மரண விறைப்பு

2.5K 127 34
                                    

"Hi readers,
""""""So far how is my story??? I'm dedicating this part to my readers who supported me a lot. I need to thank them a lot. Thank you so much aysha007 , ArunaSuryaprakash , murugesathya , SeecretGal , @arakshaya ,@deivamani ,@subhashini @Raksha_27, @sJayaRasika, @Raksha_daredevil.
********************************
{unedited}
மாலதி மயங்கி விழுந்ததும்."ஹரூஷ் ,சிவா,சிவா" என்று கத்தினான்.

சிவா ஓடி வந்தான். அவர்கள் அருகில் வந்தவன், அந்த மரத்தை பார்த்து அதிர்ந்து நின்றான்.

"ஏய் சிவா, மாலதிய தூக்கு" என்று ஹரூஷ், ஹம்சியை கட்டி அனைத்தபடி கூறினான். ஹம்சி அவன் மார்பில் ,பயத்தில் தன்னை மறந்து அழுதுகொண்டு இருந்தாள்.

சிவா, சிலை போல் அந்த மரத்தையே பார்த்துக்கொண்டு இருந்தான். "ஏய் சிவாவாவாவா..." என்று ஹரூஷ் குரலை உயர்த்தி அவனை அழைத்தான். நினைவுக்கு வந்த சிவா, அதிர்ச்சியில் ஹரூஷ்யை பார்த்தான். ஹரூஷ் ,மாலதியை நோக்கி கண் அசைத்தான்.
சிவா ஓடி சென்று அவளை தூக்கினான். சிவா அவளை தூக்கி கொண்டு உள்ளே செல்லும் வழியில். பூஜா அவர்களை நோக்கி வருவதை கவனித்தான்.

"பூஜா" என்று அவன் அழைத்ததும். அவள் அவன் அருகில் ஓடி வந்தாள்.

"என்ன ஆயிற்று மாலதிக்கு??? என்று பதற்றத்துடன் கேட்டாள்.

அவன் பதில் கூறாமல் "வா வீட்டிற்கு செல்வோம்" என்று அவளை அழைத்தான்.

"சிவா, ஹரூஷ், ஹம்சி எங்க??? என்று பூஜா கேட்டாள்.

"பூஜா முதலில் மாலதியை கவனிப்போம் வா" என்று அழைத்தான்.

"நீ போ சிவா. நான் ஹம்சி கூட வரேன்" என்று அவள் பதில் அளித்தாள்.

"பூஜா உனக்கு ஒரு முறை சொன்னால் புரியாதா??? என்று கோபத்துடன் கேட்டான். இவ்வாறு சிவா கோபப்பட்டு அவள் பார்த்ததில்லை. பதில் எதுவும் கூறாமல் அவனுடன் வீட்டின் உள்ளே சென்றாள்.

சிவா, மாலதியை, பூஜாவின் கண்காணிப்பில் விட்டு விட்டு அந்த வீட்டு வேலை ஆட்களுடன் மீண்டும் அந்த புளிய மரத்தின் அருகில் சென்றான். அப்போது வேலை ஆள் கந்தன். அந்த மரத்தை கண்டதும் திடுக்கிட்டு நின்றான். பின் ஓடி சென்று அந்த மரத்தில் தூக்கிட்டு இருந்த பல்லவியின் கால்களை பிடித்து அழுதான்.

ஹாசினிWhere stories live. Discover now