❤ 02 ❤

7.7K 286 44
                                    

மித்ரா வழக்கம் போல காலையில் சீக்கிரமாகவே எழுந்து குளித்து விட்டு வர.. சாருவோ நன்றாக இழுத்து மூடி படுத்துக் கொண்டிருந்தாள்.

"சாரு.. எழுந்திரு.."என மித்ரா சாருவை எழுப்பினாள்.

"ப்ளீஸ்.. ப்ளீஸ்.. இன்னும் கொஞ்ச நேரம்.."என சிணுங்கினாள் சாரு.

"இன்னைக்கு திங்கட்கிழமை.. வேலைக்கு போகவேண்டாமா.."என கேட்டபடி மித்ரா தன் வேலைகளை தொடர்ந்தாள்.

"ஏன் தான் இந்த திங்கட்கிழமை வருதோ.. டைரக்டா செவ்வாய் கிழமை வரக்கூடாதா.."

"செவ்வாய் கிழமையும் வேலைக்கு போகணும்.."

"ஆமா ல்ல.. அப்ப.. "என சாரு தன் அடுத்த யோசனையை சொல்லத் தொடங்கும் முன்னர்..

"உலகத்துலே யாருக்கும் தோணாத ஐடியா லாம் உனக்கு தோணும்.. அதையெல்லாம் கேட்க எனக்கு நேரமில்லை.. நான் கிளம்புறேன்.. bye.."என மித்ரா கிளம்பினாள்.

"மித்து நீ சாப்டீயா.."என சாரு கேட்டாள்.

"இனிமே தான்.. சாப்பிட்டு அப்டியே கிளம்புறேன்.."என சாருவிடம் சொல்லிவிட்டு மித்ரா அங்கிருந்து கிளம்பினாள்.

மித்ரா தான் வேலை பார்க்கும் கவின் event management கம்பெனியின் அலுவலகத்திற்கு வந்து சேர்ந்தாள்.

அலுவலகத்தின் பதிவேட்டில் மித்ராவின் கையெழுத்தை வாங்குவதற்காக மஞ்சு பதிவேட்டை நீட்டினாள்.

"மித்ரா.. நீ இந்த ரகசியத்தை எனக்கு இன்னைக்கு சொல்லியே ஆகணும்.."னு மஞ்சு சொல்ல மித்ரா என்னனு புரியாம திருதிருனு முழிச்சபடி மஞ்சுவை பார்த்தாள்.

"நீ மட்டும் எப்டி சிம்பிளா இவ்ளோ அழகா இருக்க.."என மித்ராவின் கன்னத்தை கிள்ள.. மித்ரா மெலிதாக புன்னகைத்தாள்.

"என்னைப் பாரு.. வீட்டில போட்ட மேக்கப் இங்க வர்றதுக்குள்ள கலைஞ்சிடுச்சு.."என சோகமாக சொன்னாள் மஞ்சு.

"மஞ்சு.. உன்கிட்ட எனக்கு ரொம்ப பிடிச்சது என்ன தெரியுமா.."என மித்ரா சொல்ல.. மஞ்சு ஆர்வமாக.. "இந்த earrings தான.."என கேட்டாள்.

மித்ரா இல்லையென தலையாட்டினாள்.

"நேத்து தான் வாங்குனேன்.. அது இல்லையா.. அப்ப வேற என்ன பிடிச்சிருக்கு.. ஆங்.. இந்த டாப் தான.. இதில இந்த பூ டிசைன் சூப்பரா இருக்குல்ல.."என மஞ்சு ஏதோ பேசிக் கொண்டிருக்க.. மித்ரா சிரித்தாள்.

"எனக்கு உன்கிட்ட பிடிச்சதே உன்னோட க்யூட் ஸ்மைல் தான்.."என மித்ரா மஞ்சுவிடம் சொல்ல.. மஞ்சு சந்தோஷமாக சிரித்தாள்.

கம்பெனியின் எம்.டி கவின் அந்த நேரத்தில் அலுவலகத்திற்குள் நுழைந்தான்.

"குட்மார்னிங் சார்.."என மித்ரா சொல்ல.. கவினும் பதிலுக்கு தலையசைத்தான்.

"மித்ரா ஒரு 5 மினிட்ஸ் கழிச்சு ரூமுக்கு வாங்க.."என கவின் மித்ராவிடம் சொல்ல.. மித்ரா.. "sure sir.."என பதிலளித்தாள்.

சிறிது நேரத்திற்கு பின்.. கவினின் அறையில்..

"மித்ரா.. இந்த week oda works எல்லாம் இந்த fileல இருக்கு.."

"ஓகே சார்.."என்றபடி அந்த fileஐ பெற்றுக் கொண்டாள் மித்ரா.

மித்ரா அந்த அறையிலிருந்து வெளியே செல்ல எத்தனிக்க.. "மித்ரா.. இந்த weekend.."என கவின் இழுக்க..

"எதும் முக்கியமான வேலை இருக்கா சார்.. இருந்தா சொல்லுங்க.. நான் முன்னாடியே முடிச்சிடுறேன்.. ஊருக்கு போகணும்.."

"ஓ.. ஓகே.. நான் சும்மா தான் கேட்டேன்.. நீங்க போங்க.."என கவின் சொல்லவும் மித்ரா அந்த அறையிலிருந்து வெளியேறி தன் வேலையை பார்க்கலானாள்.

மித்ரா சென்ற சிறிது நேரத்திற்குள் கவினின் நண்பனும் அலுவலகத்தின் முக்கிய பொறுப்பில் இருக்கும் முரளி வந்தான்.

"கவின்.. இன்னைக்காவது மித்ரா கிட்ட சொன்னீயா.."என கேட்டான்.

இல்லையென புன்னகையோடு தலையாட்டினான் கவின்.

"எப்பதான்டா சொல்லுவ.."

"சொல்லிக்கலாம்.. மித்ரா எப்ப accept பண்ணிக்க தயாரா இருக்காளோ அப்ப.."

"சீக்கிரமா சொல்லு.. இல்லைனா நீ சொல்ல நினைக்கிறத வேற யாராவது சொல்லிடப் போறாங்க.."என நக்கலாக முரளி சொன்னான்.

கவின் அவனை முறைத்தபடி.. "அப்டிலாம் எதுவும் நடக்காது.. i know about மித்ரா.."என பதிலளித்தான்.

## Dear Readers எப்டி இருக்குன்னு comments சொல்லுங்க please.. ❤❤

தொடுவானம்Where stories live. Discover now