💕 12 💕

5.2K 267 51
                                    

உமாவின் கன்னங்களில் கரம் வைத்து.. அவள் கண்களை பார்த்து.. "என்னை கல்யாணம் பண்ணிக்க உனக்கு சம்மதமா உமா.. சொல்லு.." என தவிப்புடன் கேட்டான் ரஞ்சன்.

"ச.. சம்மதம்.." என உமா சொல்ல.. அவளை இறுக்கமாக அணைத்துக் கொண்டான் ரஞ்சன்.

"ரொம்ப தேங்க்ஸ் உமா.. எங்க வேண்டாம்னு சொல்லிடுவியோனு எவ்ளோ தவிச்சேன் தெரியுமா.." என கண்களை மூடியபடி ரஞ்சன் பேசினான்.

ரஞ்சன் ஏன் தவித்தான் என்பதை அவனும் யோசிக்கவில்லை.. உமாவுக்கும் யோசிக்க தோணவில்லை.

முதல் அணைப்பு.. இது கனவில்லையே.. என்ற தவிப்புடன் அந்த நிமிடத்தை தன் மனதுக்குள் பத்திரப்படுத்திக் கொண்டிருந்தாள் உமா.

தன் செய்கைக்கான காரணம் ரஞ்சனுக்கு புரியவில்லை. மற்ற விஷயங்களை தெளிவாக யோசித்து புரிந்து கொள்ளும் ரஞ்சனுக்கு தன் மனதை புரிந்து கொள்ள தெரியவில்லை.

கல்யாண பேச்சு வெறுமனே பேச்சாக நின்றுவிடாமல்.. தேதி குறிப்பது வரை எல்லா வேலைகளும் விரைவாக நடைபெற தொடங்கியது.

பத்து நாட்களில் நிச்சயதார்த்தமும் அதற்கடுத்த வாரம் திருமண தேதியும் குறித்தனர்.

முதலில் அவ்வளவு சீக்கிரமாக எல்லா ஏற்பாடுகளையும் எப்படி நடத்துவது என திகைத்தனர் பிரபாவும் சுசீலாவும்.

ஆனால் அவர்களுக்கு எந்த சிரமமும் இல்லாத வகையில் ரஞ்சன் குடும்பத்தினர் எல்லாவற்றையும் பார்த்துக் கொண்டனர்.

அம்மா அண்ணனின் முகத்தில் இருந்த மகிழ்ச்சியை காணும் போதெல்லாம்.. "அவர்களுக்கு தானே இது திருமணம்.. அவனுக்கு அப்படி இல்லையே.. ப்ரெண்ட்ஸ்.. ஊரை கூட்டி கல்யாணம் பண்ணிக்கிட்டு வெறும் ப்ரெண்ட்ஸ்.." என தனக்குள்ளே பேசி தவித்துக் கொண்டிருந்தாள் உமா.

என்னதான் தங்கையின் திருமண வேலைகளை மகிழ்ச்சியாக பார்த்துக் கொண்டிருந்தாலும்.. உமா எதையோ எண்ணி முகம் வாடி இருப்பதை கவனித்தான் பிரபா.

உள்ளங்கவர்ந்த கள்வனவன்..Where stories live. Discover now