இருள் காடு

2.9K 135 69
                                    

{unedited}

*****
இதழ்கள் இரண்டும் இனைந்தது. ஹம்சி பதறினாள் அவளால் அதை மறுக்கவும் இயலவில்லை அதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை. அவள் அவனை தள்ள முயர்சித்தாள். வெகு நேர முயர்சிக்கு பின் அவனை விளக்கினாள். இருவரும் வேகமாக மூச்சு வாங்கினார்கள். சட்டென்று ஹம்சி அங்கு இருந்து மேலே ஓடினாள். ஹாரூஷ் என்ன செய்வது என்று புரியாமல் அமைதியாக நின்றான்.

கதிர் வண்டியில் ஹம்சிக்காக காத்து இருந்தான். அப்போது ஹம்சி வீட்டில் இருந்து வெளியே வந்தாள்.

"ஹம்சி எவ்வளவு நேரம் உனக்காக காத்து இருக்கிறது." என்று கதிர் கூறினான்

"நான் இத்தனை காலம் உனக்காக காத்து இருந்தேனே அது தெரியவில்லையா உனக்கு" என்று ஹம்சி நிதானமாக கூறினால்.

"அதற்கான பலனை அளிக்கதானே நான் இங்கு வந்து இருக்கிறேன்." என்று கதிர் பதில் அளித்தான்.

ஹம்சி வண்டியில் சென்று அமர்ந்தாள். இருவரும் அங்கு இருந்து புறப்பட்டனர். சிவா கீழே இறங்கி வந்தான்.

"டேய் ஹாரூஷ் கிளம்பலாமா " என்று கேட்டான். ஹாரூஷ் அதற்கு பதில் அளிக்காமல் அமைதியாக இருந்தான்.

"ஹாரூஷ் என்ன யோசித்துக்கொண்டு இருக்கிறாய்" என்று சிவா வினாவினான்.

"ஒன்றும் இல்லை டா போகலாம் " என்று ஹாரூஷ் கூறினான்.

"சரி எல்லாரையும் நான் வர சொல்கிறேன் " என்று சிவா கூறினான்

"பூஜா, மாலதி, ஹம்சி கீழ இறங்கி வாங்க" என்று சிவா அழைத்தான்.

"சிவா ஹம்சி கதிர் கூட சென்றுவிட்டாள் " என்று ஹாரூஷ் கூறியதும் ஹம்சி கீழே இறங்கி வந்தாள். ஹாரூஷ் திடுக்கிட்டு அவளை பார்த்தான். ஆனால் அவள் நிதானமாக இறங்கி வந்தாள்.

"என்ன டா ஹம்சி சென்றுவிட்டால் என்று கூறினாய் அவள் இங்கு இருக்கிறாள்" என்று சிவா கேட்டான்.

"எனக்கு ஒன்றும் புரியவில்லை நான் இப்போ தான் ஹம்சி கதிர் உடன் செல்வதை கண்டேன்" என்று ஹாரூஷ் கூற. ஹம்சி குழப்பத்துடன் நிமிர்ந்து பார்த்தாள்.

ஹாசினிWhere stories live. Discover now