😘

9.1K 242 47
                                    

“உங்க அத்தை.. பேசுறது வச்சு பார்த்தா.. நம்ம கல்யாணம் நடந்ததுல பொறாமை படுறாங்களோனு தோணுச்சு..

இவ்ளோ நாள் கழிச்சே அதெல்லாம் மனசுல வச்சிட்டு இருக்காங்கன்னா.. அந்த டைம்லயும் உன்கிட்ட அப்டித்தான் நடந்துக்கிட்டாங்களா..” என ரஞ்சன் கேட்க திகைப்புடன் விழித்தாள் உமா.

ரஞ்சனின் இந்த கேள்வியை எதிர்பார்த்திராத உமா சொல்வதறியாது விழித்தாள். அவள் பார்வையில் இருந்தே.. தான் கேட்டது போல் ஏதோ நடந்திருக்கிறது என்பதை புரிந்து கொண்டான் ரஞ்சன்.

ரஞ்சனின் அணைப்பில் இருந்து விலகி எழுந்து அமர்ந்தாள் உமா. ரஞ்சனும் எழுந்து அமர்ந்து உமாவின் முகத்தை பார்த்தான்.

தலையை குனிந்தபடி.. தன் அத்தை பேசியதை எல்லாம் எப்படி சொல்வது.. வேண்டாம்.. சொல்ல வேண்டாம்.. என தனக்குள்ளே எண்ணமிட்டுக் கொண்டிருந்தாள் உமா.

உமாவின் முகத்தை நிமிர்த்தி தன்னை பார்க்கும் படி செய்த ரஞ்சன்.. “சொல்லு உமா..” என கனிவுடன் கேட்டான்.

“அவன் வெளிநாட்டில இருந்து வந்தே கொஞ்ச நாள் தான் ஆகுதாம்.. அதுக்குள்ள அவனை மயக்கி.. அவங்க வீட்டில இருந்தே பொண்ணு கேட்டு வர வச்சிட்டா பாரேன்..

ஆமா அமைதியான பொண்ணு.. ஊமை ஊரை கெடுக்கும்.. நானே அன்னைக்கு பார்த்தேனே.. கடையில அவன்கிட்ட இழிச்சு இழிச்சு பேசுறத.. பள்ளிக்கூடத்துல எப்டிலாம் நடந்துக்கிட்டாளோ.. வசதியான ஒருத்தனை பார்த்துட்டா போதுமே..” தன் அத்தை பேசிய வார்த்தைகளை இப்போது நினைத்தாலும் உடலெல்லாம் கூசியது உமாவுக்கு.

“அ.. அது..” என தொடங்கிய உமாவால் அதற்கு மேல் எதையும் சொல்ல முடியவில்லை.

“உமா.. என்கிட்ட சொல்றதுக்கு என்ன தயக்கம்.. எதையும் மனசுல வச்சுக்காம சொல்லிடு..” என்றான் ரஞ்சன்.

ரஞ்சனின் கனிவான குரலில் எல்லாவற்றையும் சொல்லிட மனம் துடித்தாலும்.. அதை நினைக்கையிலே கண்ணீர் வழிந்தது உமாவுக்கு.

உள்ளங்கவர்ந்த கள்வனவன்..Where stories live. Discover now