💕 09 💕

5.1K 262 27
                                    

வீட்டில் தன் அறையில் அடுக்கப்பட்டிருந்த பெட்டிகளில் இருந்தவற்றை வாசிக்க தொடங்கினான் ரஞ்சன்.

பெட்டிகளில் எந்த வகுப்பு என ஏற்கனவே குறிப்பிடப்பட்டிருந்தது. முதலில் சின்னக் குழந்தைகள் எழுதியிருந்ததை தான் வாசித்தான் ரஞ்சன்.

வார்த்தைகளில் சொல்ல தெரியாததை படம் வரைந்து குழந்தைகள் குறிப்பிட்டிருக்க.. சிரித்தபடி அதையும் கவனத்தில் எடுத்துக் கொண்டான் ரஞ்சன்.

வாசித்தது மட்டுமல்லாது.. ஒவ்வொரு ஆசிரியையின் நிறை குறைகளை குறித்துக் கொண்டான் ரஞ்சன்.

முதலில் ரஞ்சன் இதை ஏதோ பொழுதுபோக்காக செய்வது போல கூட சிலருக்கு தோன்றியது. அதையெல்லாம் உட்கார்ந்து வாசித்து அவன் எதை மாற்றப் போகிறான் என கூட பேச்சு வந்தது.

வெள்ளிக்கிழமை சாயந்திரம் வகுப்புகள் முடிந்ததும் மீட்டிங் என சர்க்குலர் வந்தபோது கூட.. அதில் ஏதோ ஒன்றிரண்டை வாசித்து விட்டு.. அது குறித்து ரஞ்சன் பேசுவான் என தான் பலரும் நினைத்தனர். ஆனால் ரஞ்சன் அதிலிருந்த எல்லாவற்றையும் வாசித்துவிட்டான் என்பதை அவர்கள் அறியவில்லை.

மீட்டிங்கிற்கு எல்லோரும் கூடினர். ரஞ்சனின் முன் இருந்த டேபிளில் இரு பிரிவுகளாக சில கவர்கள் வைக்கப்பட்டிருந்தது. கவரின் மேல் ஆசிரியர்களின் பெயர்கள் எழுதப்பட்டிருந்தது.

ஒரு கவரை கையில் எடுத்துக் கொண்ட ரஞ்சன்.. “வழ வழனு இழுக்காம டைரக்ட்டா விஷயத்துக்கு வர்றேன்..” என்றவாறு மேசையின் மேல் சாய்ந்தபடி நின்று கொண்டான்.

“நான் ஸ்டூடண்ட்ஸ் எழுதின எல்லாத்தையும் வாசிச்சிட்டேன்.. நான் கவனிச்சத விட தெளிவா ஸ்டூடண்ட்ஸ் உங்க எல்லாரையும் பத்தி எனக்கு சொல்லி இருக்காங்க..

அதைவச்சு.. உங்களோட நிறை குறைகள் இருக்கு இந்த ஒவ்வொரு கவர்லயும். இந்த செட் ஆப் கவர்ஸ் இருக்கிறவங்களுக்கு எந்த பிரச்சனையும் இல்லை.. அவங்க தங்களோட ஒர்க்க பெர்பெக்டா பண்றாங்க..” என ஒருபுறமிருந்த கவர்களை காட்டி சொன்னான் ரஞ்சன்.

உள்ளங்கவர்ந்த கள்வனவன்..Where stories live. Discover now