❤ 29 ❤

5.9K 239 59
                                    

ஆதி தன்னை புன்னகையோடு பார்த்துக் கொண்டிருக்க.. மித்ரா தலையை குனிந்தபடி நின்றிருந்தாள்.

"மித்ரா.. இங்க என்ன பண்ற.."என ஆதி கேட்டான்.

"நா.. நான்.. அதுவந்து.."என மித்ரா தடுமாறிக் கொண்டிருக்க.. ஆதியிடம் பேசுவதற்காக அங்கே கவின் வந்தான்.

"ஹலோ சார்.. நாங்க இன்னைக்கே வொர்க் ஸ்டார்ட் பண்றோம்.."என்றான் கவின்.

மித்ராவை பார்த்தபடியே.. சரியென தலையசைத்தான் ஆதி..

மித்ரா ஆதியை பார்க்கவில்லை எனினும் ஆதியின் பார்வை தன் மேல் இருப்பதை உணர்ந்தாள்.

என்ன நடக்கிறது இங்க.. என்பது போல் கௌதமும் யாழினியும் அவர்களை பார்த்துக் கொண்டிருந்தனர்.

கவின் அங்கிருந்து நகர.. "கவின் ஒரு நிமிஷம்.."என்றான் ஆதி.

"இந்த வொர்க்.. மித்ரா பார்க்க வேண்டாம்.. வேற யாரையாவது பார்க்க சொல்லுங்க.."என ஆதி சொல்ல மித்ராவும் பதில் எதுவும் பேசாமல் தரையையே பார்த்தபடி நின்றிருந்தாள்.

"மித்ராவோட resignation letter நாளைக்கே உங்களுக்கு வரும்.. அத அக்சப்ட் பண்ணிக்கோங்க.."என ஆதி சொல்ல கவினும் மித்ராவை பார்த்தான்.

மித்ரா ஆதியை அதிர்ச்சியுடன்.. நிமிர்ந்து பார்த்தாள்.. "நா.. நான்.. எதுக்கு resign பண்ணனும்.."என தடுமாறியபடி ஆதியிடம் கேட்டாள்.

அதற்கு ஆதி.. "ஆதி group of companies MD ஆதியோட wife.. கவின் eventsல வேலை பார்க்கணும்னு அவசியம் இல்லை.. விருப்பப்பட்டா சொந்தமாவே கம்பெனி ஆரம்பிக்கலாம் மிஸஸ். ஆதி"என்றான்.

கௌதமும் யாழினியும் விழிகள் விரிய ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டனர். மீண்டும் மித்ராவையும் ஆதியையும் பார்த்தனர்.

"நா.. நான் ஒன்னும்.."என மித்ரா தடுமாற.. ஆதி மித்ராவின் கையை பிடித்து.. மோதிரத்தை அவள் கண்கள் முன்னால் நீட்டினான்.

மித்ரா பதற்றத்தில்.. "இதான் இப்ப உங்க பிரச்சனையா.."என கேட்க.. ஆதி மெலிதாக புன்னகைத்தான்.

தொடுவானம்Where stories live. Discover now