❤ 01 ❤

15.3K 279 36
                                    

அதிகாலை சூரியனின் ஒளி அவள் முகத்தில் பட்டு ஒளிர்ந்து கொண்டிருந்தது..

தன் தோழி அருகில் வந்து அமர்ந்ததும் அவளை பார்த்து மெல்லிய புன்னகையை உதிர்த்தாள் மித்ரா.

"என்ன மித்ரா.. காலையிலே யோசனைலாம் பலமா இருக்கு.."என கேட்டாள் சாரு.

"இன்னைக்கும் அதே மாதிரி ஒரு கனவு.."என சற்று சலிப்பாக பதிலளித்தாள் மித்ரா.

சாரு உற்சாகமாக.. "சொல்லு.. சொல்லு.. கனவுல உன் ராஜகுமாரன் என்ன பண்ணான்.."என கேட்டாள்..

"படியில இருந்து கீழ விழுற என்னை யாரோ தாங்கிப்பிடிச்சாங்க.. யாருனு பார்க்கிறதுக்குள்ள கனவு கலைஞ்சிடுச்சு.."

"ம்.. கனவு கூட உனக்கு எவ்ளோ ரொமாண்டிக்கா வருதுல்ல.."

"ப்ச்.. சாரு உனக்கு என்னை பத்தி நல்லாவே தெரியும்.. அப்டி இருக்கும் போது நான்.."

"மித்ரா.. இது வெறும் கனவு.. இதனால என்ன மாறிடப்போகுது.. அதை ஏன் சந்தோஷமான ஒன்னா நினைக்க மாட்டீக்கிறா.."

"சிண்ட்ரெல்லா கதை மாதிரி.. எங்கிருந்தோ ஒரு ராஜகுமாரன் வருவான்.. அவன் என் வாழ்க்கையையே தலைகீழா மாத்திடுவானு நினைக்கிறதே முட்டாள் தனம்.."

"அந்த மாதிரி நடக்கணும்னு நீ ஆசைப்படலை.. ஆசைப்படவும் மாட்ட.. அந்த மாதிரி ஏதோ கனவு வர்றதுக்கு நீ என்ன பண்ணுவ.."

"ஆழ்மனசில இருக்கிறது தான் கனவா வரும்னு சொல்வாங்கல்ல.. அப்டினா என் மனசில அந்த மாதிரி ஆசை இருக்கோனு குற்ற உணர்ச்சியா இருக்கு.."

"இதுல ஃபீல் பண்ண எதுவுமில்லை மித்ரா.."

"இல்லை சாரு.. எனக்குன்னு சில commitments இருக்கு.. இந்த மாதிரி கனவு.. இல்லாத ஒரு ராஜகுமாரன்.. இதெல்லாம் என்னை டிஸ்டர்ப் பண்ற மாதிரி இருக்குது.."

"ம்.. kk leave it.. இன்னைக்கு sunday வா எங்கையாவது போய் ஊர் சுத்திட்டு வரலாம்.."என மித்ராவின் கவனத்தை திசைமாற்றினாள் சாரு.

சாருவின் மனதில்.. "மித்ரா.. கண்டிப்பா உனக்கு வரப்போறவன் ராஜகுமாரனா தான் இருப்பான்.."என நினைத்தாள்..

தாயை இழந்த மித்ரா தன் கல்லூரி படிப்பை முடித்துவிட்டு.. தன் தம்பியை டாக்டராக்க வேண்டும் என்ற கனவில் வேலை பார்த்துக் கொண்டிருக்கிறாள்.

மதுவால் தன்னையே அழித்துக் கொண்டிருக்கும்  தந்தையால் தன் தம்பி கார்த்திக்கு அவன் ஆசைப்படும் படிப்பை படிக்க வைக்க முடியாது என்பதை உணர்ந்தவள் மித்ரா.

சாருவும் மித்ராவும் working womens ஹாஸ்டல்ல ஒன்னா தங்கியிருக்கிறாங்க.. மித்ரா தன் மனசில இருக்கிற எல்லாத்தையும் share பண்ணிக்கிற ஒரேயொரு ப்ரெண்ட் சாரு.

மித்ராவும் சாருவும் நாள் முழுக்க ஊர் சுத்திட்டு.. ரொம்ப டயர்டா வந்தாங்க.

மித்ரா கார்த்திக்கு போன் பண்ணா.

"அக்கா.. நல்லாருக்கீயா.."என உற்சாகம் பொங்க கேட்டான் கார்த்தி.

"நான் நல்லா இருக்கேன் டா.. நீ எப்டி இருக்க.."

"நான் நல்லா இருக்கேன் அக்கா.."

"அப்பா எங்கடா.."

"அவர் குடிச்சிட்டு எங்க விழுந்து கிடக்காரோ.."என சலித்துக் கொண்டான் கார்த்தி.

"சரி விடுடா.. நீ ஒழுங்கா படி.."

"அக்கா இன்னும் இரண்டு வாரம் தான் இருக்கு பப்ளிக் எக்ஸாமுக்கு.. நாளைக்கு ஹால்டிக்கெட் தந்துடுவாங்க.. நீ எப்ப எனக்கு பேனா வாங்கித் தருவ.."

"நான் அடுத்த வாரம் ஊருக்கு வர்றேன்.. வாங்கிட்டு வர்றேன் டா.."

"ம்.. சரி க்கா.."

"சரி டா.. நீ படி.. நான் அப்புறம் பேசுறேன்.."என போனை கட் செய்தாள் மித்ரா.

தொடுவானம்Where stories live. Discover now