர் வழிந்தது.

"இது ஹாசினி. எப்பவும் பிரியாத இருந்த நாங்க ஒரு முறை பிரிய வேண்டிய சூழ்நிலை வந்தது. எனக்கு இன்டர்வியு இருந்து நான் அந்த இன்டர்வியுல கலந்துக்கிட்டா எனக்கு படிப்பு முடிச்சதும் கண்டுப்பா வேல கிடைக்கும். அதனால் என்ன சென்னைக்கு அனுப்பிட்டாங்க. என கூட அம்மா வந்துடாங்க. என் அப்பா இந்த வீட்டில் ஒரு முக்கியமானா வேலை இருகிறதா சொல்லி ஹம்சிய இங்க அழைச்சிட்டு வந்துடாங்க. ஒரு வாரம் கழித்து நான் திரும்பி வீட்டுக்கு வந்தேன். அப்போ என் அப்பா மட்டும் தான் வீட்டில் இருந்தாரு. நான் ஓடி போய் ஹாசினிய வீடு முழுதும் தேடினேன். அவ வீட்டில் இல்ல.

என அப்பா கிட்ட ஹாசினி எங்கனு கேட்டேன். அவர் பதிலே சொல்லல. அம்மாவும் நானும் மாத்தி மாத்தி கேட்டோம். அவர் முகம் வாடி இருந்தது. அவர் இடத்தில் இருந்து பதில் வரவில்லை. அவர் பதில் சொல்லாததும் நான் அழ தொடங்கிட்டேன். நான் கஷ்டபடுறத பார்க்க முடியாம. என் அப்பா அந்த கசப்பான உண்மையை சொன்னார்."

"என்ன அது?" என்று பூஜா கேட்டால்.

"ஹாசினி யாரு கூடவோ ஓடி போய்ட்டானு." என்று ஹம்சி மன வலியில் கூறினாள். அனைவரும் திகைத்து போனார்கள்.

"அதுக்கு அப்புறம் ஹாசினிக்கு என்ன நடந்தது? அவ எப்படி இறந்துடா?" என மாலதி கேட்டாள்.

"எனக்கு தெரியல அவ இல்லாம என்னால வாழவே முடியில. எங்கோ அவ சந்தோசமாக இருக்கானு நான் நிம்மதியாக இருந்தேன். ஆனா என் ஹாசினிக்கு என்ன தான் நடந்தது?" என ஹம்சி புலம்பினால்.

"அத ஹாசினி தான் சொல்லனும்." என்று சிவா கூறினான். ஹம்சி சிலை ஆனால். அதை கண்டதும் ஹாரூஷ் பயந்தான்.

"ஹம்சி என்ன ஆச்சி?" என்று ஹாரூஷ் கேட்டான். அவள் பதில் கூறவில்லை.

"ஹம்சி" என்று அனைவரும் அழைத்தார்கள். அவள் சிலை ஆனால்.

"ஹம்சி?" என்று ஹாரூஷ் மீண்டும் அழைத்தான். அவள் பதில் கூறவில்லை.

"ஹாசினி?" என ஹாரூஷ் அழைத்தான். அவள் நிமிர்ந்து ஹாரூஷ்யை பார்த்தாள். அனைவரும் பயத்தில் திடுக்கிட்டனர்.

"எனக்கு என்ன நடந்தது என்று நானே செல்கிறேன்." என ஹம்சிக்குள் இருந்து ஹாசினி கதையை கூற தொடங்கினால்.

ஹாசினிWhere stories live. Discover now