கரடி பொம்மை

2.4K 121 30
                                    

{really really badly unedited}

If you spot any mistakes. Please message me. Don't embarrass me. Too busy that's why I couldn't able to update little early.

Please please please forgive my mistakes.

Imagine the story.
*****

"சிவா ஹம்சினிக்கு என்ன ஆயிற்று??? அவள் எங்கே?" என்று ஹாரூஷ் பதற்றத்துடன் கேட்டான்.

"ஹாரூஷ் ஹம்சி காட்டுக்குள் மாட்டிக்கொண்டாள்" என்று பதறிக்கொண்டே சிவா கூறினான்.

"என்னடா சொல்லுர??? என்று ஹாரூஷ் கேட்க. சிவா நடந்தது அனைத்தையும் கூறினான்.

"சிவா நீ இவங்க இரண்டு பேரையும் பார்த்துக்கொள். நான் சென்று ஹம்சியை அழைத்து வருகிறேன்" என்று கூறிவிட்டு ஹாரூஷ் காட்டுக்குள் சென்றான்.
*****

ஹம்சி வந்த திசையிலேயே திரும்ப ஓடினாள். அவள் கண்களில் ஜீப் தென்பட்டது.

"சிவா எப்படியாவது ஜீப்பை எடு." என்று கூறிவிட்டு வேகமாக சென்று ஜீப்பின் அருகில் நின்று மூச்சி வாங்கினால்.

"சிவா" என்று திரும்பி பார்த்தவள் அப்பொழுது தான் அவள் அருகில் சிவா இல்லாததை உணர்ந்தாள். சிவா, சிவா என்று அடி வயிற்றில் இருந்து கத்தினாள். எந்த பதிலும் கிடைக்காத்தால் அமைதியானால். அவள் சென்று ஜீப்பில் அமர்ந்தாள். காட்டுக்குள் நரி ஊலையிடும் சத்தம் அவளை நடுங்கவைத்தது. அவள் எதிரே இருந்த மரத்தில் இருந்து ஒரு ஆந்தை இவளை கண்டு அலற அடி வயிற்றில் உண்டான் பயம் உச்சி வரை பாய்ந்தது. கண்களை மூடி ஜீப்பில் சாய்ந்து அமர்ந்தாள். விடியும் வரை இவ்வாரே இருந்துவிட்ட முடிவு செய்தாள்.

"ஹம்சி" என்று அவளை அழைக்கும் ஹாரூஷ்யின் குரல் அவளுக்கு கேட்டது. ஆதே குரல் ஹாரூஷ்க்கும் கேட்டது.

"நான் அவளை அழைக்கவே இல்லையே. யார் ஹம்சியை என் குரலில் அழைக்கிறது. ஹம்சி" என்று இம்முறை ஹாரூஷ்யே கத்தினான்.

ஹம்சி அந்த குரல் கேட்கும் திசையை நோக்கி நடந்தாள். ஹாரூஷ் வேகமாக ஓடி வந்து ஜீப்பின் அருகில் நின்றான். அங்கு ஹம்சி இல்லை. ஹம்சி "ஹாரூஷ் ஹாரூஷ் " என்று கத்திக்கொண்டே காட்டின் மறுபுறம் நடந்தால். ஹாரூஷ் "ஹம்சி " என்று மீண்டும் அழைத்தான். ஆனால் அவனுக்கு பதில் எதுவும் கிடைக்கவில்லை. அவன் எந்த வழியில் செல்வது என்று தெரியாமல் குழம்பினான். அவனுக்கு ஹம்சியை எண்ணி மேலும் பயம் அதிகரித்தது. ஒருவினாடி யோசித்தான்.

ஹாசினிWhere stories live. Discover now