💕 11 💕

5.2K 256 38
                                    

ஏற்கனவே சில விஷயங்களை மனதில் போட்டு குழப்பிக் கொண்டிருந்த உமா.. தன் அத்தை பேச்சை கேட்டதும்.. இதுபோல தானே எல்லோரும் எண்ணுவர் என தவித்தாள்.

ரஞ்சனோ அவன் குடும்பத்தினரோ அப்படி எண்ணவில்லை என்பது குழப்பமான மனநிலையில் இருந்த உமாவுக்கு புரியவில்லை.

இதை ரஞ்சனிடம் எப்படி பேசி தெளிவுபடுத்திக் கொள்வது என்பதெல்லாம் தெரியவில்லை உமாவுக்கு. ஆனால் ரஞ்சன் மனதில் அப்படி ஒரு எண்ணம் இருந்தால் இந்த கல்யாணம் நடக்காது என மட்டும் தீவிரமாக முடிவெடுத்தாள் உமா.

அடுத்த நாள் வழக்கம் போலவே பள்ளிக்கு சென்றாள் உமா. அவள் விழிகள் ரஞ்சனை தேடியது. ரஞ்சன் எங்குமே கண்ணில் படவில்லை.

ரஞ்சன் வந்ததும் அவனிடம் பேச வேண்டும் என மட்டும் எண்ணிக் கொண்டிருந்தாள்.. என்ன பேச வேண்டும் என்ற தெளிவு துளிகூட அவளுக்கு இல்லை. அதை புரிந்து கொள்ளும் மனநிலையிலும் அவள் இல்லை.

ரஞ்சனை சந்திக்க வேண்டும் என எண்ணிக் கொண்டிருந்த உமாவின் எண்ணத்தை நிறைவேற்றும் வண்ணம் ரஞ்சனே அழைத்தான்.

மனதில் ஏதோ பெரும் பாரத்தோடு ரஞ்சனின் அறைக்கு சென்ற உமாவுக்கு.. ரஞ்சனின் முகத்தை பார்த்ததும் என்ன பேச வேண்டும்.. என்பதே மறந்து போனது. அதற்கு முன் என்னமோ தெளிவாக நினைவிருந்தது போல.. என்ன பேசுவது.. எப்படி பேசுவது.. என புரியாமல் விழித்துக் கொண்டிருந்தாள் உமா.

ரஞ்சனும் பேச்சை தொடங்காமல்.. எப்படி தொடங்குவது என புரியாமல் தவித்துக் கொண்டிருந்தான்.

“என்ன பேசுறது.. எப்டி பேசுறதுனே புரியலை உமா எனக்கு.. நான் இப்டிலாம் இருந்ததே இல்லை..” என்றான் ரஞ்சன் இருவருக்கும் இடையில் இருந்த மௌனத்தை கலைத்து. அதே தவிப்புடன் உமா ரஞ்சனை பார்த்தாள்.

“கல்யாண பேச்சு வரும்ன்றது நான் எதிர்பார்த்தது தான்.. ஆனா இவ்ளோ சீக்கிரம்.. அதுவும் கிட்டத்தட்ட முடிவு பண்ற அளவுக்கு போவாங்கனு நான் நினைக்கலை..” என ரஞ்சன் சொன்னான்.

உள்ளங்கவர்ந்த கள்வனவன்..Where stories live. Discover now