💕 04 💕

5.8K 263 42
                                    

தன் பெயரை சொல்லி அறிமுகம் செய்து கொண்ட பிறகும் உமா என்ன யோசிக்கிறாள் என புரியாமல் குழப்பத்துடன் அவளை பார்த்தான் ரஞ்சன்.

முதலில் பெயரை சொன்னதும் தெரிந்து கொள்ளும் அளவு இவன் பெரிய ஆளா என அலட்சியமாக நினைத்த உமா.. ஒருவேளை தன் வகுப்பு மாணவர்கள் யாருடைய அப்பாவாக இருக்குமோ என யோசித்தாள்.

எவ்வளவு யோசித்தும் நினைவு வர மறுத்தது. பின் நினைவு வந்தவள் போல.. “ஆங்.. நீங்க.. ஆகாஷோட சித்தப்பா தான.. ஸ்கூல்ல உங்க பொண்ணை சேர்க்கணும்னு விசாரிச்சீங்கல்ல..” என கேட்டாள் உமா.

ரஞ்சன் தன் சிரிப்பை கட்டுப்படுத்த முயற்சிப்பதிலே தான் கேட்டது தவறு என புரிந்து விட்டது உமாவுக்கு. அவர் பேர் ரஞ்சித் இல்ல என மனதில் நினைத்தபடி பாவமாக ரஞ்சனை பார்த்தாள் உமா.

ரஞ்சன் தான் யார் என சொல்வான் என எண்ணி உமா அவனை பார்த்தால்.. ரஞ்சனோ இதழ்களில் குறுநகையுடன் அவளை பார்த்தபடி நின்றிருந்தான்.

“யார் என்னனு சொல்லாம சிரிச்சிட்டு இருக்கான்.. லூசு..” என மனதுக்குள் ரஞ்சனை திட்டிய உமா.. அவனிடம் மேலும் பேச்சை தொடரும் முன்.. அவள் அலைபேசி இடைஞ்சல் செய்தது.

பிரபா தான் அழைத்தான். இவனிடம் பேசி முடித்துவிட்டு.. போனை அட்டெண் பண்ணலாம் என உமா ரஞ்சனிடம் ஏதோ கேட்கத் தொடங்கும் முன்.. “பேசுங்க.. நான் யாருன்னு நாளைக்கு தெரிஞ்சுக்கலாம்..” என சொல்லிவிட்டு அங்கிருந்து நகர்ந்தான்.

சில நொடிகள் எதுவும் புரியாமல் நின்றிருந்த உமா.. போனை அட்டெண் பண்ணி பிரபாவிடம் பேசினாள்.

“என்ன ண்ணா..” என உமா கேட்டாள்.

“ஸ்கூல் முடிஞ்சதும் நீ அங்கே வெயிட் பண்ணுடா.. நகைகடைக்கு போகணும்.. நான் வந்து உன்னை கூட்டிட்டுப் போறேன்..” என்றான் பிரபா.

“ஆம்.. சரி ண்ணா..” என்ற உமா போனை வைத்துவிட்டு தன் வேலையை பார்க்கலானாள்.

மனதின் ஓரத்தில்.. ரஞ்சன் இந்த பெயரை எங்கே கேட்டிருக்கிறேன்.. என யோசித்துக் கொண்டிருந்தாள் உமா. அவன் முகம் கூட எங்கோ பார்த்தது போல தான் இருக்கிறது.. எங்கே என தான் தெரியவில்லை.. என உமாவின் எண்ணங்கள் அலைந்து கொண்டிருந்தது.

உள்ளங்கவர்ந்த கள்வனவன்..Where stories live. Discover now